சென்னை: "நடராஜன், ராவணன், திவாகரன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்னவாயிற்று?' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: அந்தக் கால அரசர்களைப் போல், கொடநாட்டிற்கு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து, நாட்டிலே மழை ஒழுங்காகப் பெய்கிறதா? என, முதல்வர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அன்றாடம் முதல்வர் பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே வந்து கொண்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் எல்லாம் முறையாக அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு வருகின்றனவா? அரசு செயல்படுகிறதோ இல்லையோ, செயல்படுவது போன்ற தோற்றமாவது இருக்க வேண்டாமா? முதல்வர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார். அவ்வாறு கொடுக்கப்பட்ட புகார்களின் மேல், முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? அந்த வழக்கிலே சம்பந்தப்பட்டவர், சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை, "என்கவுன்டர்' செய்ய முயற்சி நடைபெற்றதாக, இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினார். அதற்கு அரசின் பதில் என்ன? அதன் பின் அவர் வாயே திறக்கவில்லையே? வாயைத் திறக்கக் கூடாது என, அடக்கி வைக்கப்பட்டு விட்டாரா அல்லது பயமுறுத்தப்பட்டு விட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த கேடு கேட்ட துக்ளக் ஆட்சியில மன்னார்குடி சசிகலா கும்பல் மேல போட்ட வழக்குகள் எல்லாம் சும்மா மக்களை முட்டாளாக்கற செயல்....நான் அடிக்கற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகற மாதிரி அழு....இதுதான் அந்த கும்பலுக்கும் ஜெயாவுக்கும் உள்ள டீலிங்... இது மாதிரி பல தடவை நடந்தாச்சு...இன்னும் நடக்கும்...ஆனா சசிகலா & கோ தோட்டத்தை விட்டு போக மாட்டாங்க.....அப்பாவி அதிமுக தொண்டன்தான் பாவம் எந்தப்பக்கம் ஜால்ரா அடிக்கறதுன்னு தெரியாது....ராவணன் & கோ மேல போட்ட வழக்குகள் எல்லாம் ஒண்ணும் நகராது...கொஞ்ச நாள் கழிச்சு அதிமுக தொண்டர்களுக்கு வழக்கம் போல பெரிய அல்வா கெடைக்கும்....
so all r oppose dmk only and this very poor news paper he gives only poor news ,, but dmk case all r bail in law and order oly and then raja gives the full detail abut the 2g scam ,, then what happen u people ,, last dmk period was very rule ,, plz tell me any one this wrong ,,, and the new11 power station are built by dmk period only so people dont forget this fuck news paper wont publish this type of new ,,, because the tamil nadu gvt has sp the around 144 cr for add in news paper ,, all the case face leagel only ,,, and who is sassi ,, and who is nataraj ,ravanan ,and simply who is jaya ,, wat she done in tamil nadu ... and plz people this type news paper only support for that is paarpan ,, vaalka thamizh ,,,
தலீவா.. அப்படியே ஸ்டாலின் மீது வழக்கு வந்தவுடன் எண்ணையில போட்ட அப்பம் மாதிரி பொய் வழக்கு, பழி வாங்கும் நடவடிக்கை, நீதிமன்றத்தில் சந்திப்போம்.. அது இதுன்னு குதித்து விட்டு, அடுத்த ஜென்மம் பத்தியெல்லாம் பேசி கடைசியில, கொல்லைப்புறமா போயி 1.75 பணத்தை கொடுத்து வழக்க நீதிமன்றத்திற்கு வெளியிலே முடித்து அதப் பத்தி ஒன்னும் பேசாம இருக்கீங்களே... அது எதனால் என்றும் சொல்லுங்களேன்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.