பெங்களூரு:""சதானந்த கவுடா ராஜினாமா, மன கஷ்டத்தை கொடுத்துள்ளது. ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுத்தது சரியல்ல,'' என்று கர்நாடக கவர்னர் பரத்வாஜ், எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழக்குகள், ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டாம். அப்படி வழங்கினால், ஆட்சி நடத்த சிரமம் ஏற்படும். ஆட்சிக்கும் நல்லதல்ல என்று, தன்னை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டரிடம், கவர்னர் பரத்வாஜ் கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் பட்டியலை பார்த்தவுடன், கவர்னர் அதிர்ச்சியடைந்தார்.வழக்கு நிலுவையிலுள்ள முருகேஷ் நிரானி, சோமண்ணா, சி.டி.ரவி, ரேணுகாச்சார்யா ஆகியோர் பெயர், பட்டியலில் இடம் பெற்றிருந்ததால், அதிருப்தியடைந்த கவர்னர், ஷெட்டரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். "பா.ஜ., மேலிட உத்தரவின் பேரில், அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது' என்று ஷெட்டர் கூறியதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கவர்னர் பரத்வாஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக அமைச்சரவையில், ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்களுக்கு, அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் என, ஷெட்டரிடம் கூறியிருந்தேன். என் ஆலோசனையை ஏற்று நடப்பதாக கூறியிருந்தார். ஆனால், அதன்படி அவர் நடந்து கொள்ளவில்லை.சதானந்த கவுடாவின் ராஜினாமா, எனக்கு மன கஷ்டத்தை அளித்துள்ளது. காரணம் கேட்டால், அனைத்துக்கும் கட்சி மேலிடம் காரணம் என்கின்றனர். இதில் நான், ஒன்றும் செய்ய முடியாது என்றார்.இவ்வாறு கவர்னர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர் மத்தியில் சட்ட அமைச்சரா இருந்த போது,போபோர்ஸ் கோட்ரோக்கியின் வங்கி கணக்கு லண்டனில் முடக்கப்பட்டு இருந்தது. இவரே ஒரு கடிதத்துடன் நேரில் சென்று கொடுத்தார். அடுத்த கணம் வங்கி கணக்கு விடுவிக்க பட்டது,ஒரு சில மணி நேரத்தில் கணக்கிலிருந்த பணம் முழுதும் மாயமானது,இது சரித்திரம். காங்கிரஸ் அது அவரின் தனிப்பட்ட செயல் என்றது.இப்போ சொல்லுங்க சார்,ஊழல்னா என்ன?இப்போ கவர்னராய் இருக்கிறார்.
Sir,
Then, let this Barathwaj tell New president incumbent to sack ismail singh, governor-Pondy as Baratwaj statement will apply to ismail also.
First do that and then you can talk of other corrupt ministers in Karnataka ministry. Baratwaj is the main culprit behind all these confusions. Also Sack P chidambaram, who is the kingpin in 2G scam, how come he can remain as Union Home minister while he is involved in such huge money scandal. Baratwaj, why don&39t you advise your beloved PM to sack PC?? You throw stones while standing behind a glass building. RAORAMESH/Chennai
தனக்கு ஒரு கோடி ரூபாயில் கார் வேண்டும் என்று அடம் பிடித்து சொகுசு காரில் பவனி வரும் இந்த ஆளுநர் பரத்வாஜ் காங்கிரசின் ஒரு எடி பிடி. அல்லகைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரண புருஷர். அலங்கார பொம்மை பதவியை துஷ்ப்ரயோகிக்கும் இந்த அல்லகைக்கு மந்திரி சபையில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கிடையாது. அதை முடிவு செய்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிதான். ஆதலால் மூடிகிட்டு கையெழுத்து போடு.
உங்களை மாதிரி ஒரு கவர்னர் தமிழ்நாட்டில் இல்லையே சாமி... அது சரி, உங்க ஊர்லே தானே கேஸ் நடக்குது, அங்கேயே புடிச்சி உள்ளே போட வேண்டியது தானே. இங்கே தானே சந்தனத்தையும் சாணியையும் ஒண்ணா நினைகிரானுங்க விசிலடிச்சான் குஞ்சிங்க மொள்ள மாரிங்க கீச்சான் குப்பத்திலே இருந்துண்டு சைனா, சிங்கபூர் ரேஞ்சுக்கு பீலா விடுறானுங்க..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.