புதுடில்லி:விதிமுறைகளை மீறி செயல்பட்ட, போதிய வசதிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக, சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உட்பட, ஆறு மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தினக் கூலி தொழிலாளர்களை, நோயாளிகளை போல் நடிக்க வைத்தும், உள்ளூர் டாக்டர்களை, பேராசிரியர்களாக பணியாற்ற வைத்தும், இந்த கல்லூரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறுவதற்காக, இவ்வாறு அவர்கள், விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிகை: சி.பி.ஐ., சார்பில், இதுகுறித்து குற்றச்சாட்டு தெரிவிக்கப் பட்ட பின்னும், சில கல்லூரிகளுக்கு சீட்டுகளை அதிகரித்துக் கொள்வதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதும், தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, ஆறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக, எட்டு குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. மேலும், சில கல்லூரிகளுக்கு எதிராகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பாக, இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் அல்லது வாரிய கவர்னர்களிடம் விசாரிக்க, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. ஒரு சில கல்லூரிகளுக்கு, மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு நடத்தச் செல்லும்போது, அதுகுறித்து முன் கூட்டியே, கவுன்சில் அதிகாரிகளால் தகவல் கசியவிடப் பட்டுள்ளது.
முறைகேடாக அனுமதி: விதிமுறைகளை மீறி செயல்பட்ட கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ., சார்பில், மருத்துவ கவுன்சிலுக்கு நகல் அனுப்பப்பட்டது. இதன்பின், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு, மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும், இதற்கு பின்னும் கூட, மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு முதுநிலை படிப்புகளை துவங்குவதற்கு, மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இரண்டு கல்லூரிகளுக்கு சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மாணவர்களை சேர்ப்பதற்கு சில கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டும் கூட, சில கல்லூரிகள், இந்த தடையை மீறியுள்ளன.
சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கல்லூரிகள்: 1. ஸ்ரீ குருராம் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியில் பயிற்சி மையம், டேராடூன், 2. இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி, இந்தூர். 3. கலிங்கா மருத்துவ அறிவியல் பயிற்சி மையம், புவனேஸ்வர், 4. பாஸ்கர் மருத்துவக் கல்லூரி, ஐதராபாத், 5. ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், காஞ்சிபுரம், 6. ஆதி பராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி மையம், காஞ்சிபுரம்.இவ்வாறு, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் தல்வார், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு கேட்டபோது, கருத்து எதுவும் தெரிவிக்க, அவர்கள் தரப்பில் மறுத்து விட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிபிஐ வைத்திருக்கும் அரசியல் சட்ட கையேடு அன்னியர்களிடமிருந்து காப்பியடித்து. அவர்களுக்கு இந்திய முறையிலான கல்லூரிகளை ஆய செய்யும் தகுதி இல்லை. அனைவரும் சம்பளத்திற்காக பதவிகளுக்கு செல்வதால், நாட்களை கடத்த வெறும் பொழுது போக்குகிறார்கள். அந்நிய முறைகளை இந்தியாவிற்கு தகுந்தாற்போல் ஆய்வு செய்ய இவர்கள் முயற்சிக்க மாட்டார்கள்.
Sir,
Punishments should be made tougher and severe. Like for example, Ambumani Ramadoss, has flouted rules and granted licenses to Medical colleges, and he should be put behind bars and all his properties should be confisicated, only then others who follow suit will not repeat such mistakes. See now, Ramadoss is struggling to close down liquor shops in TN. When he supported the central govt, his party never ed his mouth. What is the necessary to start the topic right now, just to divert the public attention from falling on his son&39s mis-deeds. Father-son due are the most corrupt leaders and they do all sorts of mis-chiefs but people should remember to keep these elements away from assemblies or parliaments.
RAORAMESH/Chennai 40
மேலே குறிப்பிடப்பட்ட சத்ய சாய் கல்லூரி, கல்லூரியே அல்ல. donation பெட்ரோல் பங்குகளில் வாங்கபடுகிறது. எதற்கும் பில் கிடையாது.மட்டமான hostel. புரோக்கர்களை வைத்து கிராமத்தில் ஓரளவு வசதியுள்ள மக்களை ஏமாற்றி உங்கள் மகன் மகளை படிக்க வைத்து டாக்டர் ஆக்கி விடலாம் என்று பணத்தை கறக்கின்றனர்.அவர்களும் கனவுகளுடன் தங்கள் சேமிப்புகளை இவர்களிடம் கொட்டி விட்டு ஏமாறுகின்றனர்.
பேராசிரியர்களை வாடகைக்கு எடுத்து கல்லூரி நடத்துகின்றனர். அவர்களும் கூலிக்கு மாரடித்து விட்டு போகின்றனர். அடிப்படை வசதி அறிவு வளர்ச்சி கிடையாது. இந்த கல்லூரியில் இருந்து டாக்டர் வெளியே வந்தால் இந்திய ஜனத்தொகை வெகுவாக குறைந்து விடும். சமிபத்திய இரு கல்லூரி மாணவர்கள் இறந்தது இந்த கல்லூரியின் கட்டுபாடற்ற ஒழுங்கீனதால் தான்.
இதுவரை இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டோர் எவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? அப்படி எந்தத் தண்டனையும் இல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரைகுறை விசாரணை நடத்தி தப்பிக்க வழி செய்வது, கைதான குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் சகட்டுமேனிக்கு ஜாமீன் வழங்குவது, உடல்நலன் என்ற பெயரில் ஐந்து நட்சத்திர உபசரிப்பு, சிறைக்குள்ளும் எல்லா வசதிகளும் வழங்குவது என்ற நிலை நிலவும் சூழ்நிலையில் குற்றங்கள் குறையவேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டும் என்ன நியாயமோ? முதலில் சகட்டுமேனிக்கு ஜாமீன் அளிக்கும் நீதிபதிகளை உள்ளே தள்ளினால்தான் நாட்டில் நீதி உயிர்பிழைத்திருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.