Ban on LTTE continues in India: Centre | விடுதலைப்புலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து நீடிப்பு: தடையை நீட்டித்து மத்திய அரசு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (82)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான நிலையை விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்து கடைபிடிப்பதாலும், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு இன்னும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், அந்த அமைப்பு மீதான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்ட விரோத அமைப்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள், நாட்டின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளன. இந்த பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளை, அனைத்து வழிகளிலும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதனால், விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க வேண்டியது அவசியம். தனி ஈழ கோரிக்கை ஆதரவாளர்களும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், தொடர்ந்து மக்களிடையே பிரிவினைவாத போக்கை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். இந்தியாவில்

குறிப்பாக தமிழகத்தில், புலிகளுக்கு ஆதரவான நிலையை அதிகரிக்க முற்பட்டுள்ளனர்.
எதிரான பிரசாரம்: இலங்கையில் நடந்த போரில், விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வி அடைய, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே காரணம் எனக் கூறி, இலங்கைத் தமிழர்கள் மத்தியில், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை, புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். மேலும், இணையதளம் மூலமாகவும், பல்வேறு புலிகள் ஆதரவு கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர்; இணையதளம் மூலமாக, இது போன்ற பிரசாரங்கள் செய்யப்படுவது தொடர்வதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில்,அதுபாதிப்பை ஏற்படுத்தலாம். கொள்கைக்கு எதிர்ப்பு: இலங்கையில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மிஞ்சிய விடுதலைப் புலிகள், அந்த அமைப்பை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் புலிகள் அமைப்பினர், தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து தமிழகத்திற்கு அனுப்பி வருவதும், அப்படி

Advertisement

அனுப்புபவர்களை, சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் ஆதரவு பெற்ற அமைப்புகளும், தனி நபர்களும், நாட்டில், புலிகள் தங்களுக்கான ஆதரவை அதிகரிக்க உதவி வருவதாகத் தெரிகிறது. கோரிக்கையை விடவில்லை: தனி தமிழ் ஈழம் பெறுவது என்ற புலிகள் அமைப்பின் நோக்கம், இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கையில் நடந்த போரில், புலிகள் அமைப்பினர் தோல்வி அடைந்தாலும், அவர்கள் தங்களின், "தனி ஈழம்' கோரிக்கையை கைவிடவில்லை. தங்களின் லட்சியத்தை அடைய, தொடர்ந்து மறைமுகமாக பணியாற்றி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் நிதி மற்றும் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், புலிகள் அமைப்பில் மீதமுள்ள தலைவர்கள், சிதறிப் போன தங்கள் அமைப்பினரை மீண்டும் ஒன்று சேர்க்கும் முயற்சியிலும், உள்நாடு அளவிலும், சர்வதேச அளவிலும் தங்கள் அமைப்பை பலப்படுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (82)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madukkur Nesan - Madukkur ,இந்தியா
16-ஜூலை-201200:45:59 IST Report Abuse
Madukkur Nesan அப்போ அய்யாவோட டொசோ மாநாடு நாடகத்துக்கு ஆப்புன்னு சொல்லுங்க.?????? மதுக்கூர் நேசன்
Rate this:
Share this comment
Cancel
Rajaram Ramkumar - CHENNAI,இந்தியா
15-ஜூலை-201218:20:20 IST Report Abuse
Rajaram Ramkumar இந்திய அரசு யாருமே இல்லாத டீ கடையில் டீ ஆதுகிறது
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
15-ஜூலை-201215:18:01 IST Report Abuse
Rss இந்தியாவுக்கு எதிராக எந்த அமைப்பு செயல் பட்டாலும் அதை வளரவிடக்கூடாது ...
Rate this:
Share this comment
Cancel
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
15-ஜூலை-201212:54:43 IST Report Abuse
Ashok Raja வெரி குட்...அடுத்து வர மத்திய அரசு காங்கிரஸ் மற்றும் தி.மு.கவையும் கூடவே சேர்த்து தடை செஞ்சுட்டா இந்தியாவுக்கு பாதுகாப்போட சேர்த்து சுபிட்சமும் கிட்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-201212:53:34 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. இந்தியாவிற்கு ஆபத்து விடுதலை புலிகாலலேயோ, பாகிஸ்தானலேயோ, சீனாவினாலேயோ இல்லை.ஆபத்து நமது இந்திய அரசியல்வாதிகளால்தான். அமெரிக்க ஜனாதிபதியாக உங்களை தேர்தெடுக்கிறோம்,அதற்க்கு "கை" மாறாக இந்தியாவை கொடுத்துவிடுங்கள் என்றால் கொடுத்துவிடுவார்கள்.இவர்களுக்கு கமிஷன்,ஊழல்,கறுப்புபணத்தை பதுக்குவது,பொய்.பிரட்டல்.பித்தாலாட்டம் இதைத்தானே செய்துக்கொண்டு உள்ளார்கள்..நம் அரசியல்வாதிகலோ,நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த சுதந்திரத்தை,தவறாக பயன்படுத்தி, தானும் தன் குடும்பமும் வளம்பெற மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
singam - madurai,இந்தியா
16-ஜூலை-201200:16:13 IST Report Abuse
singamஇது உண்மைதான்...
Rate this:
Share this comment
Cancel
raja.s - cuddalore,இந்தியா
15-ஜூலை-201212:11:38 IST Report Abuse
raja.s புலிகள் அமைப்பு உயிரோட தான் இன்னும் இருக்கா? அதனால யாருக்கு என்ன லாபம்? ஈழதமிழர்களுக்கா? இல்லை இந்திய தமிழர்களுக்கா? ஈழத்தமிழர்களே இதை விரும்ப மாட்டார்கள். ஈழத்தமிழர்களுக்கு இப்போதைக்கு தேவை நிம்மதி மட்டுமே. கடைசி சிங்களவன் இருக்கும் வரை தனி ஈழம் சாத்தியம் இல்லை. புலிகள் அமைப்போ முற்றாக துடைக்கப்பட்டு விட்டது அங்கு. அதற்க்கு நம் அரசாங்கமும் உதவியது. புலிகள் அமைப்பின் பெயரை சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள் வேண்டுமானால் நம் இந்திய அரசின் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போடலாம். புலிகள் மீதான தடையை நீக்கி இருந்தால் நாம் ஆச்சர்யபடலாம். ஆனால் இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வழக்கம் போல ராஜபக்சே சந்தோசப்பட்டு இருப்பார். ஈழத்தமிழர்களும் ராஜபக்சேவின் மறைமுக தாக்குதலில் இருந்து தப்பித்தார்கள் என்றே நான் கருதுகிறேன். நம் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெறும் ஒவ்வொரு போராட்டமும் அவர்களுக்கு எதிராகவே அங்கே திரும்பும்(தற்போதைய சூழ்நிலையில்). நம்மால் அவர்களுக்கு உதவ முடிந்ததெல்லாம் இப்போதைக்கு இது மட்டுமே இருக்க வேண்டும். எல்லாம்தான் முடிஞ்சி போச்சி இனி தடை பண்ணிதான் என்ன ஆவப்போது? என்னமோ பண்ணிட்டு போகட்டும் விடுங்கள். காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும். இதுல முக்கியமாக ஒன்றை நாம் கவனிக்கணும். புலிகள் அமைப்பு இன்னும் உயிரோட இல்லை அனால் புலிகள் இன்னும் உயிரோடதான் இருக்கிறார்கள் என்று நம் இந்திய அரசாங்கம் மறைமுகமாக வெளி உலகத்திற்கு தெரிவிக்கின்றனர் என்று நம்பலாம். வெயிட் அன் வாட்ச்....
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
15-ஜூலை-201212:07:21 IST Report Abuse
maran உண்மையில் விடுதலை புலிகளால் ஆபத்தோ ....? இல்லையோ ....? இந்திய அரசியல்வாதிகளால் நிறைய ஆபத்து இருக்கு .....உங்களுக்கு எப்போ தடை வரும் ........? மிகுந்த எதிர்பார்ப்புடன் ......
Rate this:
Share this comment
Cancel
ANNADHURAI - DEVAKOTTAI,இந்தியா
15-ஜூலை-201211:45:57 IST Report Abuse
ANNADHURAI இந்தியர்கள் தமிழருக்கு என்ன என்ன கொடுமைகள் செய்தார்கள், செய்கிறார்கள். என்பது தெரியாதவர்கள் பித்து பிடிச்சு இந்தியா என்னும் மாயையில் பேசும் பேச்சு. எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ் தேசியம் வளர்ந்து எழும். அதை யாராலும் தடுக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Arivu Azhagan - Texas,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201211:26:01 IST Report Abuse
Arivu Azhagan ராஜீவ் காந்தியை கொன்றது தாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூறிவிட்டு செத்தபோதும், பெண் என்ற மனிதாபிமானம் கருதி நளினியின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா காந்தி பரிந்துரைத்தும், இலங்கைத்தமிழர்களுக்கு மறுவாழ்வும், அரசியல் அதிகாரப்பகிர்வும் கிடைக்க தொடர்ந்து முயற்சி செய்துவரும் கலைஞரை ஆலோசகராகக்கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியை இன்னமும் வசைபாடுவதேன்? எதிரி யார் என்பதே இவர்களுக்கு இன்னமும் தெரியாதபோது காங்கிரஸ் அரசிடமிருந்து துப்பாக்கியை எதிர்பார்க்கிறார்களா? யாரை சுடுவதற்கு?
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-201210:49:29 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar பேரில் தமிழ்ச்செல்வன் என்றிந்தால் போதாது வார்த்தையில் மரியாதையை வேண்டும் ராஜீவ்காந்தி சாகும்போது எந்த ஒரு காங்கிரஸ் கட்சி தலைவனாவது செத்தனா அப்பாவி மக்களை தவிர வேறு யாரும் இறக்கவில்லை நீ போய் இந்த கருத்தை இளங்கோவன் மற்றும் செத்துப்போன வாழப்பாடி, மூப்பனார், மரகதம் சந்திரசேகர்,மற்றும் அந்த சோனியா இவர்களை கேள் அப்பாவி தமிழனை அல்ல. உனக்கு மட்டும் ராஜீவ் பிரதமர் அல்ல இந்தியாவில் பிறந்த எல்லாருக்கும்தான் அவர் பிரதமர், ராஜீவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி கொள்ளை அடித்தது காங்கிரஸ் முதலைகள்தான் உன் முட்டாள் தனத்தை அறிவு ஜீவி போல் வெளிபடுதாதே கைகூலி தமிழர்களினால் தான் இன்று எல்லா பிரச்னையும் உண்டாகிறது சரி அதிருக்கட்டும் ஏன் காங்கிரசால் ஒரு வார்டு மெம்பெர் கூட ஆக முடியவில்லை தமிழகத்தில் உள்ள பாமர மக்கள் தான் உண்மையிலயே மேதைகள் அதனால் தான் காங்கிரசை திரும்பி கூட பார்ப்பதில்லை கம்ப்யூட்டர் தெரிந்த சில மடையர்கள்தான் காங்கிரஸ் பற்றி பேசுவார்கள் நமக்கு இந்த அம்மாவும், அய்யாவும் மற்றும் ராமதாஸ் , வைகோ திருமா நெடுமாறன் இவர்கள் போதும் இந்த கொலைகார காங்கிரஸ் வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.