பதிவு செய்த நாள் :
கருத்துகள் (62)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

"தமிழகத்திற்கு தேவைப்படும் நிலக்கரி அளிக்கப்படுவதில்லை. தமிழகத்தின் பல்வேறு மின்சாரத் திட்டங் களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படுவதில்லை. வடமாநிலங்களோடு தமிழகத்தை இணைக்கும் மின்கடத்தி உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. பொதுவாக, தமிழகத்தின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது' என, தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
டில்லியில் நேற்று, அகில இந்திய அளவிலான மின் துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் மத்திய - மாநில அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்றார்.
தமிழகத்தில் மின் திட்டப் பணிகளுக்கு, மத்திய அரசு உரிய ஆதரவு தராமல் பாராமுகம் காட்டுகிறது என்பதை விளக்கி அவர் பேசியதாவது:
சுணக்கம்: தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை அளிக்காமல், மத்திய அரசு உள்ளது. தமிழகத்துக்கு என, ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் கூட அளிக்காமல், மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. இதனால், தமிழக மின் திட்டங்கள் நிறைவேற்றமின்றி, நிலுவையில் உள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும், அனல் மின் நிலையங்களுக்கும் சரி, புதிதாக அமைக்கப்பட்ட

மின் நிலையங்களுக்கும் சரி. நிலக்கரி தருவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறது. தவிர, தமிழகத்தில் துவங்கப்படும் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் பலவற்றுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது.
பிரச்னை :தென் மாநிலங்களுக்கான கிரீட்டுடன், வட மாநிலங்களுக்குண்டான கிரீட்டை இணைக்க, முறையான வசதிகள் செய்யப்படவில்லை. இதனால், முறையாக மின்சாரத்தை மற்ற மாநிலங் களில் இருந்து பெற முடியவில்லை. தென் மாநிலங்களின் தேவைக்கு வசதியாக, "சதர்ன் கிரீட்' பலப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஓராண்டாக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் வழங்கப்படவில்லை. வெறும் 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. முறையான மின்கடத்திகள் இல்லாமல் இருப்பதால், வெளிமாநிலங்களில் இருந்தும்தமிழகத்துக்கு மின்சாரத்தை எளிதாகக் கொண்டு வர முடியாமல் உள்ளது. எனவே, இந்த இணைப்புக்கு உடனே ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
முனைப்பில்லை:எத்தனையோ எதிர்ப்புகளை சமாளித்து தான், கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்குவதற்கு உண்டான சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தது தமிழக அரசு. அங்கிருந்து 1,000 மெகாவாட் வரை மின்சாரம் தர

Advertisement

வேண்டுமென, தமிழக அரசு கேட்டுள்ளது. அதுகுறித்த கோரிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை.
இழுத்தடிப்பு:காற்றாலைகள் மூலம் 600 மெகாவாட்மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்ததால், மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகம், தமிழக அரசுக்கு ஊக்கத் தொகையாக 455 கோடி ரூபாய் வரை தந்தாக வேண்டும். இந்தத் தொகையை தராமல், மத்திய அரசு இழுத்தடிக்கிறது. தமிழகத்தில், 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், மொத்தம் 10,620 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குண்டான திட்டங்களை, தமிழக அரசு தீட்டியிருந்தது. ஆனால், இவற்றை எதையுமே மத்திய திட்டக் கமிஷன் தன் 12வது ஐந்தாண்டு திட்ட இலக்கில் சேர்க்காமல், தமிழகத்தை அலட்சியப்படுத்தி விட்டது.இவ்வாறு விஸ்வநாதன் பேசினார்.
ரூ.70 ஆயிரம் கோடி இழப்பு:style="font-weight: bold;">இந்தக் கூட்டத்தில் பேசிய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பேசியதாவது:மின்சாரத்திற்கு வழங்கப்படும் மானியம் என்று கூறி, மாநில அரசுகள் பணத்தை வீணடிக்கக் கூடாது. யாருக்கு மானியம் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு மட்டும் வழங்கலாம். மின் துறையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாகிறது. மின் துறை லாபத்தில் இயங்காவிட்டால், வளர்ச்சி தடைபடும். சில மாநிலங்களில், 10 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாத நிலை உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். மின் கட்டண உயர்வு, மின் சப்ளையில் இழப்பு ஆகிய இரு நடவடிக்கைகள் மூலமே, இத்துறை வளர்ச்சி காண முடியும். மின் கட்டண உயர்வால் கிடைக்கும் நிதி மூலம் கல்வி, சுகாதார வளர்ச்சிக்கு செலவிட்டால், வாழ்க்கைத் தர உயர்வை அளிக்கும்இவ்வாறு அலுவாலியா பேசினார்.-நமது டில்லி நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (62)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamal - Kumbakonam,இந்தியா
18-ஜூலை-201223:04:46 IST Report Abuse
Kamal உத்திர பிரதேசத்திற்கு உடனடியாக 50000 கோடி ருபாய் திட்ட உதவி. தமிழகத்திற்கு பெப்பே.இந்த காங்கிரஸ் ஆட்சி போனால் தான் இந்த நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் விடிவு காலம் பிறக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Black Colour - chennai,இந்தியா
18-ஜூலை-201221:42:58 IST Report Abuse
Black Colour சட்டு புட்டுன்னு பேசி முடிச்சுட்டு பந்தில சாப்பாட போடுங்கப்பா..
Rate this:
Share this comment
Cancel
Malarkodi - coimbatore,இந்தியா
18-ஜூலை-201220:57:06 IST Report Abuse
Malarkodi தனி மெஜாரிட்டி ஆட்சியை கொடுத்த மக்கள் இந்த அரசிடம் இருந்து நெறைய எதிர்பார்த்து இருக்கிறார்கள், எந்த முயற்சியின் போதும் எதாவது தடை இருக்கும். அதனை எப்படி கடந்து வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என நினைத்து செயல்பட்டால், மக்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும், ஆட்சியாளர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
18-ஜூலை-201213:13:07 IST Report Abuse
Thamilan-indian இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. தற்போது இந்தியா மற்ற நாடுகளைபோலவே இங்கும் சட்டம் இயற்ற வேண்டியுள்ளது. இல்லையெனில் மற்ற வளர்ந்த நாடுகளின் பகைமைக்கு ஆளாக நேரிடும். அது போக UNESCO போன்ற சர்வதேச நாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது. இந்தியாவில் தற்போது அனைத்தும் பற்றாக்குறை. இந்திய விஞ்ஞான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு திண்டாடுகிறது. இந்த லச்சனத்தில் தமிழக மின்துறை தன வசம் வைத்துள்ள சுரங்கத்தை துரிதமாக வெட்டி எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லாம் போக கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்க பட்டு விட்டதால் தமிழகம் மட்டுமிட்ரி, மற்ற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை குறையும்.
Rate this:
Share this comment
Cancel
gopi - pune,இந்தியா
18-ஜூலை-201213:07:44 IST Report Abuse
gopi கூட்டணியில் இருந்தால் ஒரு அணுகுமுறை...இல்லாவிட்டால் ஒரு அணுகுமுறை. நாட்டு மக்களின் மீது காங்கிரசுக்கு துளியும் அக்கறை இல்லை....
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
18-ஜூலை-201212:57:31 IST Report Abuse
N.Purushothaman இவ்வளவு தடைகளையும் மீறி மின்சார பிரச்சனையில் தமிழக அரசு நிரந்தர தீர்வு கண்டால் உண்மையாலுமே அது சாதனை தான்....
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
18-ஜூலை-201212:39:58 IST Report Abuse
christ இப்படி குறை சொல்லிகிட்டே 5 வருடங்களை ஓட்டி விடலாம்
Rate this:
Share this comment
g.k.natarajan - chennai,இந்தியா
18-ஜூலை-201220:13:07 IST Report Abuse
g.k.natarajanஉங்கள் கருத்து, அர்த்தமற்றது. இந்த குறைபாடுகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.ஆனால், முந்தைய தமிழக அரசு,பல உண்மைகளை வெளியில் கொண்டுவராமல், வெளிநாட்டிலிருந்து அதிக செலவில், நிலகரி, இறக்குமதி செய்து, பல விதங்களில் பணத்தையும் வீணடித்து, மின்சார உற்பத்தியும் அதிகரிக்கவில்லை. சரியான, தளவாடங்கள் இல்லாததால், குஜராதிலிருந்தும், மின் பெறுவதற்கு, தடையாக உள்ளது நம் ,மந்திரிகள்,லோக்சபா உறுப்பினர்கள் அனைவரும், ஒன்றுசேர்ந்து ஏதாவது செய்தால்தான் முடியும். இல்லாவிடில் மத்தியில் நம் மாநிலத்தை பற்றி கேட்பதற்கு ஆள் இல்லை. போறாததற்கு, environment clearance,க்கும் ,முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வதுபத்து\இருபது வருடங்கள் ஆனாலும் நம் பிரச்சினை தீராதுஉண்மை அறிந்து பேசுங்கள்யார் கூறுகிறார்கள்,தி.மு.க.\அ.தி.மு.க. என்பது பிரச்சினை இல்லைதாமிழ்நாட்டின் தேவை பிரச்சினை நடராசன். ....
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
18-ஜூலை-201211:00:31 IST Report Abuse
manoharan தேர்தலுக்கு முன் ஜெயா விட்ட புருடாக்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டு இருக்கிறது. பச்சை புளுகு அல்லவா? அவர்கள் அப்போது மின்வெட்டுக்கு தி மு க வை கொச்சை படுத்தி பேசிய அனைத்தும் பொய் தானே. இப்படிபட்டவர்களிடம் ஆட்சியை கொடுத்து இருக்கும் தமிழக மக்கள் துர்பாக்கியவதிகள். ஒன்றன் பின் ஒன்றாக எப்படி பொய் பேசினார்கள் என்பதை பாருங்களேன் "தரக்குறைவான நிலகரி இறக்குமதி, மின் உற்பத்தி நிலையங்கள் பராமரிப்பு சரி இல்லாமை. மத்தியில் மின்சாராம் இல்லை என்று தெரிந்தும் சும்மா பிரதமரிடம் வேண்டுதல், வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க போவதாக (லோக்கல் தேர்தலுக்கு முன்) சொன்னார்களே, அப்புறம் வெளிசந்தையில் மின்சாரம் கிடைக்க வில்லை என்றார்கள். இப்போ மத்திய அரசை குறை கூறுகிறார்கள். காங்கிரஸ்வுடன் ஓட்ட பார்த்து, முடியவில்லை என்றதும் பி ஜே பி யுடன் 2014 தேர்தலில் கூட்டு வைத்து கொள்ள இரகசிய முடிவு எடுத்துள்ளது. ஆகவே காங்கிரஸ் மீது சேரை வாரி இறைக்கிறார். இது என்ன நாகரீகமோ?
Rate this:
Share this comment
Manickam - Chennai,இந்தியா
18-ஜூலை-201211:54:30 IST Report Abuse
Manickam மனோகரா இது படம் இல்லை நிஜம். அதுக்கு ஏற்றார் போல் கருத்து சொல். காங்கிரஸ் மீது சேரை வாரி இறைக்கிறார் யார்? காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கும் நீயே ஒரு சேறு மண்டி....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜூலை-201213:11:57 IST Report Abuse
Pannadai Pandianமனோகரா இது படம் இல்லை நிஜம். அதுக்கு ஏற்றார் போல் கருத்து சொல் டெல்லி சதிகாரர்களின் புகலிடமாக கடந்த பத்து வருடங்களாக திகழ்கிறது. அங்கு இருக்கும் ஆரிய சதிகாரர்களும் இங்கிருந்து போன திராவிட சதிகாரர்களும் சாம்பாரும் ரோட்டியுமாய் ஒன்றிணைத்து தமிழகத்துக்கு பேரிடர் செய்கிறார்கள் என்பதை மறந்து விடாதே....
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-ஜூலை-201216:28:37 IST Report Abuse
villupuram jeevithanபொன்னாடை, சரியாக சொல்லியிருக்கிறீர்....
Rate this:
Share this comment
Raajan - mumbai,இந்தியா
18-ஜூலை-201217:26:05 IST Report Abuse
Raajanகுஜராத் முதல்வர் எப்போதாவது இப்படி சொல்கிறாரா பாருங்களேன். மத்திய அரசுமேல் பழி போடுகிறாரா.. அவருடைய மாநிலமும் வளர்சியடைகிறதே. மத்திய அரசு உதவி இல்லாமலே மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு வரலாமே...
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-ஜூலை-201220:20:39 IST Report Abuse
villupuram jeevithanராஜன் அவர்களே, முட்டுக்கட்டை போட குஜராத்தில் திமுக போன்ற கட்சி இல்லாததால் தான் குஜராத் முன்னேறுகிறது....
Rate this:
Share this comment
Kamal - Kumbakonam,இந்தியா
18-ஜூலை-201223:07:40 IST Report Abuse
Kamalஅங்கே குஜராத்தில் வற்றாத நதிகள் உள்ளன. எல்லா வற்றிற்கும் மேலாக அங்கே திமுக போன்ற அரசுகள் கஜானாவை காலி செய்ய வில்லை ....
Rate this:
Share this comment
fanty sr - Chennai,இந்தியா
18-ஜூலை-201223:21:00 IST Report Abuse
fanty srமத்தியில் மின்சாராம் இல்லையா ? என்ன கொடும சார் இது ? இரண்டு மாதங்களுக்கு முன் நாம் தலையாட்டி பிரதமர் பாகிஸ்தானுக்கு ஐநூறு மெகா வாட் மின்சாரம் தருவதாக சொன்னதாக ஞாபகம். அது என்ன காந்தி கணக்கில் இருந்து வந்ததா ?...
Rate this:
Share this comment
Cancel
raja.s - cuddalore,இந்தியா
18-ஜூலை-201210:27:24 IST Report Abuse
raja.s தமிழகம் முன்னேறி விட கூடாது என்ற முனைப்புடன் மத்திய காங்கிரஸ் அரசும், அண்டை மாநிலங்களும் செயல் படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது. முக்கியமாக ஜெ. அவர்கள் நல்ல பெயர் வாங்கி விடகூடாது என்று ஒருவர் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார். அவர் ஆட்சியை இழந்ததற்கு முக்கிய காரணிகளில் ஒன்று மின்சாரம். நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் ஐம்பது சதவீதம் தமிழகதிற்கு கிடைத்தாலே போதும் மின்சார பற்றாக்குறை தீர்ந்து விடும். அனால் இங்கு நடப்பது என்ன? எவனெல்லாம் தண்ணி தரமாட்டானோ அவனுக்கெல்லாம் தமிழகத்தில் இருந்து மின்சாரம் அனுப்படுகிறது. தமிழகத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி தமிழ்நாட்டிற்கு கிடைக்காது, ஆனா நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளவேண்டும். அதற்க்கும் உடனடி அனுமதி கொடுக்கமாட்டாங்க. அண்டை மாநிலத்தில் இருந்து மின்சாரம் வாங்கவும் வழி ஏற்ப்படுத்தியும் தரமாட்டாங்க. இந்த மாதிரியான இடைஞ்சல்கள் மூலமாக தற்காலிகமாக அவர்கள் சந்தோஷ பட்டுகொள்ளலாமே ஒழிய வேற ஏதும் செய்திட முடியாது. அதனால் நம்மோட மனசில் இருந்து அவர்கள் விலகுகிறார்கள், இன்னும் விலகி கொண்டே இருகிறார்கள். துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது மாதிரி நாமும் அவர்களை ஒதுக்க ஆரம்பித்து விட்டோம் என்பது அவகளுக்கு புரியும் போது மிகுந்த வருத்தப்படுவார்கள். வரும் காலங்களில் தமிழகத்தில் காங்கிரசுக்கு என்று தலைவர்கள் தான் இருப்பார்கள் ஒரு தொண்டன் கூட இருக்க மாட்டன். அதே போன்று திமுக இருக்கும் ஆனால் அதற்க்கு மக்கள் ஆதரவு இருக்காது. திமுகவின் ஆட்சிக்கனவு வெறும் கனவாகவே இருக்கும்...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
18-ஜூலை-201213:14:07 IST Report Abuse
Pannadai Pandianஇந்த மாதிரியான இடைஞ்சல்கள் மூலமாக தற்காலிகமாக அவர்கள் சந்தோஷ பட்டுகொள்ளலாமே ஒழிய வேற "ஏதும் செய்திட முடியாது. அதனால் நம்மோட மனசில் இருந்து அவர்கள் விலகுகிறார்கள், இன்னும் விலகி கொண்டே இருகிறார்கள். துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது மாதிரி நாமும் அவர்களை ஒதுக்க ஆரம்பித்து விட்டோம் என்பது அவகளுக்கு புரியும்" - ஒன்னு காங்கிரஸ் இன்னொன்னு திருடர்கள் முன்னேற்ற கழகம்....
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-ஜூலை-201216:31:06 IST Report Abuse
villupuram jeevithanஇந்த இரண்டையும் இனி தலை தூக்காத அளவுக்கு மரண அடி கொடுத்தால் தான் நல்லது தமிழ் நாட்டிற்கும், இந்தியாவுக்கும்....
Rate this:
Share this comment
Vetti Pechu - .,இந்தியா
18-ஜூலை-201217:35:47 IST Report Abuse
Vetti Pechuஇதுக்கும் ஒரு லெட்டர் போடலாமே... குஜராத் முதல்வரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது தானே. மின்சார பற்றாகுறை தீர solar power generation model பின்பற்றலாமே?...
Rate this:
Share this comment
Bala - NY,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201222:05:33 IST Report Abuse
Balaஇராஜா, தொண்டர்கள் விலகினால் என்ன ? இங்கு தான் பல்லக்கு தூக்கிகள் கோஷ்டி தலைவர்கள் இருப்பார்களே.... யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம் இளங்கோவன் இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
18-ஜூலை-201210:05:09 IST Report Abuse
Gokul Krishnan இதற்கு தான் அண்ணன் அஞ்சும் நெஞ்சனை பிரதமர் ஆக்க வேண்டும்
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-ஜூலை-201216:33:15 IST Report Abuse
villupuram jeevithanவிவசாயியின் எதிரி என்று மாறிவிட்டார் எல்லோருக்கும் ....ஆகவேண்டுமா ? நல்ல ஆசைதான் போங்கள்..i ....
Rate this:
Share this comment
Manikandan Bose - Chennai,இந்தியா
18-ஜூலை-201217:52:19 IST Report Abuse
Manikandan Boseஆமா... பேப்பர் ரோஸ்ட் கிட்னிக்கு ரொம்ப நல்லது,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.