சென்னை:"இலங்கையில் தொடரும் அநீதிக்கு விடிவு காண வேண்டும் என்பதற்காக தான், "டெசோ' மாநாடு நடைபெறுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: 2013ம் ஆண்டு செப்.,ல் இலங்கை வடக்குப் பகுதியில், தேர்தல் நடத்தப் போவதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார். ஆனால், தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என சொல்லியிருப்பதில், ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் நடத்துவது கூட பிறகு இருக்கட்டும்.
இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த, முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப் பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப் புலிகள், பூசா முகாமுக்கு மாற்றப் பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற, கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டி விட்டனர். இதனால், வவுனியா சிறையில் கடந்த மாதம், 30ம் தேதி கலவரம் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, வவுனியா சிறையில் இருந்த, 201 கைதிகளும், அனுராதாபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந்தனர். கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிமலரூபனின் உடலை தகனம் செய்து விட்டனர். நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில் கூட மண் உரிமை மறுக்கப்பட்டது மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத் தான், "டெசோ' மாநாடு நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒன்றில் ஆதிதிராவிடர் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை, பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தடுத்துள்ளனர்.அதைவிடக் கொடுமை, வேற்றுச் ஜாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வந்த, ஆதிதிராவிடர் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை, அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்துள்ள இடத்திலும், இது போலவே வேறு ஜாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால், அப்போது அரசு என்ன செய்யும்?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேவலபுத்தி படைத்த மாமனிதர் நீர்(வயதுக்குமட்டுமே மரியாதை).மனிதகுலம் தோன்றியது முதலே உங்களைப்போல் கேவலபுத்தி படைத்த மனித ............ . உங்கள் குடும்ப நலன்காக்க, குடும்ப நலன் ஒன்றையே நினைத்து, தமிழ் சமுதாயமே அழியக்காரணமாயிருந்த மனிதரே நீர் மீண்டும் முதலைகண்ணீர் விட வேண்டாம். தமிழா உன்னை நீயே காப்பாற்றிக்கொள். உலகில் எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன. ஏமாறாதே ஏமாறாதே. இவனுங்களை நம்பி.வேறு என்னத்தைச்சொல்ல............. .
கூடாரம் காலியாகுது..என்ன பண்றதுன்னு தெரியல...எதுனா பண்ணாதான் இவங்க இருக்கிறது தெரியும்..பட்டிமன்றங்கள்ல பழைய பாட்டுங்கள தூக்கிப்பிடிச்சி புதுப்பாட்டுங்கள போட்டுமிதிச்சே கதைய ஓட்டுற ஒருத்தரு திடீருன்னு, பழைய பாட்டுங்கள மிதிக்க ஆரம்பிச்சிட்டாரு..அதெல்லாம் ஒரு பாட்டா..அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியாம பாடிக்கினு இருந்தோம்..இப்ப அர்த்தம் யோசிச்சி பார்த்தா ச்சீன்னு தோணுது அப்டீங்கறாரு.. இது என்னடா புது ஞானோதயமா இருக்குன்னு பார்த்தா தான் தெரியுது..பழைய கவிஞர் ஒருத்தரு ஆட்சி மாறினப்புறம்..ஜால்ராவை மாத்திப்போட ஆரம்பிச்ச்ட்டாருன்னு.. அவரும் விடல..அவரை ஒருத்தரு கேக்குறாரு..பட்டிமன்றங்கள்ல சினிமா பாட்டை விமரிசிக்கிராங்கலேன்னு...அவரு சொல்லுதாரு..பட்டிமன்றங்கள்ல பேசறவங்க எல்லாம் காசு வாங்காமலா பேசறாங்கன்னு..
"டெசோ" மாநாடு ஏன் கருணாநிதி விளக்கம் :::: 1 ) முதல்வராக இருந்த போது நிறைய பாராட்டு விழா, பரிசு விழா இருந்துச்சி,,இப்ப நான் வெறும் திருவாரூர் MLA தான்,,,,,,,, 2 ) அப்ப கனி உள்ளே. சோ அடிகடி டெல்லி பயணம், இப்ப வெளிய இருப்பதால் அதும் இல்ல.......3 ) மானாட மயிலாட வெறும் இ ஆடிகிட்டு இருக்கு அங்கயும் ஒன்னும் ஆட முடியலை 4 ) அண்ணன் எப்ப போவன் திண்ணை எப்ப காலியாகும்னு என் ரெண்டு புள்ளையும் அடிசிகுறாங்க,,,,,இந்த மாதிரி போராட்டம்,, மாநாடு நடத்தினால் என் மகன்கள் கொஞ்சம் பிசியாகி விடுவார்கள்......இன்னும் கொஞ்ச நாள் நாற்காலி என்கையில்......5 ) சரி உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதலாம் என்றால் எல்லா உடன் பிறப்பும் உள்ளே இருந்து கிட்டு ஆளாளுக்கு கடிதம் எழுதுறாங்க 6 ) படம் எடுக்கலாம்னா பார்த்தா முதல என் படத்தை போட்டு வணக்கம் சொன்ன உடனே படம் முடிஞ்சிருச்சின்னு எல்லா பயலுகளும் தியேட்டரை விட்டு எழுந்து போய்டுறாங்க.........7 ) தினம் ஒரு அறிக்கை விடலாம்னு பாத்தா இப்ப தினமலரும் அம்மா பத்திரிகை அகிடுசுன்றாங்க........ அப்புறம் என்ன தான் பண்றது.....அதுதான் உள்ளே தூங்கிகிட்டு இருந்த டெசோவ தட்டி எழுப்பிட்டோம்ல.......மது அருந்திவிட்டு போராட்டம் செய்ய கூடாது என்று ஒரு சட்டம் போட்டால் " தாத்தா மட்டும் தரைல இருப்பார்......
ஏன் என்றால், சோனியா காந்தியோடு சேர்ந்து ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தது எல்லோருக்கும் தெரிந்து விட்டது, தமிழ் மக்களுக்கு இவர் வராத ரயிலுக்கு மண்டையை வைத்து காத்திருந்தது புரிந்து விட்டது. அப்புறம் எப்பிடிப்பா புள்ள குட்டிங்க நாளைக்கு ஆட்சிய புடிக்கும்? தி மு க ன்னா திரு மு கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகம். இது ஒரு புறம் இருக்க, இந்த அம்மா போடுற திட்டங்களும் செய்தியோடவே முடிஞ்சிடுற மாதிரி இருக்கே? ing எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா finishing சரியில்லையே ஒரு வேளை நாம இன்னொரு முறை ஏமாந்திட்டமோ? யோசிப்போம் என்ன செய்யலமின்னு - பொது ஜனம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.