தங்களின் நம்பிக்கை துரோகிகளாகக் கருதியோரை, எப்படியெல்லாம் கொடூரமாக சித்ரவதை செய்து, விடுதலைப் புலிகள் கொன்றனர் என்பதை, புலிகளின் அமைப்பிலேயே உறுப்பினராக இருந்த, முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி என்பவர், தோலுரித்துக் காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில், 1987ம் ஆண்டு, நிரோமி டிசோசா என்ற பெண் சேர்ந்தார். விரைவிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, நடந்த சம்பவங்களைத் தொகுத்து, "தமிழ் டைகர்ஸ்' (தமிழ் பெண் புலி) என்ற பெயரில், புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், நிரோமி எழுதியுள்ளதாவது:
சித்ரவதை: இந்திய அமைதிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, சண்டை நடந்த போது, இந்தியப் படைக்கு உளவு கூறியதாக, வெள்ளை என்ற வீரரை சித்ரவதை செய்த விடுதலைப் புலிகள், கழுத்தளவுக்கு மண்ணுக்குள் அவரை புதைத்து வைத்து, "சயனைடு' விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, ஜெஸ்டின் என்ற விடுதலைப் புலி வந்து, வெள்ளையின் தலையை, கோடாரியால் வெட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த பிற விடுதலைப் புலிகள் அனைவரும் சேர்ந்து, சத்தமாக சிரித்தனர். ஒரு கரப்பான் பூச்சியை எப்படி கொல்வார்களோ, அதேபோல் வெள்ளையைக் கொன்றனர். வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட, மாத்தைய்யா, 18 வயதே நிரம்பிய சாந்தன் என்ற விடுதலைப் புலியை, சக பெண் விடுதலைப் புலியை காதலித்தார் என்பதற்காக, நெற்றியில் சுட்டுக் கொன்றார். சாந்தனின் உடலை, இருவர், காலைப் பிடித்து இழுத்து வந்தபோது, வழி நெடுகிலும் ரத்தம் வழிந்தோடியது.
சுட்டுக்கொலை: இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன்.
கொள்ளை: நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவதற்கு முன்கூட, எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை விடுதலைப் புலிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். "டெலோ' அமைப்பைச் சேர்ந்தவர்களை, மரத்தில் தூக்கிலிட்டனர்; உயிருடன் தீ வைத்து கொளுத்தினர். "ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பைச் சேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர். இந்தியப் படையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கடைகளுக்குள் நுழைந்து, கோழி இறைச்சி, உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். பெண் விடுதலைப் புலிகளாக இருப்பவர்கள், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சில பெண்கள், கடைகளில் இருந்து முக அலங்கார களிம்புகளையும், நக பாலீசுகளையும் திருடினர். இவ்வாறு, அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விடுதலைபுலிகளை தமிழக மக்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவரும் ஆதரித்தனர் , எப்பொழுது என்றால் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி இறபதட்கு முன். அதுவும் ராஜீவ் அவர்களின் இறப்பு தமிழகத்தில் நடந்துள்ளது என்றால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பெரிய தலைகுனிவு சர்வதேச அளவில். வேன்டாம் விடுதலை புலிகள் பற்றியோ அவர்களை சார்தவர்களை பற்றியோ செய்தி வெளியிட்டால் அது பெரிய பிரச்னைக்கு கொண்டு செல்லும். இன்றைக்கு இருக்கும் தமிழக பிரச்சைகள் நீர், மின்சாரம் இல்லாமல் தமிழர்கள் துவண்டு போய் உள்ளனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு மட்டுமே எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.
முரண்பட்டு எழுதினால்தான் புத்தகம்விலைபோகும் .பேசப்படும். முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி இதை தெரிந்துகொண்டு எழுதிஉள்ளார். தினமலர் அதை எழுதி பேசபடுகிறது. வன்முறை என்றும் வென்றதில்லை. எதிரியின் பல் உடைகப்படும்போது ரெத்தம் சிந்தப்படும்போது மனிதன் ரெத்தம் பல் தான் வீழ்கிறது மனிதம் வீழ்கிறது. மொழி இனம் என்று போராடிகொண்டிருகும் நாம் , உலகம் செல்லும் வேகத்தில் நிலைப்போமா..இந்த இன முத்திரை வைத்து கொண்டு பிழைப்போமா என்று கேள்வி எழுகிறது.. உலக அரசு எல்லாம் சேர்ந்து இலங்கை தமிழரை - போராளிகள் என்று அழித்தபோது, மறுபக்கம் அடைக்கலம் புகுந்த இடத்தில எல்லாம் தமிழர்களை ஏந்திகொண்டது உலகம். இன்று உலகம் எல்லாம் இலங்கை தமிழர்கள் உழைத்து வாழ்ந்து வருகிறார்கள். மனித ரெத்தம் குடித்தான் ராஜபக்செ என்று ஐனா சபை சொன்னாலும் ஆண்டு வருகிறான் இன்னமும். குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள ஒருவன் ஒரின மக்கள் வாக்கினை பெற்று ஆள முடிகிறது. எல்லோரும் வீழ்ந்து வெம்பி அழும்போது முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி போன்றோர் இப்படி புத்தகம் எழுதி வெந்த புண்ணில் வில் பாச்ச முடிகிறது ... இதுவும் உலகம் கொடுத்த எழுதுரிமைமையினால். இந்த மாய்மாலமான உலகில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்று புரியவில்லை. பிறப்பும் இறப்பும் தொடர்கிறது. ஓன்று மட்டும் உறுதி அகிம்சை முறை போராட்டம் என்றும் தோற்காது.
புலிகளின் தோல்வி அவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்ட ஆப்புதான்.சர்வாதிகாரம்.தங்கள் இனமக்களின் மனப்பூர்வமான ஆதரவை பெறாதது.எல்லாவற்றிர்ககும் மேலாக அங்குள்ள இஸ்லாமிய மக்களிடம் ஆதரவு பெற தவறியது.அவர்களிடம் கொலை.கொள்ளை யில் ஈடுபட்டது.தங்களின் தடைஇல்லா போதைபொருள் வியாபாரத்துக்காகத்தான் அவர்கள் தனி நாடு பிரச்சனையை கிளப்பினார்கள்.
இது ஒன்றும் புதிதல்லவே... விடுதலைப் புலிகளின் கொடூர முகத்தை அறிந்தவர்கள்தானே நம்மவர்கள்... ஆனால் விடுதலை புலிகளிடமிருந்து காசு வாங்கி இந்த அரசியல் வியாதிகளும், சில சமூக ஆர்வலர்களும் விடுதலைப் புலிகள் ஏதோ அவதார புருஷர்கள் போலவும், தமிழர்களை காப்பாற்ற வந்தவர்கள் போலவும் அல்லவோ சொல்லி மற்றவர்களை ஏமாற்றினார்கள்...
விடுதலைபுலிகள் இயக்கம் முஸ்லிம் இனத்தவரை அடியோடு வெறுத்தது எல்லா இலங்கையினர்க்கும் தெரிந்ததே. ஒருவர் கூட புலிகள் என்று சொல்லி கொள்பவர்களில் இல்லை என்பதை கவனம் கொள்ளவும்.
முதன் முதலில் ராஜபகட்சே அதிபர் ஆனதும் சொன்னது: உங்களுக்கு ( விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ) நாங்கள் சொல்லுவது புரியவில்லை எனில் உங்கள் பாஷையினால் புரியவைக்க வேண்டியது தான். அதை தான் செய்தும் காண்பித்தார். இந்த இயக்கம் எல்லாம் தமிழகத்தில் உள்ள வயதான அரசியல் வாதிகள் ஆயுள்வரை தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இவர்களினால் .தமிழ் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக நல்லது நடக்காது.
தமிழர்களின் மனோபாவம் அதனால் என்ன பரவாயில்லை என்ற மெதனபோக்கு உடையவர்கள் நாம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.