Pranab everyday appeals Mamata Banerjee to vote for him | மம்தா பானர்ஜியிடம் தினமும் ஆதரவு கேட்கும் பிரணாப்| Dinamalar

மம்தா பானர்ஜியிடம் தினமும் ஆதரவு கேட்கும் பிரணாப்

Updated : ஜூலை 16, 2012 | Added : ஜூலை 15, 2012 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மம்தா பானர்ஜியிடம் தினமும் ஆதரவு கேட்கும் பிரணாப்

ஸ்ரீநகர்:""ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவாக ஓட்டளிக்கும்படி, திரிணமுல் தலைவர் மம்தாவிடம், தினமும் வலியுறுத்தி வருகிறேன்,'' என, பிரணாப் முகர்ஜி கூறினார். ஜனாதிபதி தேர்தலில் ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, தனக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும், ஆதரவளிப்போருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

நேற்று காஷ்மீருக்குச் சென்ற பிரணாப் முகர்ஜி, அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது, "உங்களுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும்படி, திரிணமுல் தலைவர் மம்தாவிடம் வலியுறுத்துவீர்களா' என செய்தியாளர்கள், அவரிடம் கேட்டனர்.

இதற்கு பிரணாப் முகர்ஜி அளித்த பதில்:

எனக்கு ஆதரவளிக்கும்படி, தினமும் மீடியாக்கள் மூலமாக மம்தாவிடம் வலியுறுத்தி வருகிறேன். எனவே, இந்த விஷயத்தில் மம்தா தான் முடிவு எடுக்க வேண்டும். எனக்கு ஆதரவளிக்கும் கட்சி எம்.எல்.ஏ.,க்களையும், எம்.பி.,க்களையும் மட்டுமே சந்தித்து வருகிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என் கடமை. தூக்குத் தண்டனை தொடர்பான விஷயத்தில், என்னுடைய தனிப்பட்ட கருத்தை தற்போது தெரிவிக்க முடியாது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.இதன் பின், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகமது சயீதையும், அவரது கட்சி நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக, பிரணாப் முகர்ஜி புறப்பட்டுச் சென்றார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-ஜூலை-201213:19:02 IST Report Abuse
villupuram jeevithan முதுகு எலும்பு இல்லாத அரசியல்வாதிகள் இவர்கள் என்று சரியாகத் தான் மம்தா சொல்லியிருக்கிறார் இவர்களை பற்றி.
Rate this:
Share this comment
Cancel
suresh krishnaswamy - bangalore,இந்தியா
16-ஜூலை-201212:59:10 IST Report Abuse
suresh krishnaswamy மற்றவரிடம் தர்மம் எதிர்பார்க்கையில் எப்படி விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்கு பிரணாப்ஜி ஒரு உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
abdulrahim - dammam ,சவுதி அரேபியா
16-ஜூலை-201212:44:03 IST Report Abuse
abdulrahim வளரும் வரை காங்கிரசால் வளர்ந்தவர், இப்போது காங்கிரசை எதிர்க்கிறார். இடது சாரிகளை எதிர்க்க காங்கிரஸ் தயவு தேவைப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியையும் பிடித்தார். இப்போது தண்ணி காட்டுகிறார். அது என்னன்னே தெரியல, பெயருக்கு முன்னால செல்வி நு வந்துட்டா உதவி செய்றவங்கள தேர்தல் முடிந்ததும் கழட்டி விட்டுறாங்க. அப்பப்பா நாட்டில் இந்த செல்விகளின் லொள்ளு தாங்கலப்பா.
Rate this:
Share this comment
Cancel
Gnanavel - Kaveripakkam, Vellore,இந்தியா
16-ஜூலை-201212:32:48 IST Report Abuse
Gnanavel பிரணாப்: அம்மா தாயே பெரிய பதவி எனக்கு கெடைக்கனும்மா .... எனக்கு ஒட்டு போடுங்கம்மா.... மம்தா: ஓட்டும் இல்ல ஒன்னும் இல்ல போ போ...
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
16-ஜூலை-201212:26:46 IST Report Abuse
A R Parthasarathy மம்தா சொன்ன மூன்று நாட்கள் இன்று ஆரம்பமாகிறது. இப்போதாவது அவர் முடிவை சொல்ல வேண்டும். அவர் பிரணாபுக்கு வாக்களிபதாக முடிவெடுத்திருந்தால், மற்ற கூட்டணி கட்சிகள் அறிவித்ததைபோல அவரும் ஆதரவை தந்திருக்க வேண்டும். அப்படி தராமல் இழுத்தடிகிறார் என்றால் அவர் பெரிதாக எதையோ மத்தியிலிருந்து எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். அந்த பேரம் படியாமல், பிரணாப் தினமும் பேசுவதால் எந்த பயனும் ஏற்பட போவ தில்லை. உடனடியாக மம்தாவின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாமல் போனால் வாக்குகளை மாற்றி போட வாய்ப்பு இருக்கிறது. காங்கிரசுக்கு கிலியை ஏற்படுத்தத்தான் மம்தா இந்த கால அவகாசத்தை எடுத்து கொண்டிருக்றார் என்பது அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்த விஷயம். இதை காரணம் காட்டி மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எதையும் செய்துவிட முடியாது. நமது திமுகவைபோல் இவர்கள் குடுமி மத்தியில் அகபட்டுகொண்டிருந்தால், இவர்களும் பணிந்து பொய் இருப்பார்கள். மம்தாவை பொறுத்தவரையில், இன்னும் ஊழல் முத்திரை குத்தப்படவில்லை. அதனால் தான் தைரியமாக காங்கிரசுக்கு சவால் விட்டுகொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
16-ஜூலை-201211:34:02 IST Report Abuse
Indiya Tamilan இப்படி சொல்ல வெட்கப்படவேண்டும் நாட்டின் முதல் குடிமகனாக போகும் பிரணாப் முகர்ஜி. ஜனாதிபதி பதவியின் மதிப்பை ஜெயில் சிங்,பக்ருதின் அலி அஹமத்,பிரதீபா பாட்டில் வரிசையில் இந்த மனிதரும் சேர்ந்து கெடுக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
krishsampath - coimbatore,இந்தியா
16-ஜூலை-201208:32:57 IST Report Abuse
krishsampath இதெல்லாம் ஒரு பொழப்பு. வெட்கம் கெட்ட மனுஷன். பதவி வெறி. அப்படியே இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திட்டாரு. அடுத்து ஜனாதிபதியா சாதிக்க கெளம்பிட்டாரு. இதுல வேற நம்ம நாட்டின் சாபக்கேடு சிதம்பரம் சொல்றாரு " மன்மோகன் கையில நிதி துறை வந்தாச்சு இனி நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வேகமா வளர்ச்சி அடையும்" இதை சொல்ல இவர்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? அரசியல்வாதி என்றால் அனைத்தையும் துறந்தவர் என்று அர்த்தமோ? அப்படியென்றால் இத்தனை ஆண்டுகள் எதற்காக பிரணாப் முகர்ஜியை நிதி அமைச்சராக வைத்திருந்தார்கள்? இந்தியாவை அழிவு பாதைக்கு அழைத்து செல்லவா? கடவுள் இவர்களையெல்லாம் இன்னும் எப்படி தண்டிக்காமல் இருக்கிறார்? கடவுளுக்கே வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
16-ஜூலை-201208:03:52 IST Report Abuse
T.R.Radhakrishnan அம்மா தாயே , நான் ராப்பிச்சைக்காரன் வந்திருக்கேன். ஒட்டு பிச்சை போடும்மா. இந்திய குடியரசு தலைவர் பதவியை இதைவிட யாரும் கேவலப் படுத்த முடியாது.
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
16-ஜூலை-201216:47:33 IST Report Abuse
s.maria alphonse pandianபிரணாப்பும் மம்தாவும் மேற்கு வங்கத்தில் காங்கிரசின் இரண்டு கோஷ்டிகளாக இருந்தார்கள்.. பிறகு மம்தா தனி கட்சியானார்..எனவே அவர்களிருவரிடையே இப்போதும் ஈகோ பிரச்சனை இருக்கிறது .....ஆனாலும் வேட்பாளரே கிடைக்காமல் போன பிஜேபியை விட இது கேவலமில்லை......
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-ஜூலை-201219:25:50 IST Report Abuse
villupuram jeevithanஎதுவுமே கேவலமில்லை, காரியம் தான் முக்கியம். கருணாவை கேளுங்கள், சொல்லுவார்....
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஜூலை-201207:21:56 IST Report Abuse
Pannadai Pandian மம்தா சங்மாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ் மூழ்கும் கப்பல். அதில் பயணம் செய்வது ஆபத்து. மேலும் மம்தா கிழக்கத்திய பிராந்தியத்தை சேர்ந்தவர். பிரணாப் முகேர்ஜியை விட சங்மா அதிகம் படித்தவர். மதம் ஒன்றானாலும் இந்தியன் என்ற உணர்வினால் சோனியாவையே எதிர்த்தவர். அவருக்கு மம்தாவின் வாக்குகளை அள்ளி தர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
S. Ruban - Al Khobar,சவுதி அரேபியா
16-ஜூலை-201203:01:14 IST Report Abuse
S. Ruban "எறும்பு ஊற கல்லும் தேயும்"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை