மூணாறு:கேரள சிறுமி கற்பழிக்கப்பட்டதை மறைக்க அவரது பெற்றோரிடம், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தரப்பில் பல லட்ச ரூபாய் பேரம் பேசியது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.
கேரளா, பம்பனார் லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் - சுசிலா தம்பதி மகள் மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில், வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன், அங்கு கற்பழித்து கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ராஜ்குமார், உதவியாளர் அன்பரசன், மகேந்திரனை, கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
மேகலாவை தமிழகத்திற்கு அழைத்துச் சென்ற ஏஜன்டுகள் பாம்பனார் குமாரபுரம் காலனி பன்னீர்செல்வம், 48, குமுளி செங்கரை விஜயகுமார், 36, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மற்றும் மற்றொரு ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மேகலாவின் பெற்றோரை சந்தித்து, "வேலைக்கு அனுப்பினால் அதிக தொகை கொடுப்பதாக'க் கூறியுள்ளனர். இதற்காக விஜயகுமார், பன்னீர்செல்வத்திற்கு தலா 3,000 ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது. கொலைக்கு பின், ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார்.
மேகலா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த போது, சம்பவத்தை மறைக்க, அவரது பெற்றோரிடம், பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதும், விசாரணையில் தெரிந்துள்ளது.
இதனிடையே, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பன்னீர்செல்வத்தை கேரள மாநிலம் பீர்மேடு பகுதியில் கைது செய்த போலீசார், அவரை பெரம்பலூருக்கு கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காலை ஐந்து மணிக்கே கடையை கட்டிவிட்டீர்கள் போலிருகிறதே? என்ன பிரச்னை உங்களுக்கு? காலை பொழுது விடிந்து பேப்பர் கைக்கு கிடைத்து படித்தபிறகுதான கமெண்ட் போடமுடியும்? இணைய தளத்தில் இரவில் ஏற்றிவிட்டால் கூட, வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் படித்து விட்டு கருத்து போடமுடியும். அவர்கள் தான் முதலில் கருத்தும் போடுகிறார்கள்.
நம்ம ராமதாஸ் அய்யாவ பத்தி ரொம்ப நாலா ஏதும் நியூஸ் இல்ல என்ன தினமலர் மறந்துடீங்களா அவர அடிகடி நியாபக படுத்துங்க இருகார இல்லயனே தெரியல அவர் வர கமெண்ட் படிச்சாதான் எனக்கு சிரிப்பு வரும் நான் நியூஸ் விட கமெண்ட்ஸ் தான் அதிகம் படிப்பேன் சோ இனிமே வீக்லி ஒன்சே அவர பத்தி நியூஸ் போடுங்க அவர் அறிக்கை விடலனா கூட நீங்க போய் ஏதாச்சும் நியூஸ் கலெக்ட் பன்னிட்டு வாங்க சார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.