சென்னை;அண்ணா பல்கலை இணைப்பிற்கு, விரைவில் அரசாணை வெளியிடப்படும் என, உயர்கல்விஅமைச்சர் பழனியப்பன் கூறினார். இம்முறை, பொறியியல் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில், விண்ணப்பித்த அனைவருக்கும், "சீட்' கிடைக்கும் என்றும், அவர் தெரிவித்தார்.அண்ணா பல்கலையில், பொறியியல் சேர்க்கைக்கான, பொது கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் 10 மாணவருக்கு, பொறியியல் சேர்க்கைக்கான உத்தரவுகளை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
இரண்டு மாதங்களில்...பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அண்ணா பல்கலைகள் இணைப்பிற்கான அரசாணை, விரைவில் வெளியிடப்படும். அரசாணை வந்ததும், அண்ணா பல்கலையில்,"சிண்டிகேட்' அமைக்கப்பட்டு, அதிலிருந்து ஒருவர், துணைவேந்தர் தேர்வுக் குழுவில் நியமிக்கப்படுவார்.மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழு அமைத்ததும், புதிய துணைவேந்தருக்கான பரிந்துரை பட்டியல் தயாரித்து, கவர்னருக்கு அனுப்பப் படும். இரு மாதங்களுக்குள், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.
4,200 புதுசு;முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களில், எட்டு பேர், கிண்டி பொறியியல் கல்லூரியையும்;இருவர், கோவை பி.எஸ்.ஜி.,கல்லூரியையும் தேர்வு செய்தனர். இ.சி.இ., - எம்.இ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுகளை, அதிகமான மாணவர்கள் தேர்வு செய்தனர். நேற்றைய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட, 106 பேரில், 50 பேர், வரவில்லை. இவர்கள், மருத்துவ படிப்பை தேர்வு செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
புதிதாக அனுமதி பெற்ற, 14 பொறியியல் கல்லூரிகள், மொத்த இடங்களையும், கலந்தாய்வுக்கு வழங்கி உள்ளன. தலா, 300 இடங்கள் வீதம், 4,200 இடங்கள், கலந்தாய்வில் நிரப்பப்படும்.1.73 லட்சம் உறுதி:இதனால், கலந்தாய்வு மூலம், 1,73,597 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி பெற்ற பொதுப்பிரிவினர் எண்ணிக்கை, 1,69,956. எனவே, விண்ணப்பதாரர் அனைவருக்கும், "சீட்' கிடைக்கும்.
"கலந்தாய்வில் 50 பேர் வரவில்லை'
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விரைவில் துணை வேந்தரை நியமனம் செய்யுங்கள். ஆயிரகணக்கான மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் PhD ஆய்வு செய்யும் மாணவர்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. திருச்சி அண்ணா பல்கலை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன?. அனைவரும் பி இ மாணவர்களை மட்டும் பேசுகிறார்கள். ஆனால் எம் இ மற்றும் பி எச் டி மாணவர்களை பற்றி யாரும் யோசிப்பதாக தெரியவில்லை. தயவு செய்து இதற்கு ஒரு முடிவு செயுமாறு கேட்டுகொள்கிறேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.