Karunanidhi attacks Marxist communist party | தி.மு.க., மீது எரிச்சலை கக்குவது என்றால் இனிக்கிறது: கருணாநிதி காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மீது எரிச்சலை கக்குவது என்றால் இனிக்கிறது: கருணாநிதி காட்டம்

Updated : ஜூலை 09, 2012 | Added : ஜூலை 08, 2012 | கருத்துகள் (46)
Advertisement

சென்னை: ""தி.மு.க., மீது எரிச்சலைக் கக்குவது என்றால், எப்படித் தான் இனிக்குமோ தெரியவில்லை. தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என்றதும், சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கவில்லை,'' என, மார்க்சிஸ்டுகளை, கருணாநிதி தாக்கியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றில், "மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டபோது, வெறும் அறிக்கை மட்டுமே விட்டும், பெயரளவில் ஆர்ப்பாட்டம் நடத்திய, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்து, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிருப்தி: இந்த கட்டுரையால் அதிருப்தியடைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, "உடன்பிறப்பு'களுக்கு எழுதிய கடிதத்தில், கூறியிருப்பதாவது: "என்ன காரணத்தாலோ, தி.மு.க., என்றால், ராமகிருஷ்ணனுக்கு பிடிக்காது. தி.மு.க., ஆளுங்கட்சியாக இல்லை. ஆளும் கட்சியை குறை சொல்வதை விட, தி.மு.க., மீது எரிச்சலைக் கக்குவது என்றால், எப்படித்தான் இனிக்குமோ தெரியவில்லை.

மனம் நொந்து...: கட்டுரையில் முதல் பகுதியில், தி.மு.க., மீது எந்த அளவுக்கு வெறுப்பைக் கக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு கக்கிவிட்டு, இரண்டாவது பகுதியில், அ.தி.மு.க., பற்றி வேண்டா வெறுப்பாக, அவர்களைப் பற்றியும் எழுத வேண்டியுள்ளதே என, மனம் நொந்து எழுதியுள்ளார். மக்கள் பிரச்னைக்காக கவலைப்படாமல், கட்சி முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என்றதும், அதற்காக மட்டும் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கவில்லை. தி.மு.க., மீது, தற்போது தான், பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், வராததுமாக, கைது நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ஓராண்டு காலமாக, வரிசையாக பலர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த பிறகும், மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது தொடர்ந்ததால், வேறு வழியின்றி, பழிவாங்கும் போக்கை கண்டித்தும், மக்கள் பிரச்னைகளை இணைத்தும், செயற்குழு கூடி, சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை, ராமகிருஷ்ணன் மறைத்துவிட்டு, அறிக்கை விட்டிருப்பது சரிதானா என்பதை, அந்த கட்சியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். மொத்த நில அபகரிப்பு வழக்குகள் 703ல், அ.தி.மு.க.,வினர் மீது, 42 வழக்கு தான் போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதிலிருந்தே, தி.மு.க.,வினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கை தெரிகிறது. தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்னை சந்தித்து, சிறுதாவூரில் நில ஆக்கிரமிப்பு பற்றி புகார் கொடுத்தனர். விசாரணை கமிஷன் அமைத்து, அறிக்கையும் வந்துள்ளது. இதன் மீது, அ.தி.மு.க., நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி, மவுனமாக இருக்கின்றனர். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-201210:24:56 IST Report Abuse
Hari அய்யா கலைஞஎர் அவர்களே, நீங்கள் தான் சட்டப்படி எல்லாத்தையும் சந்தீபிர்களே, அப்புறம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
dinesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-201210:11:36 IST Report Abuse
dinesh மக்கள் பிரச்சனைக்காக சிறை செல்லவில்லை என்று தமிழகத்திற்கே தெரியும் எதற்கு இந்த விளக்கம் என்னதான் விளக்கம் சொன்னாலும் இனி யாரும் நண்பமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Imsai Arasan - Bedok,சிங்கப்பூர்
09-ஜூலை-201210:06:07 IST Report Abuse
Imsai Arasan சும்மா புலம்பறத நிறுத்து தல..........யாருமே உன்னை எதிர்த்து கருத்து சொல்லாம இருக்க அவங்கல்லாம் என்ன வீரமணியா?இல்லை திருமா வளவனா?நீ எதுக்காக போராட்டம் பொதுக் கூட்டமெல்லாம் நடத்துறேன்னு எல்.கே.ஜி படிக்கிற பையனுக்கு கூட தெரியும் தல.....
Rate this:
Share this comment
Cancel
Jeyachandran - Chennai,இந்தியா
09-ஜூலை-201209:54:11 IST Report Abuse
Jeyachandran கம்யூனிஸ்ட் கட்சிகளின் அறிக்கைகளை யார் காது கொடுத்து கேட்க்கிறார்கள் ....... அவர்கள் எதற்க்காக கட்சி நடத்துகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது .........
Rate this:
Share this comment
Cancel
v. sundaramoorthy - Ariyalur,இந்தியா
09-ஜூலை-201209:50:37 IST Report Abuse
v. sundaramoorthy அட என்ன தாத்தா இதுக்கெல்லாம் பெரிதாக அறிக்கைவிடுகிரீர்கள்? உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழனும் சேர்ந்து திட்டினபோது கூட நீங்கள் கொஞ்சமும் ரோஷம் இல்லாமல் இருந்தீர்ர்கள் இப்போது பெரிதாக படம் காண்பிக்கிறீர்களே இந்த ரோஷத்தை ஊழல்செய்வதை நிறுத்துவதிலும் ஊழல் செய்தவர்களை ஜெயிலுக்கு அனுப்பி தண்டனை தருவதிலும் காட்டுங்கள். திருடியதுக்காக வருத்தபடாமல் திட்டியவனை குறை சொல்லும் அருமையான மனிதர் நீங்கள் மட்டும்தான்.
Rate this:
Share this comment
Cancel
Murugadoss - Vengaalore,இந்தியா
09-ஜூலை-201209:44:29 IST Report Abuse
Murugadoss தினமும் ஒரு அறிக்கை விடவேண்டும்னு யாரோ ஒரு சோதிடன் சொல்லியிருக்கான். அதனால இன்னிக்கி இப்படி ஒரு அறிக்கை நாளை, கேள்வி பதில்னு ஒரு அறிக்கை வரும் கேவலமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
09-ஜூலை-201209:00:35 IST Report Abuse
Mohd. Rias ஆட்சியில் இருந்த போது, 2 -G ஊழல், பொது மக்களின் நில அபகரிப்பு என்று விஷம் கக்கிய தி.மு.காவின் மீது யாரும் எரிச்சலை கக்குவது இயல்பே. நமது நாட்டில் திருடு , கொள்ளைகள் குறைந்து ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால் உடனடியாக தி.மு.க கட்சியை தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
09-ஜூலை-201208:47:55 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ராமன் மற்றும் கிருஷ்ணனை திரு.கருணாநிதிக்கு பிடிக்காதது ஒன்றும் பெரிய காரியம் இல்லை...அது எல்லாருக்கும் தெரிந்த செய்திதானே.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-ஜூலை-201208:00:36 IST Report Abuse
villupuram jeevithan ஒன்னரை ஆண்டுகளாக பாராட்டு விழா எதுவும் காணாத இந்த தலைவர் இப்படி தான் பேசுவார். பாவம், ஒரு விழா நடத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201208:00:20 IST Report Abuse
Kankatharan  முடி வளர்ந்தால் அதை வெட்டி சரிசெய்ய சலூனுக்கு போவணும், .............உடம்பில் நோய் இருந்தால் அத்த சரிக்கட்ட வைத்தியர்கிட்ட போவணும், .............பாடம் சரியா வரலைன்னா ரியூஷனுக்கு போவணும், .................வயசு போச்சுன்னா ரிட்டயர் மெண்டுக்கு போவணும், .....................பொழுது போவல்லைன்னா சினிமாவுக்கு போவனும்............... "ஞாயம் வேணுமுன்னா சட்டத்துக்கிட்டத்தானே போவனும்" ...............தாத்தா இவ்வ்ளோ அனுபவமுள்ள நீங்க தப்பு செய்யலாங்களா,............ ராசாவ அடைச்சப்போ சூரியன் ன்னீங்க,........... சரத் ரெட்டிய அடைச்சப்போ தப்பு செஞ்சுட்டு கம்பி எண்ணுரார் ன்னீங்க,........கனிமொழி மாமி மாட்டினப்போ சத்திய சோதனை ன்னீங்க ஜெத்மலானிய துணைக்களைச்சீங்க ...... தியாக திருவிளக்கின் காலில் வுழுந்தீங்க ...... வீரபாண்டிக்கு மட்டும் சிறை நிரப்பு போராட்டமுன்னு வெறுப்பேத்துறது நல்லாவா இருக்கு?,........நீங்க மாத்தி செஞ்சா கம்பிரேட்டுக்கள் மட்டுமில்லீங்க காட்டு மிராண்டியும் கேக்கத்தான் செய்வான், சரி தாத்தா உங்களுக்கும் வாணாம் எனக்கும் வாணாம் வீரபாண்டியாரை திருட்டுப்பய ன்னு குண்டாஷில போட்டிருக்கானுவளே அது தப்புன்னு சொல்ல்றீங்களா,,,,,,,,,,,,,,.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை