திண்டிவனம்:சென்னையை தொடர்ந்து திண்டிவனத்திலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் முழுவதும் நகர ஜெ., பேரவை சார்பில், நேற்று முன்தினம் (8ம் தேதி), போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், "தனி ஒரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச் சாலைகள் தேவையில்லை?' என்ற, எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல் வாசகமாக இருந்தது. இதில் எம்.ஜி.ஆர்., படமும், ஜெ., படமும் அச்சிடப்பட்டிருந்தன.
இந்த வாசகத்திற்குக் கீழே, அமைச்சர் சண்முகம், மாவட்ட ஜெ., பேரவை செயலர் பாலசுந்தரம், நகர ஜெ.,பேரவை செயலரும், நகராட்சித் துணை தலைவருமான முகமது ஷெரீப் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.தி.மு.க.,வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய, ஜூலை 4ம் தேதிக்கு முன், இந்த வாசகங்களுடன் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால், திண்டிவனத்தில் தி.மு.க.,வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு ஒட்டப்பட்டிருப்பதால், எதற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.