காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பூட்டிய வீட்டில் புகுந்து, எட்டு சவரன் தங்க நகைகள், 5,000ரூபாய் ரொக்கம் மற்றும்பொருட்களை திருடிச்சென்ற, மர்ம நபர்களைகாவல் துறையினர் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் கன்னியப்பாநகர் பாஞ்சாலியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்றுமுன்தினம் இரவு திருப்பதிசெல்வதற்காக, வீட்டை பூட்டி விட்டு, எம்.எம்.அவின்யூவில் உள்ள உறவினர் வீட்டிற்குசென்றிருந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். தரைதளத்தில் ராஜ்குமார் வீட்டை ஒட்டியிருந்தஇரண்டு வீடுகள், முதல் தளத்தில்உள்ள வீடு, ஆகியவற்றின்கதவுகளை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளனர்.அதன்பின் அருகில் வசிக்கும் ராம்பிரபு என்பவர் வீட்டிற்குசென்றுள்ளனர். அங்கிருந்த கடப்பாரையை துண்டுஒன்றில் சுற்றி எடுத்தபடி, ராஜ்குமார் வீட்டிற்கு வந்துள்ளனர். கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் பீரோவிலிருந்த எட்டு சவரன் தங்க நகைகள், 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். நகை இருந்த பெட்டியை, அருகிலிருந்த வீட்டுவளாகத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.நேற்று காலை அருகில் வசிப்போர், தூங்கி எழுந்துவெளியே வர முயற்சித்தபோது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். உறவினர்களை வரவழைத்து கதவை திறக்க வைத்தனர்.வெளியில் வந்து பார்த்தபோது, ராஜ்குமார் வீட்டுகதவு உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டனர். அவருக்குதகவல் கொடுத்தனர்.தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வை யிட்டு, விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளைப்பதிவு செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நகை மற்றும் விலை உயர்ந்த பொருளை பேங்க் லாக்கர் ரில் வைத்துவிடுங்கள் அதுவும் தனியாக உள்ளவர் நிச்சயம் பேங்க் லாக்கர் உபயோகப்படுதுங்கள் .எப்பொழுது தேவையோ பேங்க் கில் இருந்து எடுங்கள் தேவை முடிந்தவுடம் மறுபடி பேங்க் லாக்கர் ரில் வைத்துதுவிடுங்கள் அப்போதாவது நகை திருட்டு குறைய வாய்ப்பு இருக்கும் என தோனுகிறது . மேலும் நீங்கள் பயம் இல்லாமல் நிம்மதியாக /தைரியமாக இருக்கலாம் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.