சண்டிகர் : ""பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொள்வார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கூறியதாவது:பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, இதற்கு முன் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுவது, மிகவும் தவறானது. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, இதற்கு முன்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கண்டறிந்துள்ளோம். பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை, பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொள்வார். நிதிப் பற்றாக்குறையை போக்குவதற்கும், சேமிப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை, பிரதமர் அடையாளம் கண்டுள்ளார். அவை, முறையாக செயல்படுத்தப் படும். நம் நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.
சட்ட விரோதம்:உ.பி.,யில் உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து அமைப்பினர், பெண்களுக்கு எதிராக, சட்ட விரோதமாக, கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து, அதை அமல்படுத்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக சமுதாயத்தில், இதுபோன்ற சட்ட விரோத உத்தரவுகளுக்கு இடம் இல்லை. உ.பி.,யின் பாக்பாத் கிராமத்தில், இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிடும் என, நம்புகிறேன்.
ஆபரேஷன் புளூ ஸ்டார்:பஞ்சாபில் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைகளின்போது கொல்லப் பட்டோருக்கு, பொற்கோவிலில் நினைவிடம் அமைக்கப்படுவதாக வெளியான தகவல், மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அங்கு மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். சிரோன்மணி குருத்வாரா பிரபந்திக் கமிட்டி தான், இதை செய்து வருவதாகவும், மாநில அரசுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் என்னிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம்:பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து இன்னும் நாம் விடுபடவில்லை. ஆனாலும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த விஷயத்தில், தனிப்பட்ட நபர்களையும், அமைப்புகளின் நடவடிக்கைகளையும், மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், பெரிய அளவிலான பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
உறவு:மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பதற்காகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், பிராந்திய கவுன்சில்களை, மேலும் பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பணவீக்கம் பெருமளவு அதிகரித்த நேரத்திலும் கிட்டத்தட்ட பதிமூன்று சதவீதத்திற்கு மேலாக சென்றபோதும் விலை வாசி குறையல , தற்போது பத்து சதவீதத்திற்கு கீழே குறைந்துள்ள போதிலும் விலைவாசி துளிக்கூட குறைய வில்லை. என்ன பண வீக்கமோ, என்ன கருமமோ? தெரியல . என்ன புள்ளி விவரமோ மக்களின் மண்டைக்கு ஒண்ணும் புரியல. பாழாப்போன புள்ளி விவரம் கூறுவது பொய்யா ?மொத்தத்தில் நேர்மையாகவும் ,உண்மையாகவும் உழைத்து சம்பாதிக்கும் பணத்திற்கு மதிப்பு இல்லை ,குறுகிய காலத்தில்,குறுக்கு வழியில் முறைகேடாகவும் ,சட்ட விரோதமாகவும் சுருட்டும் பணம் உண்மையான உழைப்பின் மதிப்பை, கௌரவத்தை குலைத்து விட்டது மற்றும் சிதைத்துவிட்டது என்பதுதான் நிதர்சனம் ....இன்னும் உங்களை நம்ப மக்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ?விலைவாசி குறையும் என்ற நம்பிக்கையில் மளிகை கடை வாசலில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தால் என்ன ஆவது ?சிந்திப்பர சிதம்பரம் ?
ஜி.எஸ்.ராஜன்
சென்னை
சிதம்பரம் சொல்வது முற்றிலும் சரியே. பிரதமர் கவனித்தால் வளர்ச்சி நிச்சயம் வரும். அவர் ராஜாவை தட்டி கொடுத்து கவனித்தார். இப்போ ராஜா பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி. கல்மாடியை கவனித்தார். அவரும் நல்ல வளர்ச்சி அடைந்தார். இந்த list-இல் சோனியா, சரத் பவார், சிதம்பரம் etc இருக்கிறார்கள். So, பிரதமர் கவனித்தால், வளர்ச்சி வரும்...ஆனால் யாருக்கு என்று தான் தெரியாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.