Congress and India communist oppose for TESO conference held by Karunanidhi | கருணாநிதி நடத்தும்"டெசோ' மாநாடு நடக்குமா? காங்., கைவிரிப்பு;இந்திய கம்யூ., எதிர்ப்பு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (172)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க வேண்டுமென்ற கோரிக் கையை முன்நிறுத்தி, தி.மு.க., நடத்தவுள்ள, "டெசோ' மாநாடுக்கு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புலிகள் ஆதரவு அமைப்புகளுக்கு மத்திய உள்துறைஅமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தடைகளை மீறி, "டெசோ' மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மீண்டும் "டெசோ':இலங்கைத் தமிழர் பிரச்னையில் சமீபகாலமாக தி.மு.க.,தலைவர் கருணாநிதி, அதிக அக்கறைகாட்டி வருகிறார். சமீபத்தில் நடந்த கட்சி பொதுக் கூட்டத்தில், "தனி ஈழம் என்பது எனது நிறைவேறாத கனவாக உள்ளது. நான் வாழும் காலத்தில் அதைப் பார்க்க விரும்புகிறேன்' என்றுதெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, "தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு' (டெசோ) மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவித்தார்.
தனித்தமிழ் ஈழம்: தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வில்லை,'' என கூறியுள்ள அவர், உலகத் தமிழர் மத்தியில் ஆதரவை திரட்டுவதற்காக, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி மாநாடு நடக்கவுள்ளதாக நேற்று முன்தினம்

தெரிவித்து உள்ளார். நேற்று, "விடுதலைப் புலிகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்று தடையை நீட்டித்து மத்திய அரசு விளக்கம் அளித்துஇருக்கிறது.
காங்., எதிர்ப்பு: இந்நிலையில், "டெசோ' மாநாட்டிற்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ""டெசோ' மாநாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை. தமிழ் ஈழத்தை எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் ஆதரிக்காது. ஒன்றுபட்ட இலங்கையை தான் ஆதரிப்போம்,'' எனத் தெரிவித்துள்ளார்.அதே போல், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலர் பாண்டியன் கூறும் போது, ""இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரின் போது, கருணாநிதி, மத்திய அரசுக்கு நெருக்கடி தரவில்லை. தற்போது, "டெசோ' மாநாடு யாருக்காக நடத்துகிறார் என்பது தான் புரியவில்லை,'' எனத் தெரிவித்துள்ளார்.
மாநாடு நடக்குமா?:
ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட

Advertisement

விஷயங்களில் காங்கிரசுக்கு அனுசரணையாக தி.மு.க., இருந்து வரும் நிலையில், இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, தி.மு.க.,வை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அத்துடன் மத்திய உள்துறை அமைச்சகம், இலங்கை விவகாரம் தொடர்பாக தெளிவான எச்சரிக்கை விடுத்துஉள்ளதால், திட்டமிட்டபடி மாநாட்டை தி.மு.க., நடத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாதுகாப்பிற்கு ஆபத்து:மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் தர்மேந்திர சர்மா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""தனி ஈழ கோரிக்கை ஆதரவாளர்களும், விடுதலைப் புலிகளின்ஆதரவாளர்களும், தொடர்ந்து மக்களிடையே பிரிவினைவாத போக்கை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், புலிகளுக்கு ஆதரவான நிலையை அதிகரிக்க முற்பட்டுள்ளனர். இது, நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்,'' என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கைத் தமிழர்கள் மத்தியில், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை, புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். இது போன்ற பிரசாரங்கள் செய்யப்படுவது தொடர்வதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில், அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.-நமது சிறப்பு நிருபர்-


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (172)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayapal - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201200:55:34 IST Report Abuse
Jayapal பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனங்களை மீண்டும் நினைவில் கொண்டு அவர் நடந்துகொண்ட விதம் என்ன என்று பார்க்கவும் எதுவுமே பொருந்தவில்லை. சொல்வதெல்லாம் ஊருக்குதான் உனக்கும் எனக்கும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
thamilan - tiruchi,இந்தியா
17-ஜூலை-201200:24:25 IST Report Abuse
thamilan சரியாகசொன்னீர்கள் சசி. இவர் ஆட்சியில் எத்தனை மீனவர்களை சிங்களப்படை சுட்டுத்தள்ளியது முதலில் சொந்த இனத்தை பாதுகாக்க அல்லது யோசிக்க அப்பொழுது பெரியவருக்கு நேரமில்லை சொத்து சேர்ப்பதில் தான் குறியாய் இருந்தார். இவர் தமிளினத்துக்காகப் மாநாடு போடப்போகிறாரா? பலே பலே இதை வைத்து மத்தியிலே புதிதாய் ஒரு அமைச்சர் பதவி சட்ட அமைச்சர் கேளுங்கள் எல்லா நீதி மன்றங்களும் உங்கள் அமைச்சர் கட்டுபாட்டில் வேண்டும்..... அப்புறமென்ன தி மு க திறந்து விட்ட குண்டர்கள் கட்சி தான் தமிழ் நாடு அடுத்த ஈழ நாடு தான்..........
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
17-ஜூலை-201200:24:14 IST Report Abuse
babu நாளொரு எண்ணம் பொழுதொரு வண்ணம் கருணாநிதிக்கு நேற்று வரை தனி ஈழமே தீர்வு யாருக்கு இலங்கை தமிழர்களுக்கு இன்று அந்தர் பல்டி தனி ஈழத்திற்கு ஆதரவு இல்லை, இந்திய அரசும் எட்டப்பன் கூட்டாளிகள் தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கை மக்களை அழித்து விட்டார்கள், எஞ்சியவர்களுக்கு இங்கு போர் பயற்சி தான், இந்திய தமிழனை மறந்தது, தமிழினம் இலங்கை தமிழ் மக்களை மறந்தது, தமிழ் ஈழம் பகல் கனவு, கொட்டாவி விட்ட நேரத்தில் பேட்டி கொடுத்தது தமிழ் மக்களுக்கு தனி ஈழமே தீர்வு என்று மாநாடு பேசும் முன் தீர்வை தீக்கிரையாகி விட்டார்கள் எபோதும் போல் இருகின்றவரை பாதுகாக்க போகின்றனராம், இங்கு யாரும் பேசாமல் இருந்தாலே அங்கு பாதிப்பு இல்லை,
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
16-ஜூலை-201221:30:55 IST Report Abuse
krishna கருணாநிதியின் மறுபக்கத்தை இந்த தலை முறை அறிய கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை படித்தல் அவரின் போலியான முகம் என்ன என்பது தெரியும். அவரின் டெசோ மாநாடு என்பது வெறும் நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
Murali - Ettayapuram,இந்தியா
16-ஜூலை-201221:21:42 IST Report Abuse
Murali எல்லாம் சரி.... ஆனால் "டெசோ (TESO)" என்ற சொல்லிலேயே "தமிழ் ஈழம்" இருக்கிறதே? இதற்கு திமுக -வின் சமாதானம் என்ன? அப்படியே சொன்னாலும், அதைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா? மொத்தத்தில் ஒரே கூத்துத்தான்...
Rate this:
Share this comment
Cancel
prasanna - chennai,இந்தியா
16-ஜூலை-201221:02:19 IST Report Abuse
prasanna முன்னால் முதலமைச்செர் கருணாநதி அவர்களே மத்திய அமைச்சரவை இருந்து உங்கள் ஆதரவூ வாபஸ் வாங்கு. உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றியடையும்
Rate this:
Share this comment
Cancel
k.vijayakumar - chennai,இந்தியா
16-ஜூலை-201220:27:30 IST Report Abuse
k.vijayakumar கவிதை வடிப்பாய் கேடக ஆசையாய் இருக்கும், தமிழ் பேசுவாய் இனிமை சுரக்கும், வறுமையில் வாடும் மனிதனாக இருக்கும் சினிமா இளஞனுக்கு கொஞ்சும்தமிழிலும் ,வீர தமிழிலும் வசனம் எழுதுவாய் அனல் பறக்கும் , தமிழனுக்காவும் ,தமிழ் மொழிக்காவும் குரல் கொடுப்பதாய் கூறியவுடன் மெய்சிலுத்து கலத்துக்கு வரவோம் ,ஆனால் உன் சுயனலத்திறகாதான் செய்கிறாய் என்பத்தை காலம்கடந்து தெரிந்து கொண்டபோது தமிழன் அழிந்துகொண்டிருக்கிறான் காப்பாற்ற வருவது யார் என்பதை தெரியாமல் நிற்க்கிறோம் ஏன் தெரியுமா முக்கால் வாசிப்பேர் உன்பாசறையில் வளர்ந்தவர்கள். இனியுமா பேசுகிறாய் தமிழனை பற்றி .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-ஜூலை-201220:19:10 IST Report Abuse
villupuram jeevithan Karuna: "There is no pressure from the Centre. It is just your imagination," he told reporters a day after Union Home Minister P. Chidambaram met him.
Rate this:
Share this comment
Cancel
Appu - passau,ஜெர்மனி
16-ஜூலை-201219:56:18 IST Report Abuse
Appu கருணாநிதியை பொறுத்தவரை அவரும் அவரது குடும்பமும் தவிர வேறு கொள்கை எதுவும் கிடையாது.தானும் தன குடும்பமும்,கிடைத்தால் ஆட்சியையும்,இல்லை என்றால் மத்திய அரசில் ஒட்டிக்கொண்டிருப்பதும் சொத்தும் சுகமும் அதை அடைய நயவஞ்சகமும் தான் அவரது கொள்கை.தமிழ் ஈழத்திற்கு பெப்பே காட்டிய மாதிரி இவரை நம்பும் இவரது தொண்டர்களுக்கும் இறுதியில் பெப்பேதான்.தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே போட்ட நாமத்தால்தான் ஆட்சியை இழந்தார்.திராவிடம் பேசியே தமிழர்களுக்கு பட்டை நாமம் போட்டுக்கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள் எல்லாமே விட்டைகள்தான் கருணாநிதியின் அறிவிப்பு ஊரை ஏமாற்றும் வேலை. இது மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்க எடுத்த ஆயிதம் கருணாநிதிக்கு உண்மையில் தமிழீழம் பற்றி அக்கரை இருந்தால் முடிவை மாற்ற மாட்டார் பாவம் தமிழர்கள்
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
16-ஜூலை-201219:39:02 IST Report Abuse
R.சுதாகர் " அக்கட்சியின் மாநில செயலர் பாண்டியன் கூறும் போது, ""இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரின் போது, கருணாநிதி, மத்திய அரசுக்கு நெருக்கடி தரவில்லை. தற்போது, "டெசோ" மாநாடு யாருக்காக நடத்துகிறார் என்பது தான் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்." - இன்னமும் புரியவில்லையா? தமிழ் தேசிய இனத்தின் தலைவன் என்று பிரபாகரனை விளித்தால் அவரால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? "தமிழர்களுக்கு ஒரே தலைவன் தான் அது இந்த கருணாநிதி தான் " என்பதை மனதில் கொண்டு, தற்போது ஈழத்தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததை மனதில் கொண்டு, எப்படியாவது இந்த முறையேனும் சிறை சென்று மக்களின் அனுதாபத்தை பெறவேண்டும் என்பதையும் மனதில் கொண்டு, மேலும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிலபல கல்வெட்டுக்களை மனதில் கொண்டு... தனக்கே தனக்காக மட்டுமே இந்த மாநாட்டை தலைவர் நடத்துகிறார்... உலகத்தமிழ் மக்களே... அலைகடலென திரண்டு வாரீர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.