பதிவு செய்த நாள் :
கருத்துகள் (170)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி:"ஐஸ்கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்க தயராக இருக்கும், நம் நாட்டில் உள்ள நடுத்தர வகுப்பினர், அரிசிக்கோ, கோதுமைக்கோ, ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சலிடுகின்றனர்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதற்கு, பா.ஜ., சமாஜ்வாதி கட்சிகள் உட்பட, பல கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதையடுத்து, ""நடுத்தர மக்களை, கிண்டல் செய்யும் வகையில், எதுவும் பேசவில்லை. நான் கூறியதை வேண்டுமென்றே, திரித்து வெளியிட்டு விட்டனர்,'' என, சிதம்பரம் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நேற்று முன்தினம் பெங்களூரில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஒரு பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ்கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்க தயாராக உள்ள நடுத்தர வகுப்பினர், அரிசிக்கோ, கோதுமைக்கோ, கிலோவுக்கு, ஒரு ரூபாய் விலை ஏற்றினால், கூச்சலிடுகின்றனர்' என, கூறினார். நாட்டில் உள்ள நடுத்தர வகுப்பினரை, கிண்டல் செய்யும் வகையில் சிதம்பரம் பேசியதாக, நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
கண்டனம்:ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் இதுகுறித்து கூறுகையில், ""சிதம்பரம், சந்தை பொருளாதாரத்தை ஆதரிப்பவர். இதனால் தான், இப்படி பேசியுள்ளார். ஐஸ்கிரீம் பற்றி அவர் பேசியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்களில், சந்தை பொருளாதாரத்தை ஆதரிப்பவர்களின் வாய்களில் இருந்து, இதுபோன்ற உண்மைகள் வந்து விடுகின்றன,'' என்றார்.
தேசியவாத காங்., கட்சி செய்தி தொடர்பாளர், டி.பி.திரிபாதி கூறுகையில், ""நாட்டில் உள்ள சாதாரண மக்களும், சிதம்பரம் போல் செழிப்பாக

இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். சிதம்பரம் போன்ற, பண்பாடுள்ள, படித்த ஒரு நபரிடம் இருந்து, இதுபோன்ற கிண்டல் பேச்சு வரும் என, நான் எதிர்பார்க்கவில்லை,'' என்றார்.
இதயமில்லாமல்:
பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: நடுத்தர வகுப்பினர் ஐஸ்கிரீம், தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக அதிகம் செலவிடுவதாகவும், உணவுப் பொருட்கள் விலையை ஏற்றினால், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சிதம்பரம்கூறியுள்ளார். இது, பிரச்னை புரியாமல், இதயமற்ற வகையில் பேசும் பேச்சு. நடுத்தர வகுப்பினர் குறித்து, இதுபோன்ற வெறுக்கத்தக்க ஜோக் அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் காயங்களில் உப்பை தடவுவது போல், அவரது பேச்சு உள்ளது. நடுத்தர மக்களுக்கு எதிராக, சிதம்பரம் மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள, பல அமைச்சர்கள் இதுபோல் கருத்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மழுப்பல்:
தான் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளதை அடுத்து, "நடுத்தர வகுப்பினரை, கிண்டல் செய்யும் வகையில், நான் எதுவும் பேசவில்லை' என, அமைச்சர் சிதம்பரம் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:""பெங்களூரில், தான் அளித்த பேட்டியை, வேண்டுமென்றே திரித்து வெளியிட்டுள்ளது குறித்து, அமைச்சர் சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார். யார் மீதும் குற்றம் கூறும் வகையிலோ, யாரையும் கிண்டலடிக்கும் வகையிலோ, எந்த கருத்தையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை. "விலை உயர்வுக்கு ஏன்

Advertisement

அவர்கள் கூச்சலிடுகின்றனர்' என்ற வார்த்தையை, அமைச்சர் பயன்படுத்தவில்லை. "நாம்' என்ற வார்த்தையைத் தான் குறிப்பிட்டார். மீடியாக்களில் வெளியான தகவல்,வேண்டுமென்றே, திரித்து வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ள, சுமைகள் குறித்து, பதில் அளித்த அமைச்சர், நாட்டில் பல்வேறு மட்டத்திலான மக்கள் வசிப்பதையும், அவர்களுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.''இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
""ஒரு தாயார், தன் குழந்தையை இந்தியா கேட்டிற்கு அழைத்துச் சென்று, ஐஸ்கிரீம் வாங்கித் தருவது குற்றமா? சாதாரண மக்களை அவமதிக்கும் வகையில், சிதம்பரம் பேசியுள்ளார். சிதம்பரம் மட்டுமல்ல, இதற்கு முன்னும், ஐ.மு., கூட்டணியை சேர்ந்த, வேறு சில அமைச்சர்களும், சாதாரண மக்களை, அவமதிக்கும் வகையில் பேசியுள்ளனர். மத்திய அமைச்சர்கள் இதுபோன்று பேசும்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா, மவுனமாக இருப்பதன் காரணம் புரியவில்லை.''
-ரவிசங்கர் பிரசாத், பா.ஜ., செய்தி தொடர்பாளர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (170)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
12-ஜூலை-201223:57:51 IST Report Abuse
babu இருபது ஆயிரத்துக்கு ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட துபாய் சிங்கப்பூர் செல்லும் நிதி ஏற்ற அமைச்சர் அவர்களே, உங்களது அன்றாட சாப்பாடு என்னவோ பக்கத்தில் ஐஸ் கிரீம் உடன். எங்களுக்கு தெரியும்., வெய்யிலில் ஒருமுறை அலைந்தாலும் வேண்டா விருப்பாக் ஒருமுறை ஐஸ் கிரீம் சாப்பிட நா ஆசை படுவது உண்மையே அரிசி உணவு அன்றாட அடிப்படை உணவு ஐஸ் கிரீம் நீர்த்து போனால் அது வெறும் பவுடர். ஏ சி யில் உட்கார்ந்து கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிடும் பல முறை எம் பி அவர்களே, ஐஸ் கிரீம் இல்லா விட்டாலும் பரவா இல்லை அரிசி இல்லை என்றால் குடல் வாயை கடித்து விடும்,
Rate this:
Share this comment
Cancel
siva guru - Rameswaram,இந்தியா
12-ஜூலை-201220:27:21 IST Report Abuse
siva guru சிதம்பரம் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பது நாட்டிற்கே தெரியும் அவரிடமிருந்து இவ்வாறு கருது வருவது இயல்புதான் - சிவா - ராமேஸ்வரம்.
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
12-ஜூலை-201219:46:54 IST Report Abuse
Abdul rahim யோவ் 1 ருபாய் கஷ்டம் உனக்கு தெரியுமாய்யா
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
12-ஜூலை-201218:04:09 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar அவர் மறுப்பு ஏற்றுகொள்ள கூடியது அல்ல..., பேட்டி எடுத்த பத்திரிகை மற்றும் நிருபர் பொது மக்களை பழித்த அவர் மீது வழக்கு பதிவு செய்ய படவேண்டும்..., அதுதான் நல்ல பத்திரிகை ஆகும்
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Chennai,இந்தியா
12-ஜூலை-201216:54:24 IST Report Abuse
Vijay Kumar மாத சம்பளத்தில் முதலில் உமக்கு வரியை கொடுத்துவிட்டு மீதியை வீட்டுக்கு எடுத்து செல்லும் நடுத்தர மக்களுக்கு உமது கிண்டலை ரசிக்க நேரமில்லை திரு சிதம்பரம் அவர்களே. இன்று வேளைக்கு போனால் தான் நாளை தண்ணீரோ அரிசியோ (அதுவும் நீர் வரி அபகரித்த பிறகு) வாங்க முடியும். இந்த தையிரியத்தில் தானே இத்தனை பேச்சும் ஏச்சும் ஒரு லட்சம் கோடி சம்பாதிப்பவருக்கு ஒரு ரூபாயின் மதிப்பு எப்படி தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Michael - Singapore,சிங்கப்பூர்
12-ஜூலை-201216:43:48 IST Report Abuse
Michael இதுல என்ன பெரிய தப்பு இருக்கிறது? அரசாங்கம் இலவசமாக அளித்த கல்வியையும், மருத்துவ வசதியையும் பெற இன்று தனியார் நிறுவனங்களுக்கு எவ்வளவு கொட்டி அழ வேண்டி இருக்கிறது? அவற்றில் கொஞ்சம் அரசாங்க மருத்தவமனைகளுக்கு நாம் செலவிட்டிருந்தால் தரமான சிகிச்சையை குறைவான விலையில் அரசு மருத்துவமனைகளிலேயே நாம் பெற்றிருக்க முடியும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு தனிமனிதனும் குடிக்கும் நீருக்கும், தடையில்லா மின்சாரம் பெற உபயோகிக்கும், invertor , battery , stabilisor , generator ... ஒன்றை மறந்து விட்டேன், கொசு ஒழிப்பான் கருவிகள்... போன்ற கருவிகளுக்கெல்லாம் அழிக்கும் பணத்தை கூட்டிப் பாருங்கள் ஒரு பெரும் உண்மை விளங்கும். முன்னேறிய நாடுகள் எதிலும் நான் மேற்சொன்ன கருவிகள் எதையும் பயன்படுத்துவதில்லை. இவை எல்லாம், ஒரு இடத்தை நாம் அடைத்ததால் உண்டான வினைகள். நாம்தான் அரசாங்கம். எதுவும் இலவசமாகக் கிடைக்கப்போவதில்லை. தனியாருக்கு அழுவதை அரசிடம் தந்தால் அனைவரும் கூட்டாக நலம் பெறலாம். இதுதான் மக்களாட்சியின் தத்துவம். கூடிவாழ்ந்ததுதான் மனித இனம் இன்று மகத்தான உயிரினமாக ஆகி இருப்பதன் இரகசியம். பரவலாக சமூக சிந்தனை அற்றுப் போய்க்கொண்டிருக்கும் நம் மக்களிடம், தாமதமாகவேனும், நினைவூட்டப்பட்டிருக்கிற அடிப்படை சமூக வாழ்வு கோட்பாடு இது என்று உறுதியாக நான் கூறுவேன். தனிமனித வெறுப்பில் கூறப்பட்ட கருத்துக்களை தொகுத்திருக்கும் செய்தியாகவே நான் இதை எடுத்துக் கொள்வேன்.
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
12-ஜூலை-201216:42:29 IST Report Abuse
itashokkumar டாஸ்மாக் கடை வாசலில் நின்று யோசித்து பாருங்கள் புரியும். தமிழக அரசு மது பானங்களை ஒன்றும் சகாய விலைக்கு விற்க வில்லை. அதை வாங்கி குடித்து சாகும் மக்கள் அவசியமான உணவு பொருட்களை விலை கொடுத்து வாங்க வருத்தபடுவது ஏன்.
Rate this:
Share this comment
Cancel
Nishanthan Sathananthasivam - luhansk ,உக்ரைன்
12-ஜூலை-201216:30:50 IST Report Abuse
Nishanthan Sathananthasivam Earlier when i read the news i thought that HM has crossed the line. Now after seeing the video i realize that BJP and media are overreacting on a simple statement which was not directed to any particular sect of society. And moreover such an expression can not be condemned in democracy like India where right to expression has been given paramount emphasis. After-all Mr. CP is not wrong, and BJP knows it better than anyone else
Rate this:
Share this comment
Cancel
Shankar - Bangalore,இந்தியா
12-ஜூலை-201215:59:11 IST Report Abuse
Shankar தங்களை மாதிரி ஊரை அடிச்சு உலையில் போடுகிறவர்கள், காசை விட்டெறியலாம். ஆனால், நேர்மையாக சம்பாதிக்கும் ஒவ்வொருவரும், தண்ணீர் பாட்டில் "கட்டாயத்தின்" பேரில் தான் வாங்குகிறார்கள் ( வேறு வழி இல்லாததால் ). ஐஸ் கிரீமை, குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து விட்டு, தான் சாப்பிடாமல் மகிழ்வான் திருவாளர் பொது ஜனம். தேர்தலில் தோற்று விட்டு, இத்தனை வருடம் மத்திய அமைச்சராய் இருக்க, வெட்கம், மானம், சூடு, சொரணை எதாவது இருக்கிறதா? இந்த லட்சணத்தில், பொது மக்களை பார்த்து அறிவிலியாக ஏன் உளறுவது?
Rate this:
Share this comment
Cancel
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
12-ஜூலை-201215:01:19 IST Report Abuse
Ashok Raja உன்ன பெரிய தில்லாலங்கடின்னு தான் நினைச்சேன். ஆனா இப்படி கோமாளி மாதிரி அந்தர் பல்டி எல்லாம் அடிச்சு ஊரே சிரியா சிரிகடிசுட்ட.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.