சென்னை : "ஜனாதிபதி தேர்தலில், பிரணாப் முகர்ஜிக்கு, தே.மு.தி.க.,
ஓட்டுப்போட வேண்டும்' என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்திற்கு, தமிழக
காங்., தலைவர் ஞானதேசிகன், வேண்டுகோள் விடுத்துள்ளார். "ஜனாதிபதி தேர்தலை,
புறக்கணிக்கப் போவதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அவரது
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
ஏற்கனவே வேண்டுகோள் விடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தை
சேர்ந்த, காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள் இருவர், விஜயகாந்திடம்,
தொலைபேசியில் ஆதரவு கேட்டுள்ளனர். மேலும், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,
கனிமொழி தரப்பிலிருந்தும், விஜயகாந்திற்கு, தூது அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், தனது முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்து, விஜயகாந்த் இதுவரை வாய்
திறக்கவில்லை. இந்நிலையில், "பிரணாப் முகர்ஜிக்கு தே.மு.தி.க., ஆதரவு
அளிக்க வேண்டும்' என, மீண்டும் விஜயகாந்திற்கு, ஞானதேசிகன் வேண்டுகோள்
விடுத்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கை: ""ஜனாதிபதி தேர்தலில்,
பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
அறிவித்துள்ளதை, தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. நன்றியும்
தெரிவித்துக் கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ம.க., மனித
நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள், தமிழகத்தில், பிரணாப்
முகர்ஜியை ஆதரித்து வாக்களிக்கின்ற நிலைப்பாடு இருக்கிறது. தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த், தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து, பிரணாப் முகர்ஜியை
ஆதரித்து, ஓட்டு அளிக்க வேண்டும், என்ற கோரிக்கையை மீண்டும்
புதுப்பிக்கிறேன்.'' இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விஜயராசா சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது, இதனை ஆண்டுகளாக தமிழக மினவர்கள் கடலில் பல துயரங்களை சந்தித்து வருகிறார்கள் அவர்களுக்கு மத்திய அரசு ஒன்று செய்யவில்லை அவர்களுக்கு அதரவாக விஜயராசா குரல் கொடுத்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது வரவேர்கதக்கது, இப்படியே மக்களுக்காக குரல் கொடுத்து போராடினால் விஜயராசா ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வெகு தொலைவில் இல்லை....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.