COURT NEWS | பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறும் பெண்கள்:சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்| Dinamalar

பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறும் பெண்கள்:சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்

Added : ஜூலை 17, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். இதுபோன்ற பொய் புகாரால், உண்மையிலேயே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும் இரக்கம் இல்லாமல் போய் விடும்' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.டில்லியில் கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை, நான்கு ஆண்கள் ஒன்றாக சேர்த்து, கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இந்த குற்றத்துக்கு ஒரு பெண், உடந்தையாக இருந்ததாகவும் கூறி, டில்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண், பொய் வழக்கு தொடர்ந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த, நீதிபதி ஆர்.டி.திவாரி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை, விடுதலை செய்தார். இதன்பின், தீர்ப்பில் அவர் கூறியதாவது:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பொய் புகார்களால், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பாதிக்கப்படும் பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும், இரக்கம் இல்லாமல் போய் விடும். இதுபோன்று கொடூரமாக சிந்திக்கும் பெண்கள், யார் மீது வேண்டுமானாலும் புகார் கொடுப்பார்கள். பொய் புகார் கூறுகிறோம் என்ற பயமே, இந்த பெண்களுக்கு இல்லை. ஒருவர் மீது, பொய் புகார் தெரிவிப்பதற்காக, எந்த நிலைக்கும் இவர்கள் செல்வார்கள். அதனால், ஏற்படும் பாதிப்பு குறித்து, கவலைப்பட மாட்டார்கள். அதேநேரத்தில், பொய் புகார் கூறுகிறோமே என, வருத்தப்படவும் மாட்டார்கள்.'இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karam chand Gandhi - Auroville,இந்தியா
18-ஜூலை-201210:32:20 IST Report Abuse
Karam chand Gandhi இது ஒரு தவறான தீர்ப்பு . பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் சொல்லப்படவில்லை. பொய் புகார் கூறியவருக்கு தண்டனை அளிக்கப்பட வில்லை. இதை வழக்காக பதிவு செய்த வழகறிஞருக்கு தண்டனை இல்லை. நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உண்டு நீதிபதிக்கு அதிகாரமும் உண்டு . செய்யும் பட்சத்தில் பொய் வழக்குகள் குறையும். இல்லையேல் நீதிபதி மீது பொய் வழக்குகள் போடுவார்கள் இப்படி பட்ட பெண்கள். நீதிபதிகள் இன்னும் குற்றம் செய்தாலும் பெண்கள் மீது இரக்கம் காட்டுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kukuva - chennai,இந்தியா
18-ஜூலை-201208:38:13 IST Report Abuse
kukuva அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் அப்போது மற்றவர்கள் பொய்யாக வழக்கு தொடர்ந்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் வரும் இது வரை தண்டனை பெற்ற பெண்கள் யாரும் இல்லை அதனால் தான் சில உண்மையான அபலை பெண்களும் ஆண்களும் அதிக மன வேதனை மற்றும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் இதை இந்திய நீதி துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை