delhi Ushhh | அதிர்ச்சியான தேர்தல் சர்வே| Dinamalar

அதிர்ச்சியான தேர்தல் சர்வே

Added : ஜூலை 14, 2012 | கருத்துகள் (48)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அதிர்ச்சியான தேர்தல் சர்வே

தேசிய அரசியல் கட்சிகள், கடந்த சில ஆண்டுகளாகவே, தேர்தல் சர்வே நடத்தி வருகின்றன. லோக்சபா தேர்தல் நடைபெற்றால், "தங்கள் கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும், ஆட்சி அமைக்க முடியுமா' என்று, தனியார் நிறுவனங்கள் மூலம் சர்வே செய்கின்றன. சென்ற வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பாக எடுக்கப்பட்ட சர்வே, கட்சி தலைவர் சோனியாவின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அந்த சர்வே முடிவுகளைப் பார்த்து, அதிர்ந்து விட்டார் சோனியா. "இப்போதைய நிலவரப்படி, தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால், காங்கிரசுக்கு வெறும், 87 சீட்டுகள் தான் கிடைக்கும்' என்று அந்த சர்வே தெரிவித்தது. தற்போது, லோக்சபாவில், 207 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ், மூன்று இலக்கத்தைக் கூட தாண்டாது என்கிறது சர்வே. இப்போது உள்ள விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றைப் பார்க்கும் போது, சர்வே சரிதான் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், தேர்தல், 2014ல் தானே நடைபெறப்போகிறது. அப்போது நிலைமை மாறிவிடும் என்று, காரியக் கமிட்டியில் சொல்லப்பட்டது. இப்படி ஒரு மோசமான நிலையிலும், ஒரு நல்ல விஷயம், "பா.ஜ., வுக்கு, 93 சீட்கள் கிடைக்கும் என்கிறது சர்வே. எங்களை விட அவர்களுக்கு, ஆறு சீட்டுகள் தானே அதிகம்' என்று சந்தோஷப்படுகின்றனர் காங்கிரசார்.


"டைம்' விவகாரத்தில் நடந்த கூத்து: அமெரிக்காவிலிருந்து வெளிவரும், "டைம்' பத்திரிகையில் சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரை, இந்தியாவில் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், "இந்திய பிரதமர் மன்மோகன் சிங், எதிர்பார்த்த அளவிற்கு சரியாக செயல்படவில்லை' என்று, கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த பத்திரிகை. இதை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து, பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதை தடுத்திருக்கலாம் என்று, காங்கிரஸ் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து, சில காங்கிரஸ் தலைவர்கள் சொன்னது இது தான்... பிரதமரை பேட்டி எடுக்க வேண்டும் என்று, "டைம்' பத்திரிகை கேட்டது. கேள்விகளை மெயிலில் அனுப்புங்கள் என்று சொல்ல, அனுப்பி வைக்கப்பட்டது. பதில் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து, பதில் வரவேயில்லை. கடைசியாக பிரதமரின் பதில் மெயிலாக வந்த போது, "டைம்' பத்திரிகை அச்சுக்கு போய்விட்டது. நொந்து போன பிரதமர் அலுவலகம், "டைம்' பத்திரிகையில் பிரதமர் தொடர்பான கட்டுரை வரும் போது, பிரதமரின், "இ-மெயில்' பேட்டி வர வேண்டும் என்று முயற்சித்தனர். டில்லியின் பிரபல ஆங்கில தினசரியில், "டைம்' பத்திரிகைக்கு பிரதமர் அளித்த பேட்டி, கடைசியில் டில்லி பத்திரிகையில் வெளியாயிற்று. இந்த பிரச்னையை தடுத்திருக்கலாம் என்று வருந்துகின்றனர் காங்கிரசார்.


என்ன ஆயிற்று ஜெய்ராம் ரமேசுக்கு? மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திடீரென டில்லியின் அகில இந்திய மருத்துவ கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு, ஊரெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அமைச்சருக்கு என்னவாயிற்று என்று அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அதிர்ச்சி. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஜெய்ராம், அடிக்கடி கிராமப்புறங்களுக்கு விசிட் செய்வார். மத்திய அரசின் உணவுக்கு வேலை வாய்ப்பு திட்டம் சரிவர செயல்படுகிறதா என்பதை நேரடியாக தெரிந்துக் கொள்வார். ஜெய்ராமிற்கு என்ன வியாதி என்று யாருக்குமே தெரியவில்லை. அவருக்கு போன் செய்து விசாரித்தவர்களுக்கு, "ஒன்றுமில்லை' என்று பதிலளித்தார். இப்போது தான் எது நடந்தாலும், உடனே இன்டர்நெட்டில் விஷயம் வெளியாகிவிடுகிறது. ஜெய்ராமிற்கு இதயத்தில் பிரச்னை என்று, ட்விட்டரில் செய்தி பரவ, அனைவருக்கும் ஷாக். ஆனாலும், ஜெய்ராம் வாயைத் திறக்கவில்லை. உண்மையிலேயே, ஜெய்ராமிற்கு என்னதான் ஆயிற்று. ஏதோ பூச்சி கடித்து கட்டி வந்துவிட்டதாம். கிராமம், கிராமமாக காடு மேடுகளில் சுற்றும் போது, ஏதாவது விஷப் பூச்சி கடித்திருக்கலாம் என்கின்றனர். இதையெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்று அமைதியாக இருந்தார் அமைச்சர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NVRAMANAN - chennai ,இந்தியா
24-ஆக-201201:27:02 IST Report Abuse
NVRAMANAN கவலைபடாதீர்கள், தற்போது உள்ள சூழலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடக்க போவது இல்லை. அப்படி ஆனால், நடக்க போவது என்ன தெரியுமா, புதிய ஜனாதிபதி எதுக்கு வந்திருக்கார், அவர் பார்த்து கொள்ளுவர், நிச்சயம் ஜனாதிபதி ஆட்சி வர நிறைய வாய்புகள் உள்ளன, இது நிச்சயம் நடக்கும், அதற்காகவே காங்கிரஸ் கட்சி படாத படு பட்டு பிரணாபை ஜனாதிபதி ஆக்கியதை யாவருக்கும் தெரிந்ததே,எந்த ஒரு ஆளும் கட்சியும் தனக்கு இருக்கு அதிகாரங்கள் -பவர்- எவற்றை விட்டு கொடுக்க, சும்மா வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காது, அதுவும் நம்ப காங்கிரஸ் கட்சி க்கு யாரும் சொல்லி தர தேவை இல்லை , மதங்களின் பெர்யரில் நடக்க இருக்கும் தேர்தல் என்கிற இரண்டாம் மகாபாரத யுத்தம் வெகு தொலைவில் இல்லை, ந.வ ரமணன் கலிபோர்னியா USA
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
10-ஆக-201215:29:41 IST Report Abuse
Ramasami Venkatesan சென்ற பிஜேபி வாஜ்பாய் ஆட்சியில் இவ்வளவு ஊழல்களும், விலை ஏற்றமும் நிகழவில்லை என்று கூறலாம் - பத்திரிக்கைகளிலும் அதிகமாக விமர்சிக்கப்படவில்லை. நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் இப்போதைய BJP இல் ஒற்றுமை மிகவும் தேவையான ஒன்று. ஈகோ வை தூக்கி எறியவேண்டும். எனக்கு தெரிந்து பிஜேபி ஆட்சியில் தான் அந்நிய செலாவணி கையிருப்பு பெருக தொடங்கியது. இப்போதோ வெளிநாட்டில் கருப்பு பணம் பெருக தொடங்கி விட்டது. இதுதான் காங்கிரெசின் செயல் வெற்றி. BJP சில கொள்கைகளை தளர்த்திகொண்டால் அபார வெற்றி நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Sakthi Vel - chennai,இந்தியா
24-ஜூலை-201210:04:49 IST Report Abuse
Sakthi Vel நோ காங்கரஸ் பார்ட்டி பிஜேபி மட்டுமே போதும். கடவுள் கையிலே உள்ளது. சக்திவேல் சென்னை
Rate this:
Share this comment
Cancel
Kurukkumuttan, Chennai - Beirut,லெபனான்
21-ஜூலை-201215:07:13 IST Report Abuse
Kurukkumuttan, Chennai தீவிரவாதத்துக்கு எதிரா பிஜேபி ஸ்ட்ரோங்க ஆக்க்ஷன் எடுக்கும்னு எழுதற நிறைய பேரு காந்தகார் சம்பவத்த சுலபமா மறந்துட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
mohamed farook kadermohideen - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-201213:19:40 IST Report Abuse
mohamed farook kadermohideen வுருப்படயா யாதாவது செய்யுங்கய்யா ஒரே புலம்ப்பல்
Rate this:
Share this comment
Cancel
venkata - chennai ,இந்தியா
21-ஜூலை-201208:43:52 IST Report Abuse
venkata முன்னூறு சீட் வேணும் . ஐந்து வருடம் ஆட்சி . அறுபது சீட் இருந்தால் ஒருவருடம் பிரதமர் பதவி . ஜெயலலிதா , ஜகன் , நவீன் பட்நாயக் , மாயாவதி , மமதா, தலைக்கு ஒரு வருடம் பிரதமர் மூன்றாவது அணிக்கு ஜே
Rate this:
Share this comment
Cancel
Dilli. M - chennai,இந்தியா
21-ஜூலை-201207:46:41 IST Report Abuse
Dilli. M நான் ஒன்று மட்டும் சொல்லி கொள்ளவிரும்புறேன் நாட்டில் கொள்ளை அடிப்பதை தடுக்க எல்லாம் எல்லோருக்கும் கி டைக்க சுய நலம் பாராமல் நட்டு நலனுக்காக வேண்டி அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Nanban - Tuticorin,இந்தியா
21-ஜூலை-201204:53:03 IST Report Abuse
Nanban எல்லா மதத்திற்கும் அதரவு தருபவர்களுக்கு ஒட்டு போடுகள்.
Rate this:
Share this comment
Cancel
G. Saravanakumar - Tuticorin,இந்தியா
20-ஜூலை-201213:25:07 IST Report Abuse
G. Saravanakumar நம்ம ஜெயலலிதா மேடம் தான் இனி primeminister ஆகணும் . அம்மா நிஜமான நேஷனல் பார்ட்டி ஆரம்பிக்க வேண்டும் . அது நிச்சயமாக காங்கிரஸ் ..பிஜேபி ..கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும்.ஒரு முடிவும் எடுக்க தெரியாத சோனியாஜி யும் வேண்டாம் திசை தெரியாமல் திரியும் பிஜேபி யும் வேண்டாம் ..நிஜமான தேசிய கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி தான் . பயங்கரவாதம் , நதிநீர் பிரச்சினை , எல்லை பிரச்சினை போன்ற முக்கியமான பிரச்சினைகளில் ஒரு தெளிவான முடிவு தரக் கூடிய தலைவர் ஜெயலலிதா மட்டுமே .ஜெயலலிதா பிரதமர் ஆகும் நாள் இந்தியா வல்லரசு ஆகி விடும். jaihindh ...
Rate this:
Share this comment
Vignesh Pilot - Coimbatore,இந்தியா
10-ஆக-201207:40:20 IST Report Abuse
Vignesh Pilotகல்வி கடனை தள்ளுபடி செய்து கிராம புற இளைனர்களை படிக்க வைக்கும் கட்சிக்கு நாம் ஓட்டு அள்ளிப்போம் ...
Rate this:
Share this comment
Cancel
Balakumar Nattamai - Madurai ,இந்தியா
20-ஜூலை-201211:22:19 IST Report Abuse
Balakumar Nattamai உண்மையில் பார்த்தால் காங்கிரஸ் தான் பயங்கரவாத கட்சி,ஊழல் கட்சி ,கொலைகார கட்சி,அடிதடிக்கட்சி.அப்படி பார்த்தால் காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லையா? பார்த்தால் இவர்கள் ஆட்சியில் தான் நிறைய குண்டு வெடிப்புகள் நடக்கின்றன. இவர்கள் தான் தீவிரவாதத்தை வளர்க்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை