Advertisement
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம்: கொள்முதல் செய்வதில் சிக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2012,00:02 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 11,2012,00:02 IST

கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு இன்னுமும் மடிக்கணினி வழங்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில், ஒரு மாதத்துக்கு மேலாகியும், அதற்கான கணக்கெடுப்புப் பணி கூட துவங்கவில்லை. இதனால், அனைத்து மாணவ, மாணவியருக்கும், மடிக்கணினி வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, 2011ல் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, "பள்ளி மாணவ, மாணவியர் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும்' என அறிவித்தார். அவர் முதல்வராக பதவி ஏற்றபின், ஒன்பது லட்சம் மடிக்கணினிகளுக்கு தயாரிப்பு ஆணையும் வழங்கினார். ஒரு மடிக்கணினிக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் நிதி ஒதுக்கீடும் முடிவு செய்யப்பட்டது.ஆனால் கடந்த ஆண்டு, தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கம்ப்யூட்டரின் முக்கிய பாகமான, "ஹார்ட் டிஸ்க்' உள்ளிட்டவற்றின் விலை, இரு மடங்காக அதிகரித்தது. இதனால், மடிக்கணினி தயாரிப்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. கல்வியாண்டு நிறைவடையும் தருணத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியரில், ஒரு சிலருக்கு மட்டும், பெயரளவுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.


அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறக்கும்முன், மே மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது, ஜூலை வந்துவிட்ட நிலையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மடிக்கணினி குறித்து, எவ்வித தகவலும் இல்லை.அமெரிக்கா டாலரின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களின் விலையில், கடும் உயர்வு காணப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும், 20 சதவிகிதத்துக்கும் மேல் கம்ப்யூட்டர் பொருட்களின் விலை உயர்வு இருப்பதால், 10 ஆயிரம் ரூபாய்க்குள், மடிக்கணினி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தற்போது, அடுத்த "செட்' மாணவ, மாணவியர் பிளஸ் 2 வந்து விட்டனர். இக்கல்வியாண்டில் ஒன்றரை மாதம் ஆகிவிட்ட நிலையில், கடந்த ஆண்டு மாணவ, மாணவியருக்கே மடிக்கணினி வழங்கப்படாதபோது, இவர்களுக்கு வழங்கப்படுமா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.


- நமது நிருபர் -





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (30)
Citizen - Blore,இந்தியா
10-ஜூலை-201217:28:33 IST Report Abuse
Citizen எங்கேப்பா அந்த சிங்கபூர் சேகரன்... வந்து பதில் சொல்லு ... சொம்பு அடிக்க வர சொல்லுங்க..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vamanan Nair - Dallas,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-201216:41:55 IST Report Abuse
Vamanan Nair புதிதாக கணினி யாரும் வாங்க வேண்டாம். குறஞ்ச விலையில மாணவர்களிடமிருந்து வாங்கலாமே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
10-ஜூலை-201216:16:46 IST Report Abuse
Pugal மடிக் கணினி விலை குறைந்துகொண்டே அல்லவா வருகிறது. விலை ஏறிவிட்டது என்று பீலா விடுகிறார்களே படிப்பு முடித்த மாணவர்களுக்கு இன்னும் வழங்கப் படவில்லையாம். நாமள்லாம் புத்தகம் வராமலே படிக்கிரவங்களாச்சே..கணினி இல்லாம படிக்க மாட்டோமா? இப்போ படித்து முடித்து (மேல் படிப்பிற்குப் போகாமல்) வேலைக்குப் போகும் போது மடிக் கணினி கிடைத்தால் என்ன செய்வது- கிடைக்கிற விலைக்கு விற்று விட வேண்டியது தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
10-ஜூலை-201215:35:02 IST Report Abuse
saravanan அமெரிக்கா டாலரின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களின் விலையில், கடும் உயர்வு காணப்படுகிறது.- அதனாலென்ன.........டாஸ்மாக்கோடா விற்பனையை கூட்டிட்டா போச்சி............ அப்படியில்லைன்னா, பசங்களுக்கும் விலையில்லா ஆடு, மாடு கொடுத்திடலாம்......... கைத்தொழில் ஒன்னு கத்துக்கினா மாதிரியாவது இருக்கும்...........மொத்தத்துல படிக்க மட்டும் விடக்கூடாது......அப்பத்தான் கழகங்கள் பொழைக்கும்........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
babu - CHENNAI,இந்தியா
10-ஜூலை-201212:50:48 IST Report Abuse
babu ch - 67 solavaram ஸ்கூல் - ல புது கலர் uniform compulsary காசு கொடுத்துதான் வாங்கனுமா ... அதாவது இலவசமா கொடுக்கிற uniform வருவதற்கு முன்னாலே ஸ்கூல் headmaster teachers ஒரு agency மூலமா commission பார்கிறார்கள்...... ஏழைகள் எப்படி படிப்பது.. ch - 67
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
syed razakh - Vellore,இந்தியா
10-ஜூலை-201211:19:14 IST Report Abuse
syed razakh அடிச்சாங்கையா ஜாக்பாட். 17 சதவிதம் மாணவர்கள் வாக்கு வங்கி. 2014 electionla திராவிட முன்னேற்ற கழகம் காலி. 2 அல்லது 5 சீட் கூட்டணி நன்றாக இருந்தால் கிடைக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-201211:17:10 IST Report Abuse
மதுரை விருமாண்டி "கடந்த ஆண்டை காட்டிலும், 20 சதவிகிதத்துக்கும் மேல் கம்ப்யூட்டர் பொருட்களின் விலை உயர்வு இருப்பதால்," - எந்த உலகத்தில் கணினி விலை ஏறி இருக்கிறது ?? மம்மியின் கமிஷன் ரேட்டு அதிகம் ஆயிருக்கு.. அதான் கணினி விலை ஏறி விட்டது...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
10-ஜூலை-201210:46:40 IST Report Abuse
B Sivanesan கொடுத்தாலும் செய்தி ...கொடுக்காவிட்டாலும் செய்தி....இதற்கு செலவாகும் பணத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் கணினிகளை நிறுவி இருந்தால், இந்த முதலீடு பல மாணவர்களுக்கு உதவி இருக்கும். திட்டத்தை மாற்றினால் நன்றாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nava Mayam - New Delhi,இந்தியா
10-ஜூலை-201208:16:36 IST Report Abuse
Nava Mayam கொள்முதலில் சிக்கலா , கொள்ளையில் சிக்கலா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
10-ஜூலை-201207:23:05 IST Report Abuse
Ravanan Ramachandran மக்களின் வரிப்பணம் மிக தாரளமாக வீணடிக்க படுகின்றது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.