திருப்பூர்:லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அது மிகவும் அவமானமான ஒரு செயல்,'' என, திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
விதிகளுக்கு புறம்பாக கூடுதல் மணல் ஏற்றி வரும் லாரிகளுக்கு, போலீசார் அபராதம் விதிக்கின்றனர். போலீசாரின் சட்டப்பூர்வமான அபராத நடவடிக்கைக்கு எதிராக, மணல் உரிமையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், துணிச்சலாக "மாமூல்' பெற்றுக்கொண்டு, மணல் லாரியை அனுமதித்த, மடத்துக்குளம் எஸ்.ஐ., மணிமாறனை "சஸ்பெண்ட்' செய்து, திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க், நேற்று உத்தரவிட்டார்.கடந்த 9ம் தேதி, பகல் 12.30 மணியளவில், தாராபுரம் - உடுமலை ரோட்டில், காரத்தொழுவு அருகே, மாரிமுத்து என்பவரது லாரி, அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்றுள்ளது. மடத்துக்குளம் எஸ்.ஐ., மணிமாறன், காரத்தொழுவில் மணல் லாரியை பிடித்துள்ளார். ஒன்பது ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, மிரட்டியுள்ளார்.
லாரி உரிமையாளர் பேரம் பேசி, நான்கு ஆயிரம் ரூபாயை, எஸ்.ஐ.,க்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, லாரியை எடுத்துச் சென்றுள்ளார். இத்தகவல், எஸ்.பி.,க்கு கிடைத்தது. ரகசியமாக விசாரிக்க, தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்படி, சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோரை போலீசார் தேடி, கண்டுபிடித்தனர். அவர்களிடம் எஸ்.பி., நேரடியாக விசாரணை நடத்தினார். இதில், எஸ்.ஐ., லஞ்சம் பெற்றுக்கொண்டு, லாரியை அனுமதித்தது உறுதியானது. அதையடுத்து, எஸ்.ஐ., மணிமாறன், நேற்று "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
"லஞ்சம் வாங்காதீர்!':எஸ்.ஐ., மணிமாறன் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டது தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் தெரிந்து கொள்ளும் வகையில், எஸ்.பி., ஆஸ்ரா கர்க், மைக்கில் பேசினார்.
அப்போது, ""போலீசார், தங்கள் பொறுப்பை உணர்ந்து, கடமையை சரியாக செய்தால் போதும். உங்களுக்கு, பணப்பயன் ஏதும் வரவில்லையா; பணியில் சிரமம் உள்ளதா; விடுப்பு வேண்டுமா அல்லது சொந்த ஊரில் குடும்பத்துடன் வசிக்க, "டிரான்ஸ்பர்' வேண்டுமா, தருகிறேன். ஆனால், லஞ்சம் மட்டும் வாங்காதீர்கள். அது மிகவும் அவமானமான ஒரு செயல்,'' என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ur the real hero against corruption. If people like u are in rulling position , we need not wait untill 2020 for dream india , within few we could feel the real 2020. one very big example is TNPSC tranferency made by Mr Natraj I.P.S.............i hope wt ever the struggles comes infront of him "Mr clean Garg" never give up his nobel charcter.... the present requires persons like him to make clean against the deep rooted bribe....if the police officials are corrected then all other people can be easily corrected ...... thanku sir.......kind obligation to dinamalar..please s all the comments to Mr ASRO GARG so that he can do his job with more enthu....can u s it since ur also part of anti corruption ......
GOOD JOB சார். வாழ்த்துக்கள். உங்களை போன்ற காவல்துறையினர் தான் நாட்டிற்க்கு தற்போதைய தேவை. எல்லா உயர் அதிகாரிகளும் உங்களை போன்று இருந்தால் காவல் துறை சுத்தமடையும். மரியாதையும் கிடைக்கும். மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் கிடைத்த மாமூல் பணத்தை பிரித்து கொள்வதில் அடிதடியில் ஈடுபடும் போலீசார் இருக்கும்வரை இதை போன்ற அறிவுரைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிடுமோ என்று தான் தோன்றுகிறது. ANYWAY, உங்கள் வரை நேர்மையாக இருங்கள். உங்கள் கீழ் வேலை செய்பவர்களை நேர்மையுடன் இருக்க வையுங்கள். இப்படி செய்தாலே ஒரு பெரிய நல்லதொரு மாற்றத்தை உண்டு பண்ணலாம். ALL THE VERY BEST AND GOD BLESS YOU ..
விசாரணை கைதிகளை சிறையிலிருந்து கோர்டிற்கு அழைத்து செல்ல தேவையான பயணப்படி,பினவரை கிடங்கிற்கு செலவழிக்க வேண்டிய தொகை, காவல் நிலைய பராமரிப்பு செலவுகள் ( மின்சாரம்,தொலைபேசி,எழுதுபொருள்கள் ) முதலியன முறையாக கிடைக்கும்படி செய்தாலே பலரின் கைகள் நீளாமல் தடுக்கலாம். ஆரம்பத்தில் இத்தகைய செலவுகளை சரிகட்ட லஞ்சம் வாங்குபவர்கள், மற்றும் லஞ்சம் வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருப்பவர்களே பின்னர் தனது சொந்த தேவைகளுக்காகவும் லஞ்சம் வாங்கவும் தயங்காது கைநீட்டுகின்றனர். மேலும் காவலர் தேர்வு, பதவிஉயர்வு முதலியவற்றில் முறைகேடுகளுக்கு இடமில்லாது தகுதியின் அடிப்படையில் மட்டும் தேர்வுசெய்யப்படும் நிலை வந்தால் தான் காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
மணல் கொள்ளை என்பது இன்று பரவலாக நடந்துவரும் தொழிலாக மாறிவிட்டது. இதில் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் தான் இருக்கும். இதில் பல நிலைகளில் முறைகேடுகள் நடக்கின்றன. கடைசி நிலையில் தான் அதாவது, மணல் லாரிகள் மூலமாக வெளியேறும்போது தான் காவல்துறையினரின் பார்வைக்கு வருகிறது. அங்கே லஞ்சம் கொடுத்துவிட்டு தாப்பி விடுகிறார்கள். இதில் காவல்துறையின் பணி சிறியதுதான். எனவே, ஆரம்ப கட்டத்திலிருந்தே அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, அஸ்ரா கார்க் போன்ற திறமையான நிர்வாகிகளுக்கு உதவ முன்வரவேண்டும். அதை விடுத்து, அவரை இடமாற்றம் செய்வதோ, அவரை செயலிழக்க செய்வதோ தவறான செயல். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் இதுபோன்ற அதிகாரிகளை அரசு ஊக்குவிக்க முனைந்தால் அரசு ஊழியர்கள் மத்தியிலும் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம்
வளரும். மக்களுக்கும் நேர்மையான நிர்வாகம் கிடைக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.