கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே, குழந்தையின் அழுகையை நிறுத்த சூடு வைத்த அங்கன்வாடி அமைப்பாளர், உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கம்பம் அருகே சுருளிப்பட்டி காலனியில் அங்கன்வாடி உள்ளது. இங்கு பாரதி அமைப்பாளராகவும், ஜெயா உதவியாளராகவும் பணிபுரிகின்றனர். இம்மையத்தில் சசிக்குமார், முருகேஸ்வரி தம்பதியினரின் குழந்தை ரோஷினி,3, சேர்க்கப்பட்டிருந்தார். சில நாட்களாகவே மையத்திற்கு வந்ததும், ரோஷினி அழத் துவங்கியுள்ளார். ரோஷினியின் அழுகையை நிறுத்த, மையத்தின் உதவியாளர் ஜெயா, கொள்ளிக்கட்டையை எடுத்து கை, கால்களில் சூடு வைத்தார்.
வீட்டிற்கு வந்தபின் குழந்தையின் கை கால்களில் சூடு வைத்ததற்கான அடையாளங்களை பார்த்த தாய் முருகேஸ்வரி, ஜெயாவிடம் கேட்டதற்கு, சிறுமி கீழே விழுந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் சூடு வைத்ததை அறிந்த கிராம மக்கள், ராயப்பன்பட்டி போலீசில் ஜெயா மீது புகார் செய்தனர். எஸ்.ஐ., முத்துப்பாண்டி விசாரித்து விட்டு, நடவடிக்கை எடுக்காமல் சென்று விட்டார். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகபிரபா விசாரணை செய்து, அமைப்பாளர் பாரதி, உதவியாளர் ஜெயாவை சஸ்பெண்ட் செய்தார்.
கலெக்டர் பழனிசாமி கூறியதாவது: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை விசாரித்து விரிவான அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். முதற்கட்டமாக இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து அங்கன்வாடிகளிலும் குழந்தைகளை பாதுகாப்பாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாகப்ரபா அவர்களுக்கு முதலில் சரியான நடவடிக்கைக்காக நன்றி. தவறு செய்த அங்கன்வாடி பணியாளர்களை முதுபான்டியோடு சேர்த்து கைது செய்யவேண்டும். நாகப்ரபா அம்மா அவர்களே தவறு செய்த பணியாளர்களை மாவட்ட ஆட்சியருக்கு நிரந்தர பணி நீக்கம் கோரி பரிந்துரை செய்யுங்களேன். நாங்கள் என்றென்றும் குழந்தைகள் சார்பாக நன்றிகடன் பட்டிருப்போம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.