Advertisement
புதிய கட்சி ஆரம்பிக்கிறார் குஜராத் மாஜி முதல்வர் கேசுபாய்:சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி��
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 ஜூலை
2012
05:56
பதிவு செய்த நாள்
ஜூலை 10,2012 00:05

ஆமதாபாத்:குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல், விரைவில், புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விரைவில் அங்கு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில், மும்முனைப் போட்டி ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குஜராத் பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் கேசுபாய் படேல். நரேந்திர மோடிக்கு முன், அங்கு முதல்வராக பதவி வகித்தார். சமீபகாலமாக, நரேந்திர மோடிக்கும், கேசுபாய் படேலுக்கும் இடையேயான உறவில், விரிசல் ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடி, சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக, கேசுபாய் படேல், கடுமையாக விமர்சித்தார். நரேந்திர மோடிக்கு எதிராக, மாநிலம் முழுவதும், பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்னும் சில நாட்களில், புதிய அரசியல் கட்சியை அவர் துவங்கப் போவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.மூன்று கட்சிகள்:இதனால், விரைவில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் கட்சியான பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கேசுபாய் படேலின் புதிய கட்சி என, மூன்று கட்சிகள் சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, குஜராத் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து, கேசுபாய் படேல் ஆதரவாளரும், நரேந்திர மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான கோர்தன் ஜதாபியா கூறுகையில், "கேசுபாய் படேல், கண்டிப்பாக இன்னும் சில நாட்களில், புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார். சட்டசபைத் தேர்தலில், 182 தொகுதிகளிலும், இந்த கட்சி சார்பில், வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். கேசுபாய் தலைமையிலான புதிய கட்சி, குஜராத்தில் ஆட்சியை பிடிக்கும்' என்றார்.


வெற்றி பெறவில்லை:குஜராத்தை சேர்ந்த அரசியல் நிபுணர்கள் கூறுகையில், "குஜராத்தில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்குத் தான், மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். பிராந்திய கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது இல்லை. சிமன்பாய் படேல், சங்கர் சிங் வகேலா போன்றோர், இதற்கு முன், பிராந்திய கட்சிகளை துவக்கி, தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினர். இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே, கேசுபாய் படேல் கட்சி துவக்கினாலும், அவருக்கு, எந்த பயனும் கிடைக்கப் போவது இல்லை' என்றனர்.இதற்கிடையே, "கேசுபாய் படேல், புதிய கட்சி துவக்கினால், பா.ஜ., ஓட்டுகள் பிரிந்து விடும். நாங்கள் எளிதாக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து விடுவோம்' என, காங்கிரஸ் தரப்பு உற்சாகமாக தெரிவித்துள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.