சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், 16 எக்ஸ்பிரஸ் ரயில்களில், நவ., 9ம் தேதிக்கான அனைத்து இடங்களும், முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
ஐந்து நாள்: இவ்வாண்டு, நவ., 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை), தீபாவளி பண்டிகை கொண்டாடப் படுகிறது. பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர், நவ., 9ம் தேதி வெள்ளிக்கிழமையிலிருந்து, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுடன் சேர்த்து, பண்டிகை நாளான செவ்வாய்க்கிழமை (13ம் தேதி) வரை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதனால், வரும் நவ., 9ம் தேதி, பயண டிக்கெட் முன்பதிவு செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், நேற்று காலை கூட்டம் அலைமோதியது.
"ஹவுஸ்புல்': சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், மயிலாப்பூர் ரயில் நிலையங்களில், நேற்று முன்தினம் இரவிலிருந்தே, பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு, கவுண்டர் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் சேது, முத்துநகர், அனந்தபுரி, செங்கோட்டை, நெல்லை, பாண்டியன், ராமேஸ்வரம், மன்னார்குடி, ராக்போர்ட், சேலம் மற்றும் காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும் கோவை சேரன், மேட்டுப்பாளையம் நீலகிரி மற்றும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கான இடங்கள் அனைத்தும், சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்த ரயில்களில், மற்ற வகுப்புகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும், நேற்று மதியம் 2 மணிக்கு முன்பாகவே, முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பகலில் இயக்கப்படும், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டாம் வகுப்பு ஏ.சி., சேர்கார் இடங்கள் அனைத்தும், நேற்று முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில், குறைந்த இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. பல்லவன், குருவாயூர் கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலில், அதிக இடங்கள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. நவ., 10ம் தேதி: நவ., 9ம் தேதி, மொத்தம் 16 ரயில்களில், அனைத்து வகுப்பு டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், நவ., 10ம் தேதிக்கு முன்பதிவுக்கு, இன்று காலை 8 மணிக்கு மையத்திற்கு சென்றால், படுக்கை வசதியுடன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
It is high time that the railways should introduce more short distance express trains with limited stops at regular intervals, more frequencies or trips are needed to avoid the heavy rush in long distance express trains.In addition to that dual line broad gauging schemes are at snail pace and it should be done on war footing to operate more train services.The government should allocate,invest more funds to railways rather investing more in importing crude oil. g.s.rajan,chennai.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.