New crisis over Srilanka army in Cunnoor | இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியா? எழுந்தது சர்ச்சை| Dinamalar

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியா? எழுந்தது சர்ச்சை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியா? எழுந்தது சர்ச்சை

குன்னூர்:நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இன்று (16ம் தேதி), வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் சிறப்பு பயிலரங்கம் நடக்கிறது. இதில், வியட்னாம், நைஜீரியா, பங்களாதேஷ், பரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த குழுவில், இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவரும் இடம் பெற்றிருப்பதாகவும், இவர்கள், குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் சர்ச்சை:சமீபத்தில், இலங்கை ராணுவத்தினருக்கு, சென்னை தாம்பரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பயது. “இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது’ என, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி ரத்து செய்யப்பட்டு, பெங்களூருக்கு அனுப்ப வைக்கப்பட்டனர். அங்கிருந்தும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என, மத்திய அரசுக்கு, முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், குன்னூரில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரி பயிலரங்குக்கு இலங்கை ராணுவ அதிகாரிகள் வந்திருப்பது, மீண்டும் இங்கு சர்ச்சையை கிளப்பயுள்ளது. முதல்வர் ஊட்டியில் முகாமிட்டுள்ள நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவலால், பரபரப்பு நிலவுகிறது.Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
17-ஜூலை-201219:39:40 IST Report Abuse
villupuram jeevithan இதில் கருணா வாயக் கொடுக்கவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
rajan - dsseldorf,ஜெர்மனி
16-ஜூலை-201222:23:20 IST Report Abuse
rajan யாருப்பா வல்லரசு ??? குடிக்க தண்ணி இல்ல குந்த இடம் இல்ல எங்க பத்தாலும் லஞ்சம் கொல கொள்ள . இதில அணு ஆயுதம் கத்தரிக்கா சுகாதார வசதி இல்ல வடிகால் வசதி இல்ல இந்தியாவில புது சட்டம் போடணும் அரசியல் ,சட்டம் ,சுகாதாரம் ,அறிவியல்,தொழில்நுட்பம் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவன் தான் பதவில இருக்கலாம்னு
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
16-ஜூலை-201221:41:16 IST Report Abuse
krishna இந்த காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு தமிழர்களின் உணர்வு புரியவில்லை.அதற்கான பலனை வரும் நாடாளு மன்ற தேர்தலில் அனுபவிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
siva - bangalore,இந்தியா
16-ஜூலை-201208:47:37 IST Report Abuse
siva வட இந்தியா முழுதும் ஈழ பிரச்சினையின் தன்மை புரியாமல் இன்னமும் சிங்களவனுக்கு சப்போர்ட் பண்ணுறானுங்க. வடஇந்தியர்களுக்கு எதிரி தமிழன்தான், சிங்களவன் இல்லை ....தமிழனுக்கு எதிரி வட இந்தியகாரனுக்கு நண்பன்
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201218:40:28 IST Report Abuse
Bebetoஐயா, சரித்திரத்தை படியுங்கள். இலங்கையில் சிங்கள சமுதாயத்தை (இனத்தை) ஆரம்பித்தவன் விஜயன் என்ற பீகாரை சேர்ந்த அரசன். அவன் புத்த மதத்தை சேர்ந்தவன். அவன் கப்பலில் பெரிய படையுடன் இலங்கைக்குள் நுழைந்தான். தமிழர்கள், அவனையும், அவன் படைகளையும் வரவேற்று உபசரித்தனர் . பிறகு, அவன் தமிழர்களையே அடிமையாக்கி, இலங்கையை ஆண்டான். வரவேற்ற அந்த முதல் தமிழ் பெண்ணை ஏமாற்றி கற்பழித்தான். இது வரலாறு. முன்பு இலங்கை வெளியிட்ட தபால் தலையில் விஜயனை தமிழ் பெண் வரவேற்பது தெரியும். (இலங்கையில், தமிழர்கள் சிங்களவர்களுக்கு முன்பே இருந்தவர்கள் என்று இதில் தெளிவாகிறது). ஆகையால், சிங்களவர்கள், பீகார், ஒரிசா ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. இதனால், வட இந்தியர்கள், சிங்களவர்களை ஆதரிப்பதில் ஆச்சர்யம் இல்லை. தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம், இலங்கை அரசிடம் விலை போன நிறைய அங்கிருக்கும் தமிழ் தலைவர்கள், கருணா (தமிழகத்திலும், இலங்கையிலும்) போன்ற எட்டப்பர்கள், முக்கியமாக, தொண்டைமான் போன்ற தலைவர்கள், வியாபார செல்வந்தர்கள் ஆகியோர்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஜூலை-201206:45:59 IST Report Abuse
Kasimani Baskaran பஞ்ச சீலத்தில் ஆரம்பித்து காங்கிரஸ், அன்றே இந்தியாவை கூறு போட ஆதரவாக பல விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எல்லைகளை எல்லாம் நாசம் செய்து விட்டார்கள். கடந்த இருபது ஆண்டுகளாக இலங்கைக்கு பயம் என்கிற புது வியாதி வேறு. சண்டை போட வேண்டியவர்களுடன் சமாதானமும், சமாதானம் பேச வேண்டியவர்களுடன் சண்டையும் வழக்கம் ஆகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
16-ஜூலை-201203:48:47 IST Report Abuse
NavaMayam ஐயா , எதோ அஞ்சு பத்து பேர் பயிற்சி எடுபதால் என்னமோ குடி முழிகி போவதுபோல் அம்மா அலறுவதும் , உடனே தாத்தா கதறுவதும் , எத்தனை நாள் இன்னும் இலங்கை தமிழர்களை வைத்து இந்த நாடகம் நடக்குமோ... நம்மிடம் பயிற்சி இல்லையெனில் சீனக்காரனிடம் நல்ல பயிற்சி பெற்றுக்கொள்ள போகிறான்... இங்கு பயிற்சிபெற்றாலாவது எப்படி ராணுவத்தில் ஊழல் செய்யலாம் என்று கற்று அங்குபோய் ஆகாத போகாத , வெடிக்காத துப்பாக்கி வாங்கி , ஈழ தமிழனாவது தப்பிப்பான்... அதையும் விடமாட்டார்களே...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
16-ஜூலை-201205:17:50 IST Report Abuse
Pannadai Pandianதாத்தாவை ஏன் இழுக்கிறீர்கள் நவமயம். ஈழ தமிழர்களை கொன்றொழித்தவர் மிச்சம் மீதி உள்ள தமிழர்களை வேரறுக்க இந்த உதவியை செய்ய மாட்டாரா ? தமிழன் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு சிங்களவர்களுக்கு பயிற்சி அளிப்பதால் குடி முழுகித்தான் போய்விடும் அது இல்லாதவர்களுக்கு ஒன்னும் இல்லை. கொலை காரர்களுக்கு இங்கு பயிற்சியா ? போய் தொலையட்டும் சீனா, பாகிஸ்தான் பக்கம். சீனா, பாகிஸ்தான் என்று இன்னும் எத்தனை நாள் தான் கண்ணா மூச்சி ஆடுவீர் ???...
Rate this:
Share this comment
Rajan - Yishun,சிங்கப்பூர்
16-ஜூலை-201207:24:46 IST Report Abuse
Rajanநவமயம், நீங்கள் வேடிக்கையாக பேசுவதாக நினைத்துகொண்டு விபரீதமாக பேசுகிறீர்கள். நாளைக்கே இலங்கை ராணுவத்தினருக்கு பெண்கள் சப்ளை செய்யவேண்டும் என்று கேட்பார்கள். நாம கொடுக்காட்டி சீனாக்காரன் கொடுத்துடுவான், அதற்குள் நாமே கொடுத்துடுவோமா என்று கேட்பது போல உள்ளது நீங்கள் பேசுவது. இதெல்லாம் ஒரு பொழப்பு ... இதிலே வல்லரசு கனவு வேற. ஒரு சுண்டக்காய் நாடு, இவன் மிரட்டலுக்கு பயந்துகொண்டு கேக்குறதை எல்லாம் கொடுத்துட்டு மல்லாக்க படுத்துக்கொண்டு வல்லரசு கனவு காண்கிறானுங்க. டெல்லிக்கு கூட்டி வந்து நாலு அறை விட்டா நாம சொல்லுறத கேப்பான். நம்மிடம் என்ன IB , RAW எல்லாம் இல்லையா? அவிங்களுக்கு இதைவிட வேற என்ன வேலை? வல்லரசு படம் பார்த்தால் வல்லரசாகி விடலாம்னு நெனைக்காதீங்க. அதுக்கு எவ்வளவோ பண்ணனும். இலங்கையே நம்மால் கண்ட்ரோல் பண்ணமுடியாட்டி, அப்புறம் சீனாக்காரன் வந்தா அவ்வளுதான் ... இதற்க்கு மேல் கேவலமாக நானே நம் நாட்டை கேவலப்படுத்த விரும்பவில்லை. ஆனா இந்த காங்கிரஸ் காரன் அந்த நெலமைக்கு நம் நாட்டை கொண்டு போய்விட்டானே என்பதுதான் என் வருத்தம்....
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
16-ஜூலை-201201:36:23 IST Report Abuse
Sekar Sekaran எட்டப்பன் ஆதரவு உள்ளவரை இப்படி சர்ச்சைகள் தொடரும். ஒருவேளை டெசோ மாநாட்டிற்கு வந்தவர்களாக இருப்ப்பார்களோ? கருணாவை கேட்டுப்பாருங்கள்..அப்படியா..உறுதி செய்யப்படாத தகவல்களுக்கு எனது பதில்..அப்படி இருந்தால் பின்னர் பார்ப்போம் என்பார்..சகுனியின் ஆலோசனையின் அடுத்த கட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
16-ஜூலை-201200:54:42 IST Report Abuse
Thangairaja இந்திய ராணுவத்துறை வேண்டுமென்றே தமிழர்களை தூண்டி விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அவசியமில்லாத சர்ச்சைகள். அந்தோணி வெட்கப்பட வேண்டும் இத்தகைய செயலுக்காக.......
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
16-ஜூலை-201215:30:02 IST Report Abuse
K.Sugavanamஅந்தோணி ஒரு ஊமை குசும்பர்.வேடிக்கை பார்க்கிறார்.கேரளாவுல ஒரு ராணுவ பயிற்சி கூடம் கூட இல்லையா?...
Rate this:
Share this comment
Murali - Ettayapuram,இந்தியா
16-ஜூலை-201221:27:53 IST Report Abuse
Muraliஅந்தோணி வெட்கப்படுவது இருக்கட்டும்... இவர்களுடன் "கூடா நட்பு" கொண்டிருப்பவர் வெட்கப்பட்டு இவர்களை ஏதாவது கேட்பாரா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.