பெங்களூரு: சதானந்த கவுடா, தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம், பதவிக் காலத்தை முழுமையாக முடிக்காத, ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த முதல்வர்கள் பட்டியலில், இவரும் சேர்ந்துள்ளார்.
கர்நாடகாவில், கடந்த 1956ம் ஆண்டுக்குப் பின், ஒக்கலிக சமுதாயத்திலிருந்து முதல்வராக வந்தவர்கள் யாரும், தங்களது ஐந்து ஆண்டு கால பதவிக்காலத்தை, முழுமையாக முடிக்கவில்லை. கர்நாடக மாநில தலைமைச் செயலகமான விதான் சவுதா கட்டடத்தை கட்ட காரணமாக இருந்த, மைசூர் மாகாண முதல்வராக இருந்த ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்த ஹனுமந்தய்யா, 1952 மார்ச் 30 முதல் 1956 ஆகஸ்ட் 19ம் தேதி வரை, முதல்வராக இருந்தார். 1956ல், ஒருங்கிணைந்த கர்நாடக மாநிலம் ஆகும் முன், இவர் பதவி விலக நேரிட்டது. இருந்தாலும், பின், தேசிய அரசியலுக்கு சென்று, பெங்களூரு எம்.பி.,யாக, 1962 முதல் 1977 வரை இருந்தார். இதன்பின், முதல்வரான ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்த கடிடால் மஞ்சப்பா, பழைய மைசூர் மாகாண முதல்வராக, 1956 ஆகஸ்ட் 19 முதல் 1956 அக்டோர் 31 வரை, பதவி வகித்தார். இவர், தானாக முன்வந்து, பதவி விலகினார்.
கர்நாடக மாநிலத்தின், 14வது முதல்வராக பதவியேற்ற தேவகவுடா, 1994 முதல் 1996 வரை முதல்வராக பதவி வகித்தார். அப்போது, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்த அமைப்பான ஐக்கிய முன்னணி, மத்தியில் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, நாட்டின் 11வது பிரதமராக பதவியேற்க, இவர், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரும், ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதே போல், இதே சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, 1999 முதல் 2004 வரை, முதல்வராக பதவி வகித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி, முன்னரே தேர்தலை நடத்த வேண்டும் என விரும்பியதால், இவரால், தன் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை, முழுமையாக முடிக்கவில்லை. இதன்பின், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அரசின் முதல்வராக, தேவகவுடாவின் மகன் குமாரசாமி, 2006 பிப்ரவரி 4ம் தேதி முதல் 2007 அக்டோபர் 20 வரை பதவி வகித்தார். இவரது அரசுக்கு ஆதரவு அளித்த பா.ஜ., கட்சி, ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, 20 மாதங்களில், இவரது அரசு கவிழ்ந்தது.
கர்நாடக மாநிலத்தின், 26வது முதல்வராக, 2011 ஆகஸ்ட் 4ம் தேதி பதவியேற்ற சதானந்த கவுடா, நேற்று பதவி விலகினார். பா.ஜ., உட்கட்சி பூசல் காரணமாக, ஒக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்த இவர், பதவி விலக நேரிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
யோவ் தங்கை ராஜா, எதுக்கு எத பேசறதுன்னே தெரியலியா உனக்கு? கலைஞர் ஐந்து ஆண்டுகளும் முழுசா அனுபவிச்ச்ட்டு, மக்களுடைய வெறுப்பால தூக்கி எரியபட்டவர். அனால் கர்நாடகாவில் அப்படியா? சொந்த கட்சி காரங்களே தூக்கி எரியரங்கையா. மைனாரிட்டியாக இருந்ததும் அவருடைய ஆட்சியை யாரும் தூக்கி எரியவில்லை. அவருக்கு அவரே தான் வெட்டு வைத்துகொண்டார் என்பது ஆரசியலை உன்னிப்பாக கவனித்துவரும் அனைவரும் அறிந்தா உண்மை. இங்கே பொய் பெற்படுத்த பட்டவர் முற்படுட்டபட்டவர் நு கதை செயல்லிகிட்டிருந்தா இதையெல்லாம் யாரு நம்புவாங்க?...
ஜாதியின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகள் இந்தியன் என்ற உணர்வே இல்லமால் மதத்தாலும்,இனத்தாலும் பிரிக்கப்பட்டு இருப்பதால் ஒரு சில ஜாதிகள் மேல்தட்டிளிருந்துகொண்டு மக்களின் உரிமைகளை தனக்கு சாதகமாக்கிகொண்டு அரசியல் நடத்துகின்றனர் இதனால் ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரனாகவும் இருப்பது இந்தியாவில் மட்டும்தான் நடக்கும் இதைதான் தந்தை பெரியார் மனிதனை நினை கடவுளை மாற என்று முழக்கமிட்டார்கள் போலும் (இதிலே அவ்வாளின் சூழ்சிகள் அதிகம் இருப்பது இந்திய அரசியலில் தெளிவாக தெரிகிறது )...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.