E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சரக்கு வாங்கினால் பிரியாணி இலவசம்: தமிழகத்தில் தான் இந்த கேவலம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

17 ஜூலை
2012
07:29
பதிவு செய்த நாள்
ஜூலை 16,2012 23:47

கோவை:எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை... "மூணு பீர் வாங்கினா, ஒரு பீர்; ஒரு பிளேட் பிரியாணி இலவசம்...' என, "குடிமகன்'களையும் வசீகரம் செய்து, கவர்ந்திழுக்கத் துவங்கி விட்டனர், மது பான விற்பனையாளர்.

ஆடி மாதத்தில், சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் இருக்காது. அதனால், ஆடி மாதத்தில் ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, "டல்' அடிக்கும். எனவே இம்மாதத்தில், வியாபாரத்தை இலக்காகக் கொண்டு, ஆடித் தள்ளுபடி விற்பனையை, வர்த்தகர்கள் அறிமுகம் செய்தனர்.


ஜவுளி கடைகளில் துவக்கம்:ஆடித் தள்ளுபடி விற்பனை, முதலில் ஜவுளிக் கடைகளில் துவங்கியது. துணி வகைகளுக்கு, ஐந்து முதல், 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்து, வியாபாரத்தில் அதிரடியைப் புகுத்தி வருகின்றனர். ஆடி விற்பனையை, ஆனி மாதம் துவங்கி, ஆவணி மாதம் வரை நீட்டிக்கின்றனர்.திருமண சுப காரியங்கள் நடந்த வீடுகளில், ஆடி சீர் வரிசை வாங்குவோரை கவர்ந்திழுக்க, ஜவுளி, நகை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் தள்ளுபடி காற்று, புயலாக வீசுகிறது."ஆடித் தள்ளுபடி, இவற்றுக்கு மட்டும் தானா... "குடிமகன்'களுக்கு சரக்கு விலையில், எந்த தள்ளுபடியும் இல்லையா...' என்ற கேள்வி எழுந்து விடக் கூடாது என்பதற்காக, கோவையில் வினோதமாக, சரக்கு வகைகளுக்கும், தள்ளுபடி அறிவித்து, புதுமையைப் புகுத்தியுள்ளனர்.


கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சாந்தி தியேட்டர் அருகேயுள்ள, தனியார் குடி மையம் ஒன்றில், "சரக்கு' வகைகளுக்கு, தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. "மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்."சரக்கு'க்கு அறிவித்துள்ள தள்ளுபடி விளம்பரம், கடந்த ஒரு வாரமாக, கோவை முழுக்க பிரபலமாகி விட்டது.


குடி மைய உரிமையாளர் சிவகுமார் கூறியதாவது:ஒரு மாதமாக, மது விற்பனை, மந்தமாக இருந்தது. அதனால், இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். பீர் உள்ளிட்ட அனைத்து, "சரக்கு' வகைகளுக்கும், வெளிநாட்டு, "சரக்கு'களுக்கும், மூன்றுக்கு ஒன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, இந்தத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு, வழக்கமாக, எட்டு வகையான நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி திட்டத்தில், சரக்கு வாங்குவோருக்கு, கூடுதலாக சிக்கன் பிரியாணியும் இலவசமாக வழங்கப்படுகிறது.கிடைக்கும் லாபத்தில், ஒரு பகுதியை, இந்த தள்ளுபடி திட்டத்திற்கு செலவிடுகிறோம். திட்டத்தால், வருவாய் இழப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு சிவகுமார் கூறினார்.


வீட்டுக்கு "டிராப்' உண்டு!ஒரு சில கடைகளில், ஆடிச் சலுகையாக, "தள்ளாடும்' வாடிக்கையாளர்களை வீட்டில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."மது குடித்தவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது' எனத் தடை இருப்பதால், சில வாடிக்கையாளர்கள், குடி மையங்களுக்கு, பஸ்சில் வருகின்றனர். மது குடித்ததும், அவர்களால் சீராக நடக்க முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களை வீட்டிலேயே கொண்டு விடவும், சில கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என, விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (82)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூலை-201223:11:09 IST Report Abuse
Pugazh V ஜெயலலிதாவின் அரசு மக்கள் நல அரசு என்று பீற்றிக்கொள்ளும் சேகரன் மற்றும் நபர்கள் எங்கே? இதை உங்கள் அம்மாவிடம் தெரியப் படுத்தி நிறுத்துங்கள் பார்க்கலாம் - எல்லாமே அரசு கடைகள் தானே ( மதுவை விற்க ஆரம்பித்ததே கலைஞர் தான் என்று இதற்கும் சொல்லுவார்கள்.) . முதல்வருக்கு தெரியாமலா அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் இந்த திட்டத்தை அறிவித்தார்கள்? ( அவர் கொடநாட்டில் தான் இன்னும் இருக்கிறாரா?)
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூலை-201222:38:55 IST Report Abuse
Pugazh V இதெல்லாம் செய்வார்கள் தான். அப்புறம் எப்படி சசிகலாவிற்கும் அவரது மிடாஸ் நிறுவனத்திற்கும் லாபம் கிடைக்கும். அரசே ஊக்குவிக்கிறது. நல்ல காலம் இதற்கும் கலைஞர் பெயரை யாரும் இக்க்கவில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
17-ஜூலை-201222:15:22 IST Report Abuse
சிந்திக்கும் வடிவேலு தமிழ் நட்டு மக்களை குடிக்க வெச்சி அதுல பணம் சம்பாதிக்க வழி கொண்டுவந்த மஞ்சதுண்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கடவுள் மன்னிக்க மாட்டார். இந்த காங்கிரஸ் பார்ட்டிங்க அதுக்கு மேல ஒரு தின்ன தூங்கி பசங்க. விஜயகாந்தாவது வந்து கொஞ்சம் குடியை குறைப்பார் என்று பாரத்தால் அவுரே குடிக்கராறு. குடி குடுககளன நம்ம ஆளுங்க நல்ல பர்ட்டிக்கு வோட்டு போடவும் மாட்டேன்றாங்க. ஒரு நல்லவன் எப்போதான் நமக்கு கெடைப்பான்களோ.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Arul Gd - Vaniyambadi,இந்தியா
17-ஜூலை-201221:31:25 IST Report Abuse
Arul Gd அட்ராசக்க....அட்ராசக்க......அட்ராசக்க.......சூப்பர் அப்ப்ப்பு......
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Paddy Sundaram - Chennai,இந்தியா
17-ஜூலை-201219:50:30 IST Report Abuse
Paddy Sundaram பாருக்குள்ளே நல்ல நாடு அது நமது தமிழ்நாடு.
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Babu. M - tirupur,இந்தியா
17-ஜூலை-201218:47:27 IST Report Abuse
Babu. M அரசாங்கம் விற்பனை செய்வதை விட இது கேவலம் இல்லை
Rate this:
0 members
0 members
0 members
Cancel
M Venkateswaran - Bharuch- Gujarat,இந்தியா
17-ஜூலை-201218:45:24 IST Report Abuse
M Venkateswaran உலக அழிவுக்கு தான் இந்த மாதிரி நடக்கிறது .
Rate this:
0 members
0 members
0 members
Cancel
abdul - tamilnadu,இந்தியா
17-ஜூலை-201217:41:11 IST Report Abuse
abdul ஒ இது நல்ல யோசனை ஆ இருக்கே? என்ன கடையோட முதலாளி சார், இந்த தமிழ்நாடு அரசுக்கு நல்ல ஐடியா கொடுத்து இருக்கீக சார்,இந்த ஐடியா நம்ம அரசுக்கு இப்ப தான் கொடுத்து இருக்கீக சார், இதை நம்ம அரசும் பின்பற்றும் விரைவாக, மக்கள் எப்புடி போன நமக்கென,நமக்கு வேண்டியது காசு, நல்லா இறுக இத காச வச்சிகிட்டு
Rate this:
0 members
0 members
0 members
Cancel
abdul - tamilnadu,இந்தியா
17-ஜூலை-201217:32:25 IST Report Abuse
abdul அடப்பாவிகளா
Rate this:
0 members
0 members
0 members
Cancel
anandakumar18oct - Bangalore,இந்தியா
17-ஜூலை-201217:09:04 IST Report Abuse
anandakumar18oct உலகின் பெரும்பாலான இடங்களில், ஏன் பெங்களுருவில் கூட இந்த மாதிரி டோர் டெலிவரி, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சரக்கு வாங்கினால் இன்னொன்று இலவசம் (ஹாப்பி ஹவர்ஸ்), சரக்கு சாப்பிட்ட பின் வீட்டில் கொண்டு வந்து விடுவது போன்ற சேவைகள் ரொம்ப காலமாகவே நடந்து வருகின்றன. இதில் கோயம்புத்தூர் மட்டும் என்ன விதி விலக்கா?
Rate this:
0 members
0 members
0 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.