திருச்சி: "திருச்சி - நெல்லை இடையே "இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில் வர, யார் காரணம்?' என்று, விழா மேடையில், அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள் மோதிக் கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி - நெல்லை இடையே, "இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயில் போக்குவரத்து துவக்க விழா, நேற்று, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நடந்தது. மாநில அமைச்சர் சிவபதி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழாவில், திருச்சி அ.தி.மு.க., - எம்.பி., குமார் பேசும்போது, ""முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து, பேசி வருகிறேன். தென் தமிழகத்தை, ரயில்வே, தொடர்ந்து புறக்கணிக்கிறது. மொத்தம், 1,280 கோடி ரூபாய் மதிப்பிலான, விழுப்புரம் - திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டத்துக்கு, வெறும், 210 கோடி ரூபாய்தான் ஒதுக்கிஉள்ளனர். 2012-13ம் ஆண்டு, ரயில்வே பட்ஜெட்டில், வெறும், 60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளனர்,'' என்றார்.
விழாவில் பங்கேற்ற ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., சிவா பேசும்போது, ""முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியிடம், திருச்சியில் இருந்து நெல்லைக்கு, "புதிய ரயில் ஒன்று வேண்டும்' என்று, ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்தேன். அதை ஏற்று, அடுத்த ரயில்வே பட்ஜெட்டிலேயே, இந்த புதிய ரயிலை அறிவித்தார். தற்போது, டில்லியே தமிழகத்தை நம்பித்தான் உள்ளது,'' என்றார். புதிய ரயில் சேவையை கொண்டு வந்தது யார் என்பது குறித்து, அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள் மேடையில் மோதிய தோடு, நகர் முழுவதும், போஸ்டர் ஒட்டி இருந்ததால், விழா பரபரப்புடன் நடந்து முடிந்தது.
"போஸ்டர்' விளம்பரம்! விழா மேடையில் பேசியபோது தன்னை ஒரு சாதாரண மக்கள் பணியாளர் என்று அடக்கம் காட்டிய, தி.மு.க., எம்.பி., சிவா, தன் ஆதரவாளர்களை விட்டு, திருச்சி மாநகரம் முழுவதும் மட்டுமல்லாது, புதிதாக கிளம்பிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில், தனக்கு ஆதரவான போஸ்டர்களை ஒட்ட வைத்து குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவனுகளைப்போல் கேவலமானவர்களை நான் பார்த்ததே இல்லை ,கிட்டத்தட்ட பத்து வருங்களாக மயிலாடுதுறை - காரைக்குடி இடையே அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டு எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள் அதற்க்கு எதையும் செய்யவில்லை,ஒரு ரயில் வந்து விட்டதாம் அதற்கு இப்படி சண்டை அதுவும் தெருச்சண்டை ,கேவலம்டா ,மானம் ரோசம் இருந்த அ திமுக அல்லது திமுக சேர்ந்த எம்பி க்கள் தனித்தனியே உங்கள் திறமையை தமிழக கட்டுமான திட்டங்களுக்கு நிதிபெற்று செயல்படுத்திக்காட்டட்டும் ,இதுவரை திமுகவைத்தவிர வேற எந்த கட்சிக்கரனும் உண்மையான முறையில் போராடவில்லை என்பதே பாராளுமன்ற விவாதங்கள் காட்டுகின்றன ,இந்த மைத்ரேயன் ஒரு வெட்டிப்பய இவன் பாராளுமன்றம் சென்றதே திமுகவை எதிர்த்து பேசத்தான் போலிருக்கிறது,மக்கள் நலத்திட்டம் எதற்காகவும் இவன் குரல்கொடுத்து நான் செய்தி படிக்கவில்லை .கேவலமான ஒரு கட்சி,அதற்க்கு ஒரு ஆட்சி,என்ன கொடுமைடா சாமி,கலியுகத்தில இதையெல்லாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது
ஆமாமா....டில்லியே தமிழகத்தை நம்பி இருக்கு...நம்பிட்டோம் சாமி...சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஓடியும், இன்னும் தென் தமிழகத்தில் 500 கிலோமீட்டருக்கும் மேல் ஒற்றை இருப்புபாதை மட்டுமே இருப்பது உங்கள் பேச்சுக்கு சாட்சி. நல்ல வேலை கேரளாவுக்கு நம்ம ஊர் வழியா போகனும்ம்னு இருப்பதாலே கோவை பகுதி வரைக்குமாவது இரட்டை பாதை கிடைச்சுது. இல்லன்ன அங்கேயும் இதே கூத்துதான். ஏதோ நெல்லுக்கு இரைப்பது புல்லுக்கும் கிடைப்பது போல் உள்ளது அங்கே. எழுதி வச்சுக்குங்க...தென் தமிழகத்தில் முழுதும் இரட்டை பாதை அமைக்க இன்னும் குறைஞ்சது 100 ஆண்டுகளாவது ஆகும். ஆனால் அதுவரைக்கும் திமுக மற்றும் கேடு கேட்ட காங்கிரஸ் இருக்க கூடாது. அப்போதுதான் அதுகூட நடக்கும்.
அகலப்பாதை காண வேண்டும் என்றாலே சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டும் என்னும் நிலை இருந்தது ....இன்று கொஞ்சமாவது மாறி பல வழி தடங்களும் அகலப்பாதைகளாகி உள்ளன......மம்தாவால் பிரச்சனை வரும் இந்நேரத்தில் திமுக ....ரயில்வே துறையை பெற்று தி.ஆர் பாலுவை அமைச்சராக்கினால் தமிழகத்துக்கு நல்ல முன்னேற்றம் கிட்டும்.......
Last time, I put my comment to ext this train to Nagercoil, Someone asked me why you want to ext this train nagercoil when nagercoil is lot of trains. For him,Please note my points, Nagercoil is part of tamilnadu, And most (not lot) of trains from nagercoil are running via kerala not via tamilnadu. So Nagercoil needs connection to other parts of tamilnadu. It is always better to have trains running to remote(or ) places (like kanniyakumari,nagercoil,delta districts,coimbatore,pollachi,Bodi,sengottai,rameswaram,vellore) of tamilnadu so all and most the people will get train facilities. we do not have daily trains from vellore to tanjavur,madurai,nagercoil, chidambaram etc.So we should have trains ing to or remote places of tamilnadu so most of tamilnadu people will get trains facilities.In My point,This train can be exted up to villupuram or kadalur als,Since it is super fast train. It will take another 2.30 hrs to 3 hrs only.
Twenty years back, In broad gauge line,average speed of super fast train is more than 65 kms per hour and average speed of express train is 55 kms per hour . Vaigai average speed was around 70 km per hour in meter gauge line. Now average speed of super fast trains is reduced to 55 kms per hour. why this super fast train is running below 55 kms per hour when some of old fast passenger is running more than 50 kms per hour
ரிஸ்வான், அது மட்டும் தான் நினைவுக்கு வருகிறதா.. இவரின் வாரிசு து.முதல்வர் மதுரை ரயில்வே நிலையத்தில் ஒரு மர்ம மனிதன் அவ்வளவு கட்சியினர் மத்தியில் கத்தியை வீசினான் என்று சொல்லி NSG பாதுகாப்பை வாங்கி கொண்டாரே-அந்த மர்ம மனிதனை இவர்கள் பதவியில் இருக்கும் வரை கண்டு பிடிக்கவில்லை.அதுவும் நினைவுக்கு வருமே...
நண்பர் ரிஸ்வான் அவர்களே இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது, ஒருவரிடம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய உங்களிடம் இவ்வளவு நகைகள் வாங்க எங்கிருந்தது இவ்வளவு பணம் வந்தது என்று லஞ்ச ஓழிப்பு போலீசார் விசாரித்த பொழுது இந்த நகைகள் எங்க அம்மாவுக்கு மைசூர் மகாராஜா கொடுத்தது (எதற்காக) என்று வாக்குமூலம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது....
ஹசன், குழு தலைவரெல்லாம் - மம்தா கட்சி கையில் இருக்கும் துறையில் ஆட்டவோ-அசைக்கவோ முடியாது, தினேஷ் திருவேதியை வைத்து சொக்கதங்கத்தல் பட்ஜெட் ஐ நிறைவேற்ற முடியவில்லை. முகுல் ராயிடம் உங்கள் குழு தலைவரின் பருப்பு வேகுமா? ஒரு சிறிய முன் உதாரணம்...மம்தா அந்த துறையின் அமைச்சராக இருந்த போது உங்களின் பலத்த எதிர்ப்பால்-திருச்சி ஆர்ப்பாட்ட திற்கு தென்னக ரயில்வே இடம் மறுத்த போது -நேரடியாக பார்லி மத்திய மண்டப த்தில்-தம்பி துறையும்-மைத்ரேயனும் மம்தாவை சந்தித்து ஒரு சிறிய விண்ணப்பத்தில் ஒரே கை எழுத்தை பெற்று அதையும் மம்தா நேரடியாகவே ரயில்வே போர்டு தலைவரையே கூப்பிட்டு உத்தரவாக வே சொல்லி-இந்த இருவரிடமும் மேடம் எப்படி இருக்கிறார்கள்-என் வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்றதும் வரலாறு.இவ்வளவுக்கும் நீங்கள் இப்போது விட மிக மிக மரியாதயாக் மத்தியில் இருந்த நேரமது. இப்போது உங்களுக்கும் அங்கே அவ மரியாதை கிடைக்கும் இந்த சமயத்தில் அந்த துறையில் எல்லாம் திமுக மூச்சே விடமுடியாது. உங்கள் தலைவரை போலவே பொய் சொன்னாலும்- நல்ல காமெடி யாக சொல் கிறீர்கள்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.