Maanja thread: Families in Tears | கழுத்தறுக்கும் காற்றாடி நூல்கள்: கண்ணீரில் மிதக்கும் குடும்பங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழுத்தறுக்கும் காற்றாடி நூல்கள்: கண்ணீரில் மிதக்கும் குடும்பங்கள்

Updated : ஜூலை 16, 2012 | Added : ஜூலை 14, 2012 | கருத்துகள் (15)
Advertisement

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்.என்., தெரு மற்றும் சவுக்கார்பேட்டை சுப்பிர மணியன் தெரு உள்ளிட்ட சில இடங்களில் காற்றாடி மொத்த வியாபார கடைகள் உள்ளன. இங்கிருந்து தான் தமிழகம் முழுவதும் விற்பனைக்காக காற்றாடிகள் அனுப்பப்படுகின்றன. காற்றாடியுடன் மாஞ்சா தடவிய நூல்கண்டுகள் காற்றாடி பறக்கவிடும் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பலரும் மாஞ்சா தடவிய நூலை பயன்படுத்துவதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மாஞ்சா நூலால் அறுபட்ட பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, மாஞ்சா நூல் விற்பனைக்கு கோர்ட் தடை விதித்தது. தடையை நீக்க மனு: இதை எதிர்த்து, தமிழ்நாடு பறக்கும் காற்றாடி உற்பத்தியாளர் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, காற்றாடி மற்றும் வெள்ளை நூல் கண்டுகள் விற்க அனுமதி வாங்கினர். இது ஒருபுறம் இருந்தாலும், மாஞ்சா நூல் விற்பனை அமோகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. மாஞ்சா நூலால் உயிரிழப்பு ஏற்படும் போது மட்டும் இதை விற்பவர்களிடம் போலீசார் கெடுபிடி செய்து, நூல் பறிமுதல் செய்கின்றனர். இதனால், மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த எட்டாம் தேதி, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தில் பைக்கில் மகனுடன் சென்ற கோபாலகிருஷ்ணன் கழுத்தை மாஞ்சா நூல் பதம் பார்த்தது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடியவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. ஆட்டோ டிரைவர் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றவர், கவனிப்பாரின்றி இறந்தார்.

இருந்த ஆதரவும் போச்சு...: கோபாலகிருஷ்ணன் குடும்பம் சிறியதுதான். மனைவி சுந்தரி, 10வது படிக்கும் மகள் சரண்யா, எட்டாவது படிக்கும் மகன் அருண்குமாரும் உள்ளனர். கணவர் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பம் இனி என்ன செய்யப்போகிறோம் என திகைத்து நிற்கிறது. சவுக்கார்பேட்டையில் 42 ஆண்டுகளாக காற்றாடி விற்பனை செய்யும் சீனிவாசலு கூறுகையில், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மாடியில் விடும் காற்றாடியால் பிரச்னை இல்லை. அறுந்து விழும் காற்றாடியை பிடிக்க தெருக்களில் ஓடும் சிறுவர்களால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பறக்கும் காற்றாடி மற்றும் வெள்ளை நூலை விற்க தடை இல்லை. கடந்த 1986ம் ஆண்டு கோர்ட் உத்தரவுப்படி நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்' என்றார்.

மனரீதியாக பாதிப்பு: பழையவண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில்,"சில மாதங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் மின்ட் பாலத்தில் வேகமாக வந்தேன். அப்போது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் என் முகத்தை பதம் பார்த்தது. செத்தேன் என்றே நினைத்தேன். நான் இறந்தால் என் மகளை யார் காப்பாற்றுவது என கண் கலங்கினேன். நல்ல வேளையாக, மாஞ்சா நூலில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. பல மாத சிகிச்சைக்கு பின் தேறினேன். இதுபோல பலரும் மாஞ்சா நூலால் மனரீதியாக பாதிப்படைந்துள்ளனர்' என்றார்.

வேண்டாம் மாஞ்சா: சிறுவயதில் பெரியமேட்டில் மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட காமேஸ்வரன், தற்போது முத்தமிழ்நகரில் வசித்து வருகிறார். காற்றாடி குறித்து அவர் கூறியதாவது: சிறுவயதில் மாஞ்சா நூலில் காற்றாடி விடும் போது, எனக்கு பலமுறை கையில் நூல் பட்டு சதை கிழிந்துள்ளது. தற்போது மாஞ்சா காற்றாடியால் பலரது உயிரே கண் இமைக்கும் நேரத்தில் போவதை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை கேள்விப்பட்டதில் இருந்து, காற்றாடியை விளையாட்டாக, எனக்கு தெரிந்த யாரையும் பழகக்கூட விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மீறி மாஞ்சா நூலில் காற்றாடி விடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கூட கைது செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

40 பேர் பலி: மாஞ்சா நூலில் காற்றாடி பறப்பதற்கும், மாஞ்சா நூல் விற்பதற்கும் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு சென்னையில் கடந்த 1990ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு ஜூலை வரை 40 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மூன்று மாதத்தில் வானகரத்தில் ஒருவரும், தண்டையார்பேட்டையில் கோபாலகிருஷ்ணனும் பலியாகியுள்ளனர்.

கடும் நடவடிக்கை தேவை: பொதுமக்கள் கூறுகையில், "மாஞ்சா நூலால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை தான் நடந்திருக்கிறது. எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காற்றாடி பறக்க விடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சா நூல் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாஞ்சா நூல் விற்கமாட்டார்கள்' என்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
17-ஜூலை-201222:11:06 IST Report Abuse
Ramesh Kumar நானும் எனது சிறு வயதில் கிருஸ்துமஸ் காலங்களில் பட்டம் விட்டிருக்கிறேன்.......மாஞ்சாவெல்லாம் கிடையாது, வெறும் வெள்ளை நூல் தான்.....பட்டம் விடுவதும் வெட்ட வெளியில் தான் ... யாருக்கும் பாதிப்பில்லை.......ஆனால் நெருக்கடி மிகுந்த நகரத்தில் காற்றாடி விடும் போது மஞ்சா நூலால் மற்றவர்களுக்கு பாதிப்பு என்றால் அரசு அதை தடை செய்தே ஆகவேண்டும்........இதிலும் என்ன அரசியல் விளையாடுகிறதோ தெரியவில்லை.....
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
15-ஜூலை-201223:45:42 IST Report Abuse
GURU.INDIAN இப்படிப்பட்ட வியாபாரம் செய்து நீ பிழைக்க வேண்டுமா ? நீ இறப்பவரின் வாய்க்கரிசியை தின்பதற்கு சமம் அந்த குடும்ப சாபத்திற்கும் ஆளாகுவாய் .
Rate this:
Share this comment
Cancel
siva - Madurai,இந்தியா
15-ஜூலை-201223:33:48 IST Report Abuse
siva ஒரு வீணாப்போன விளையாட்டுக்கு விலை உயிர் .. மக்களுக்கு கொஞ்சமாவது விழிப்புணர்வு வந்தால் சரி ..
Rate this:
Share this comment
Cancel
bhaski .s - toronto ,கனடா
15-ஜூலை-201223:04:43 IST Report Abuse
bhaski .s காவல் துறை கண்ணியமாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும். உயிர் சம்பந்தபட்டது - அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
shahul hameed - CHENNAI,இந்தியா
15-ஜூலை-201219:06:46 IST Report Abuse
shahul hameed kaatradiyai kandippaga government thadai seivathodu vittuvidamal kaatradi vidubavargalai jameenil velivaramudiyatha sattathil kaithu seiyavum, melum kaatradiyal eranda kudumbangalukku sariyana nivaaranam kodukka vum, bathikkapattavargalukkum nivaaranam kodukka vum, arasu makkalidam awareness earpadutha vum by hameed. chennai.
Rate this:
Share this comment
Cancel
Maali Raja - Tuticorin,இந்தியா
15-ஜூலை-201219:00:24 IST Report Abuse
Maali Raja மெரினா பீச் மற்றும் கடற்கரை பகுதிகளில் மட்டும் காற்றாடிகளை பறக்க அனுமதிக்கலாம். தமிழ்நாடு அரசு இதை உடனடியாக கவனித்து உயிரிழப்புகளை தடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
aasook 2005 - chennai,இந்தியா
15-ஜூலை-201215:08:28 IST Report Abuse
aasook 2005 டியர் kaattradi விடாத நண்பர்களே ஒரு உண்மைய சொலுறேன் காட்ராடிய விட மோட்டார் விபத்து அதிகம் அப்ப நீங்க வாகனம் விக்கிரவன்கள கைது செய்ய முடியுமா .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜூலை-201213:19:53 IST Report Abuse
g.s,rajan மற்றவர்களின் உயிரோடு விளையாடும் விபரீதம் வேண்டாமே மாஞ்சா இல்லாமல் பட்டம் விட்டு அதன் அழகை ரசிக்கலாமே ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
15-ஜூலை-201208:33:17 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN T.G.BALASUBRAMANIAN., Australia. பட்டம் விடுவது வட இந்தியாவில் ஒரு திருவிழாவாகவே நடப்பதாகத் தெரிகிறது. அங்கிருந்துதான் இந்த விளையாட்டு தமிழகத்திற்கு வந்திருக்கவேண்டும் என்று எண்ணுகின்றேன். ஆபத்தான இது போன்ற விளையாட்டுகளை அடியோடு நிறுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கமுடியும். தீபாவளியின் போது அதிக சக்திவாய்ந்த வெடிகளை வெடிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் வெடிகள் பயன்படுத்தக்கூடாது என்றும் சட்டங்கள் இருப்பதோடு அந்த சட்டங்கள் விளம்பரப் படுத்தப் படுகின்றன. அதுபோல பட்டங்கள் பயன்படுத்துவதற்கு உள்ள தடைகளை மக்களுக்கு அதற்கான சரியான தருணத்தில் விளம்பரப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் பட்டங்கள் விடப்படுவதில்லை. பட்டங்கள் விட்டு விளையாடும் இடங்களை காவல்காரர்கள் கவனித்து தவறு நடைபெறாமல் தடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Perth,ஆஸ்திரேலியா
15-ஜூலை-201207:06:18 IST Report Abuse
Siva This book will get central government subsidiary. All are fake story.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை