டில்லிக்கான தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக, பள்ளிப்பட்டு நரசிம்மன் பொறுப்பேற்றுள்ளார்.திருவாரூர் அசோகனுக்கு பதிலாக, சமீபத்தில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டிருந்த நரசிம்மன், நேற்று டில்லியில் முறைப்படி, தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் ஜஸ்பீர் பஜாஜ், அதிகாரிகள், பணியாளர்கள் என, பலரும் கலந்து கொண்டனர். அத்துடன், நரசிம்மனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என, அ.தி.மு.க.,வினர் நிறைய பேரும் பங்கேற்று, சால்வைகள், மலர் மாலைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின், நிருபர்களிடம் பேசிய நரசிம்மன், "தமிழக அரசின் டில்லி பிரதிநிதி பதவியின் மூலம், என்னால் ஆன பணிகளை செய்வேன். என் மீது தமிழக முதல்வர் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், எனது செயல்பாடுகள் இருக்கும்' என்றார்.டில்லி பிரதிநிதி என்பது ஓராண்டு காலத்திற்குரியது. ஒவ்வொரு ஆண்டும் பதவி நீட்டிக்கப்படும் அல்லது புதியவர்கள் நியமிக்கப்படுவர். நரசிம்மனோ மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருக்கவுள்ளார். இவ்வாறு, மூன்று ஆண்டுகளுக்கும் தொடர்ந்து இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கும், முதல் நபர் நரசிம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.