E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கடினமான தேர்வு இது: டி.இ.டி., தேர்வு எழுதியவர்கள் புலம்பல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2012
01:02
பதிவு செய்த நாள்
ஜூலை 12,2012 23:42

சென்னை: டி.இ.டி., தேர்வு, எதிர்பார்த்ததை விட மிகக் கடினமாக இருந்ததாகவும், முதல் தாள் தேர்வுக்கான கேள்விகள், பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை என்றும், கணிதக் கேள்விகள், விடை அளிக்க முடியாத அளவிற்கு கடினமாக இருந்ததாகவும், தேர்வர் பலரும் புலம்பினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக நேற்று, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடந்தது. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடந்தன. 1,027 மையங்களில் நடந்த தேர்வில், 6.56 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள், தேர்வில் பங்கேற்றனர். இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நேற்று விடுமுறை விடப்பட்டது. காலை 10.30 மணி முதல், 12.00 மணி வரை, முதல் தாள் தேர்வு நடந்தது. சென்னையில், 78 மையங்களில் தேர்வுகள் நடந்தன.


சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வை முடித்து வெளியே வந்த தேர்வர்களிடம், "தேர்வு எப்படி இருந்தது?' என கேட்டது தான் தாமதம்; ஆளாளுக்கு புலம்பித் தள்ளினர். ஒருவர் கூட, "தேர்வு எளிதாக இருந்தது' எனக் கூறவில்லை. "கேள்விகளைப் படித்தபோது, தலை சுற்றியது. பாடப் பகுதிகளுக்கும், கேட்ட கேள்விகளுக்கும் சம்பந்தமே இல்லை. கணிதத்திற்கு 30 கேள்விகள்; 30 மதிப்பெண்கள். இதற்கு, ஒவ்வொரு கேள்விக்கும், உடனடியாக விடையை அளிக்க முடியவில்லை. கணக்கு போட்டுப் பார்த்து, விடை அளிப்பதற்கு நேரம் போதவில்லை. இப்படி கேள்வி கேட்டால், ஒன்றரை மணி நேரத்தில் எப்படி தேர்வெழுத முடியும்?' என்று பலரும் தெரிவித்தனர்.


எதற்கு இந்த தேர்வு? "ஏற்கனவே இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்து முடித்து, அரசு சான்றிதழும் பெற்றிருக்கிறோம். அதன் பிறகும், எதற்கு இந்த தேர்வு? ஒவ்வொரு தேர்வரிடம் இருந்தும், தலா, 500 ரூபாயை, தேர்வுக் கட்டணமாக வசூலித்திருக்கின்றனர். இந்த வகையில், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது' என, சிலர் கூறினர். சென்னை அல்லாத பிற நகரங்களில் தேர்வெழுதியவர்களும், "கணிதம் கசக்க வைத்தது; நேரம் போதவில்லை' என்ற கருத்தையும், ஒட்டுமொத்த அளவில், தேர்வு எளிதாக இல்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர். மதுரை, கோவை உள்ளிட்ட சில இடங்களில், வெகு சிலரே, தேர்வு எளிதாக இருந்தது எனக் கூறினர். ஆனால் அவர்களும், கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலவில்லை என்ற கருத்தை தெரிவித்தனர். மொத்தத்தில், 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு பெறலாம் என்று எதிர்பார்ப்பதாக, தேர்வு எழுதியவர்கள் கருதுகின்றனர். தேர்வைப் புறக்கணித்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், இன்று தெரியும்.


நியாயமாக நடக்கிறது: அமைச்சர் திருவல்லிக்கேணி, என்.கே.டி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, துறை முதன்மை செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர், நிருபர்களிடம் கூறும் போது, ""முதல்வர் உத்தரவுப்படி, டி.இ.டி., தேர்வு நியாயமாக நடக்கிறது. 6.56 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்,'' என்றார். ""காலையில் நடந்த தேர்வு கடினமாக இருந்தது என்றும், பாடத் திட்டத்தின்படி கேள்விகள் கேட்கவில்லை என்றும் தேர்வர் புகார் கூறியுள்ளனரே?'' என்று கேட்டதற்கு, ""தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்,'' என, அமைச்சர் சிவபதி பதிலளித்தார்.


30 மதிப்பெண்கள் "அவுட்!' கணிதப் பாடத்திற்கு, 30 மதிப்பெண்களுக்கு, 30 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும், படிப்படியாக பல நிலைகளில், ஒரு பக்கம் அளவிற்கு போட்டுப் பார்த்த பிறகே, விடையைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு இருந்ததாக, சென்னையில் தேர்வெழுதிய தேர்வர் தெரிவித்தனர். ஒரு கேள்விக்கு விடை அளிக்க, எவ்வளவு நேரமாகும் என்பதை, டி.ஆர்.பி., கணக்கிடாமல், எப்படி கேட்டனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தேர்வு, ஆசிரியர் மத்தியிலும், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மத்தியிலும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


தேர்வுக்கு 90 நிமிடம் தந்த முரண்பாடு ஏன்? அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான, 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, மே 27ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு, காலை 10 முதல், பகல் 1 மணி வரை, மூன்று மணி நேரம் நடந்தது. மொத்த மதிப்பெண்கள், 150. இந்த ஆசிரியருக்கான அடிப்படைச் சம்பளம் அதிகம்; அத்துடன், இவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கக் கூடியவர்கள். இவர்களுக்கான தேர்வும் கடினமாக இல்லை; நேரமும் குறையவில்லை.


ஏன் இந்த முரண்பாடு? ஆனால், நேற்று காலையில் நடந்த, டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கானது. பிற்பகலில் நடந்த இரண்டாம் தாள் தேர்வு, பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய, பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. இந்த இரு தேர்வுகளுக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வைப்போல், அதே, 150 மதிப்பெண்கள் தான். ஆனால், நேரம் மட்டும், 50 சதவீதம் குறைத்து வெறும், ஒன்றரை மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டது. இது எந்த வகையில் நியாயம் என, நேற்று பல தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். நேற்று இரு தேர்வுகளையும் எழுதிய தேர்வர்களுக்கு, கேள்வித்தாள் கடினம் ஒரு பக்கம் என்றாலும், மிக முக்கியமாக, நேரமின்மை தான் பெரும் பிரச்னையாக இருந்தது.


தேர்வு வாரியம் பதில்: தேர்வு நேரத்தில் உள்ள முரண்பாடு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறியதாவது: இந்த கால நேரத்தை, நாங்கள் நிர்ணயிக்கவில்லை. நடைமுறை ரீதியாக, தேர்வர்களுக்கு உள்ள இந்த பிரச்னையை உணர்கிறோம். அவர்களது கேள்வி நியாயமானது தான். குறைந்தபட்சம், இரண்டு மணி நேரமாவது வழங்கியிருக்க வேண்டும். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ.,) ஆசிரியர் தேர்வுக்கான விதிமுறைகளில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, மூன்று மணி நேரம் வழங்க வேண்டும் என உள்ளது. அந்த விதிமுறையைப் பின்பற்றி தான், டி.இ.டி., தேர்வர்களுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கினோம். இதில், எங்களை குறை கூற முடியாது. ஆனால், இந்தத் தேர்வில் கிடைத்த சில அனுபவங்களைக் கொண்டு, குறைகளை, அடுத்த தேர்வில் களைவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும், இந்த நேர பிரச்னையும் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (55)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - madurai,இந்தியா
15-ஜூலை-201201:35:05 IST Report Abuse
karthikeyan இது முற்றிலும் சிறுபான்மையினர்,தால்தப்பட் வகுபினரை ஓரம் கட்டும் நடவடிக்கை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
14-ஜூலை-201200:07:12 IST Report Abuse
v.sundaravadivelu இப்டி கஷ்டப்பட்டு பாசாகி வரும் டீச்சர்கள் தான் உண்மையாகவே புத்திசாலிகளாக இருக்கமுடியும்... மாணவ மாணவிகளுக்கும் நன்முறையில் பாடம் பயிற்றுவிக்கமுடியும்.. சும்மா ஈசியாகக் கேள்விகள் கேட்டு யார் வேண்டுமானாலும் எழுதி பாசாகி டீச்சராக வந்தால் என்ன மதிப்பு இருக்கமுடியும்?.. ஆகவே, இனிமேலும் இதே மாதிரி தான் கேள்விகள் சிரமமாக வரவேண்டும்.. பில்டராகித் தான் ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும்... அப்போது தான் உண்மையாகவே புத்திசாலி மாணவர்களும் மாணவிகளும் நம் மாநிலத்தில் உருவாவார்கள்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
13-ஜூலை-201223:00:46 IST Report Abuse
muthu Rajendran இவர்களுக்கு வேண்டுமென்றால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அடிப்படையில் வேலை என்பார்கள் அடுத்து வருபவர்கள் இல்லை இல்லை அதற்குமுன் ஒரு தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்பார்கள். ஏன் பட்ட படிப்பு மற்றும் B Ed தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யலாமே ? படிப்பை முடித்து பத்தாண்டு காலம் போன பிறகு தேர்வு எழுதுபவற்குக்கும் நேற்று படிப்பை முடித்தவற்குக்கும் போட்டி என்றால் சமமாக இருக்குமா ? ஆசிரியர் வேலைக்கு படித்தால் வரிசை கிராமத்தில் வேலை கிடைக்கும் என்று படித்து முடித்தவர்கள் ஆசையில் மண்ணை போட்டு விட்டார்கள். எப்போதுமே அதிமுக வந்தால் வரிசை கிராமம் ரத்தாகும். தேர்வு முறை என்பார்கள் எதோ கல்வி தரம் உயர போகிறது என்கிறார்கள் நடந்தால் சரி . கிடைக்கவே கிடைத்தது படிப்பதற்கு உரிமை சட்டம் நல்ல சாக்கு .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Chandira Mathi - எர்ணாகுளம் ,இந்தியா
13-ஜூலை-201221:44:53 IST Report Abuse
Chandira Mathi Being a biophysical chemistsry professor, I have few comments to register here. In the first place, if I could have conducted the examination, none of the degree holders of the day will pass in the examination. Everyone knows that people go to college and universities to get/buy degrees and not to learn, not to acquire knowledge. In these days, Ph. D is treated as &39Diploma in Philosophy&39, not as &39Doctorate in Philosophy.&39 If you examine the qualifications, the number of degrees received by the candidates who appear for the TET examinations or NET examination, you will get a shock. Many of them would have got Ph. D, or M.Sc degree. Another point, which I wish to mention here is the difference between - &39CHANDIRAMATHI IS A HUMAN&39 & &39CHANDIRAMATHI IS AS A HUMAN&39. These statements are syllogistically opposite statement. "AS A HUMAN" implies that "NOT A HUMAN." In these days of grand confusions, we have no teachers. People who are &39not teachers&39 act &39as teachers&39. People who have no qualities of teaching are &39trained to&39 act as teachers. Everyone knows that you may have a Ph. D degree. Unless and until you get a B. Ed., degree, you are not eligible to teach school kids. Can the B. Ed., education alone make one as a teacher? What about knowledge? What about other characterstics of teachers? It is all politics of money, not knowledge. So, these people who have no knowledge to answer few questions are crying....Do not show any sympathy to these kind of people who is to mock as teachers....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
SARAN - Edinburgh,யுனைடெட் கிங்டம்
13-ஜூலை-201221:31:31 IST Report Abuse
SARAN இன்று தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர மொத்தம் 7 round interview. அதுல எல்லாம் பாஸ் பண்ணாதான் வேலை, பல கோவேர்ந்மேன்ட் வேலைக்கும் (army முதல் எடுபிடி வரை) தேர்வு உண்டு. ஆசிரியர் வேலைக்கு மட்டும் என் தேர்வு இருக்க கூடாதுன்னு நெனைக்குறீங்க. படித்தால் மட்டும் போதாது திறமையை நிருபிக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Amuthu - Mannarkudi  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-201220:10:04 IST Report Abuse
Amuthu என்ன கூறுகிறீர்கள்? வினாத்தாளை பார்த்துவிட்டு உங்களது கருத்தைக் கூறுங்கள்? நேரம் போதுமா போதாதா என்று ?அதி்காரிகளே ஒத்துக்கொண்டனர். ஆனால் நீங்கள் ஏனோ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sivakumar Muthusamy - Chennai,இந்தியா
13-ஜூலை-201219:01:43 IST Report Abuse
Sivakumar Muthusamy As expected most of the comments is against the people who took exams. But the reality is otherwise. I didn&39t write the exam. My wife took the exam. I have to accept that the exam is far far difficult for any normal teacher or teacher aspirant to pass. The reasons : 1. First - the no.of subjects - Graduate teachers has to attempt - Tamil (or equivalent), English, Maths and Science or Social and Child Psychology. 2. Irrespective of the major subjects they have studied in college they have to attempt other subjects also (i.e an aspiring Tamil teacher has to compulsorily take English and Maths or Social Sciences) 3. 30 questions each in 5 subjects totaling 150 questions to be answered in 90 minutes. 4. The candidate has to get 90 out of 150 to qualify - so they have to get atleast 18 and above in each of the subjects. 5. Tamil - 30 questions - unless you have majored in Tamil it will be difficult to get 18 and above questions correct. 6. English - 30 questions - if the candidate has studied in English medium getting 18 is relatively easy, otherwise it is very difficult. 7. Maths - 30 questions - maths graduates themselves found the maths questions tough and lengthy, non-maths graduates will struggle to get the minimum marks. 8. Science - 30 questions - this is the worst - 30 questions split among the four majors - physics, chemistry, botany and zoology - with above average questions - very difficult to get the minimum mark. (Say for example Chemistry had just 4 to 5 questions, so a graduate teacher majored in Chemistry has just this few questions to answer in his/her core subject, and almost 90% questions outside his/her core subjects) 9. Child Psychology - very abstract and higher level - I am sure none of it is being followed in the teaching methodologies - then why have that subject at all ? 10. Social Sciences (History & Geography) - is relatively easy. The format, no of subjects, depth of the questions have really made it difficult. It might need a one year preparation or equivalent to pass this level of difficulty. In reality there may be just about 3 to 5 % pass percentage (people who might get 90 out of 150 ). I genuinely feel the format is wrong - the teachers should be tested on their core subjects with some minimum expected quality in language etc. But this test format expects very high level of knowledge in all the subjects . The following observation is not to denigrate anybody but just stating the fact : We have to face the fact. In reality, school teaching is not an attractive profession. You can&39t expect super-stars to be teachers, right ?. All the top performers in schools and colleges have taken professional courses and joined elsewhere. So what we have is above average, but not-so-brilliant- (but equally good and hardworking people who are willing to take the profession) graduates. It will be unfair to expect them to perform in these kind of tests ( I am sure even the engineering graduates might find it difficult without adequate preparation). So somebody has to seriously think and make right kind of ion procedure for the aspiring teachers.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Prabha Prabhaharan - Sivagangai,இந்தியா
13-ஜூலை-201217:30:04 IST Report Abuse
Prabha Prabhaharan question easy, but time pathala
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
RAJA . R - chennai,இந்தியா
13-ஜூலை-201216:34:32 IST Report Abuse
RAJA . R கடைசில இல்லிச்சவயன் இந்த ஆசிரியர் தான் . இப்படி எல்லாத்துலயும் பாஸ் பண்ணிட்ட மட்டும் நல்ல ஆசிரியர்னு ஒதுக்கு இவன்களா ஸ்டுடென்ட அடிக்க கூடாது ரிசல்ட் கொடுக்கணும். பிரைவேட் ஸ்கூல் காலேஜ்ல வேலை பார்க்கிற ஆசிரியர்க்கு நடக்கிற கொடுமை சொல்லி மாளாது . சம்பளம் குறைவு வேலை நேரம் அதிகம் சிறந்த ஆசிரியருக்கு சம்பளம் அதிகம் கொடுக்கணும்னு திறமை இல்லாத ஆசிரியரை செலக்ட் பண்ணுறது . நிறைய கொடுமை . அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது ஆனால் பிரைவேட் நிறுவனங்களை சீர்படுத்தலாம் இதை அரசு செய்யாதது காரணம் பிரைவேட் நிறுவனம் அனைத்தும் அரசியல்வதியோடது . முதலில் பிரைவேட் கல்வி வியாபார கூடங்களை மூடுங்கள் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Anandhiselva - Madurai,இந்தியா
13-ஜூலை-201215:36:06 IST Report Abuse
Anandhiselva என்ன தான் ஒருவர் படித்திருந்தாலும், எந்த ஒரு கம்பெனியும் தேர்வு நடத்தாமல் வேலை தருவது இல்லை, இதை அரசாங்கம் செய்தால் மட்டும் பிழையா? அதுவும் ஒரு எதிர்கால சமூகத்தை நிர்மாணிக்கும் முக்கியமான ஆசிரியர் வேலைக்கு தேர்வு நடத்துவதில் என்ன தவறு வந்துவிட்டது? என்னக்கு தெரிந்த பலர், பரீட்சை பாஸ் செய்ய பணம் கொடுத்திருக்கின்றனர், குறிப்பாக ஆசிரியராக நினைத்து படிப்பவர்களே பணம் கொடுத்து பாஸ் செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் எதிர்கால இந்தியாவை எப்படி ஒப்படைப்பது?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.