Warden arrested for making girl drink urine, suspended | பள்ளி மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது| Dinamalar

பள்ளி மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது

Added : ஜூலை 10, 2012 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பள்ளி மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது,Warden arrested for making girl drink urine, suspended

சாந்திநிகேதன் : விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்து, அந்த மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த வார்டன் கைது செய்யப்பட்டார்
.
மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழகக் கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள். இதை அறிந்த விடுதி வார்டன் உமா போடார் ஆத்திரமடைந்து, மறுநாள் மாணவியை அழைத்து வலுக்கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.


இந்தச் சம்பவம் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, மாணவியின் தந்தை மனோஜ் மிஸ்திரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விடுதி வார்டனை கைது செய்தனர். அதேநேரத்தில், விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக, பல்கலை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், மாணவியின் தந்தையும், தாயும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manikandan - hyd,இந்தியா
10-ஜூலை-201214:14:01 IST Report Abuse
manikandan இவ புருஷன நினைச்சா பாவமா இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
10-ஜூலை-201213:38:13 IST Report Abuse
Indiya Tamilan இந்த மாதிரி அரக்க குணம் மற்றும் வக்கிர புத்தி உள்ளவர்களை முச்சந்தியில் வைத்து கல்லால் அடிக்கவேண்டும் அரபு நாடுகளில் செய்வதைப்போல.
Rate this:
Share this comment
Cancel
kurumbu - tirupur,இந்தியா
10-ஜூலை-201212:32:06 IST Report Abuse
kurumbu இந்த பொம்பளைய பார்த்தாலே பயமா இருக்கு.அந்த குழந்தை பயத்திலே சிறுநீர் போயிருக்கும். இந்த பொம்பளைய பார்த்தாலே எதோ சைகோ மாதிரி தெரியுது.முதலில் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Santhaana krishna pappachaami chinnakulanthai - Sydney ,ஆஸ்திரேலியா
10-ஜூலை-201211:30:02 IST Report Abuse
Santhaana krishna pappachaami chinnakulanthai ..சிறுநீர் பற்றிய கூற்றை சில கடிதங்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வளவு சக்தியா அதற்கு..well done ...Arjun .Mairia .thank You ...Santha ..
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
10-ஜூலை-201214:48:54 IST Report Abuse
Gokulபிரதர், அந்த கருத்துக்கள் உண்மையா என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்க ஏதும் try பண்ணி வைக்க போறீங்க.. ஹா ஹா ஹா.. jus kidding.. :-)...
Rate this:
Share this comment
Cancel
Jeyavijayan Vijayan - madurai,இந்தியா
10-ஜூலை-201211:14:39 IST Report Abuse
Jeyavijayan Vijayan புடிங்க சார், அந்த மானம்கெட்ட டீச்சர் புடுச்சு உள்ள போடுங்க சார்,
Rate this:
Share this comment
Cancel
Vijay - bangalore,இந்தியா
10-ஜூலை-201210:04:08 IST Report Abuse
Vijay Fifth standard படிக்கிற குழந்தைய ஏன் அவளோட parents பாத்துக்க முடியலையா, எதுக்காக hostel - ல சேர்க்கணும். அப்பா அம்மா - வே பாத்துகல பின்ன எப்படி ஒரு ஆயா பாசமா பாத்துக்குவா? Every parents should think about their children .
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
10-ஜூலை-201214:47:20 IST Report Abuse
Gokulஎன்னப்பா நீ விவரம் தெரியாத ஆளா இருக்க? ஹாஸ்டல் ல இருந்தா தானே பிள்ளை நல்லா படிக்கும்...அஞ்சாம் வகுப்பு படிச்சதும் டாக்டர் ஆகும்...100 க்கு 200 மார்க் எடுக்கும்...முக்கால் வாசி பெற்றோர்கள் இப்படி தான்......
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
10-ஜூலை-201210:01:18 IST Report Abuse
N.Purushothaman இது போன்ற சிலர் கடுமையாக நடந்து கொள்கிறேன் என்கிற பேர்விளியில் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். ....இவர்களுக்கு தண்டனையும் கொடூரமாக தான் இருக்க வேண்டும்......
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-201209:46:30 IST Report Abuse
Jeyaseelan பசு தோல் போர்த்திய (பெண்) புலி ............. 10 வயது குழந்தை, அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்ய எப்படி மனசு வந்தது. மாமியார் வரிசையில் இந்த (பெண்) வார்டன்களும் சேர்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sesha Narayanan - Chennai,இந்தியா
10-ஜூலை-201209:34:07 IST Report Abuse
Sesha Narayanan இவங்கள் எல்லாம் என்ன ஜன்மங்கள். இத்தகைய கொடூரமான எண்ணங்களை வைத்துக்கொண்டு மனிதர்கள்தானா???
Rate this:
Share this comment
Cancel
Aswin - Bangalore,இந்தியா
10-ஜூலை-201209:24:22 IST Report Abuse
Aswin Court should give the same punishment to that lady
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை