ராகுலுக்கு பதவி: சோனியா புது தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""கட்சியில் முக்கிய பங்கு வகிப்பது குறித்து, ராகுல் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்கள் முடிந்த பின், காங்கிரஸ் கட்சியில், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியானது. ராகுலின் கட்சிப் பணி குறித்து, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, விமர்சனங்கள் எழுந்ததாலும், அடுத்த லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக, ராகுலை தயார் படுத்தும் விதமாகவும், கட்சி மேலிடம் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங்கும், இதை உறுதி செய்வது போல், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில், ஹமீத் அன்சாரி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். சோனியாவும், அவருடன் வந்திருந்தார். அப்போது, ராகுல் விவகாரம் குறித்து, செய்தியாளர்கள், அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு சோனியா, "கட்சியில், முக்கிய பங்கு வகிப்பது குறித்தும், பெரிய அளவில் செயல்படுவது குறித்தும், ராகுல் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் சார்பாக, வேறு யாரும் முடிவு எடுக்க முடியாது' என்றார்.இதையடுத்து, ராகுல் பற்றிய வெளியான செய்திகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
19-ஜூலை-201219:42:56 IST Report Abuse
babu செல்ல பிள்ளைக்கு பதவி இல்லாமலா. எங்க இல்ல பிள்ளைக்கு கொள்கை இல்லாமலா. கட்சியே எங்கள் சொத்து. நாங்களே கட்சியில் தலைமை பூங்கொத்து, எங்களை மீறியா எல்லாமும்,
Rate this:
Share this comment
Cancel
19-ஜூலை-201216:18:25 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் ஊர் ஊராகப் போய் சொந்தக் கட்சியையே டெப்பாசிட் இழக்கவைத்தவன் பிரதமரா? கூரையேறி கோழி பிடிக்காதவன்....
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
19-ஜூலை-201215:32:46 IST Report Abuse
K.Balasubramanian புதிய ஜனாதிபதி காலத்தின் கட்டாயம் . ஆனால் இரண்டு ஆண்டுகள் உள்ளனவே -புதிய பிரதமர் பதவிகாலம் ?
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
19-ஜூலை-201219:51:47 IST Report Abuse
babuமன்மொஹனுக்கு எப்படி எல்லாம் செக் போடுறாங்க பாருங்க, நம்ம ஊரு பாணியில மன்மோகன் பேரை கெடுகிற விதமாக டைம் ல போட்டானுங்க பாருங்க. அடுத்த அறிவிப்பு இங்க அறிக்கை விடுறாங்க. இந்தியாவை மொயுரதுக்கு உலகத்துல ஒரு கூட்டம் உலாவி கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார் வளர்ச்சி, தடைகளை மீறி அன்று அணு குண்டு வெடிப்பதற்கான தன்னம்பிக்கை எல்லாமே மன்மோகன் செய்த மாற்றங்கள் தான். அன்று நரசிம ஆட்சியில் மௌவுனமாக இருந்து செய்த விளைவு இன்று அனுபவிக்கிறோம். ஜெய் சக்தி என்று சொல்லி பர்லிமென்டுக்கு வெளியில் குண்டு சப்தம் கேட்டதும் பெஞ்சுக்கு அடியில் ஒளிந்தவர்கள் யார், இருக்கட்டும் கழுத்துக்கு கத்தி நீட்டும் கதி சரணாகதி மன்மொஹனுக்கே, கொஞ்ச நாள் முன்னாடி வருங்கால ப்ரெசிடென்ட் சொன்னார் ராகுல் பதவிக்கு வர வேண்டும் என்று, இப்படி அவர் வாய் மொழி கொடுத்ததால் இன்று ப்ரெசிடென்ட் வேட்பாளர், இப்படி தான் இந்திய அரசியல்,...
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
19-ஜூலை-201215:13:00 IST Report Abuse
vidhuran நேரு குடும்பத்தாரை நாம் அனைவரும் தொடர்ந்து அவதூறு பேசினாலும், அவர்கள் இந்தியாவின் நன்மைக்காக எடுத்த முடிவுகளுக்காகத்தான் தங்களின் உயிரை தியாகம் செய்திருக்கிரார்கலேயன்றி, அவர்கள் தங்களின் குடும்ப நன்மைக்காகவோ/குடும்ப பாதுகாப்பிற்காகவோ தீவிரவாதிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டு தங்களின் உயிர்களை இழக்கவில்லை, இதுவரை இந்திரா காந்தியின் குடும்பம் இந்தியா தீவிரவாதிகளாலும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களாலும் மொத்தமாக கொலையுண்டு சின்னாபின்னமாக்கப் பட்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
19-ஜூலை-201220:01:23 IST Report Abuse
babuஅரசியலில் எடுத்தேன் சாய்த்தேன் என்று முடிவு எடுப்பது பெரிதல்ல, ஒன்றை சாய்ப்பதற்காக எடுக்கும் முடிவு வழி சிறந்த முறையில் நமது பாதுகாப்பு முறையில் தொய்வு இல்லாத வண்ணம் இருக்க வேண்டும். இந்திரா இறந்தது சொந்த பாதுகாவலர்கள் அவர்களோ சீக்கியர்கள், ராஜீவ் இறந்தது அன்பு தமிழர்களின் விடுதலை புலி அன்பர்கள் ஒன்றை சாதிக்க வெளி நாடு கயவர்கள் நாம் எதை விரும்புகிரோமோ அதையே ஆயுதமாக மாற்றி விடுவார்கள், நமது புராண கதைகளை நம்புங்கள், அதையே நம்மக்கு தீய சக்திகள் இல்லை புத்திசாலிகள் அறிந்து ஆவன செய்தனர், இந்திய நன்மை என்பது எதையாவது செய்வது அல்ல, செய்ததால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்றவாறு செய்க, இப்படி உயிர் விடுவதற்கு பயந்தால் இந்திய நாட்டில் வாழ்வதே கடினம்,...
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
19-ஜூலை-201214:28:35 IST Report Abuse
s. subramanian அப்ப தமிழ்நாடு கிராமங்களுக்கு எப்ப கஞ்சி குடிக்க வருவார் என கேட்டு சொல்லுங்க சோனியாவிடம். இருக்கிற அஞ்சாறு சீட்டும் அம்போதான்..... ஏற்கனவே....
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
19-ஜூலை-201212:04:56 IST Report Abuse
Daniel Joseph ஐயோ நிம்மதி. காங்கிரஸ் இனி இல்லை என்பது இதன் மூலம் நிருபணமாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
19-ஜூலை-201211:22:34 IST Report Abuse
manoharan இந்த காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு சுத்தமான இந்திய குடும்பத்தில் தலைவர் கிடைக்க மாட்டாரா? இவன் அம்மா இத்தாலிகாரி, இவன் மனைவி ஸ்பெயின்காரி. ஆங்கிலேயரை விரட்டி எதற்காக சுதந்திரம் பெற்றோம்? இந்த குடும்பத்திற்கு அடகு வைத்து அவர்கள் கொள்ளை அடிக்கவா?
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
19-ஜூலை-201210:33:04 IST Report Abuse
T.R.Radhakrishnan ராஹுலுக்கு நம்ம ஊரு அழகிரி, கனிமொழியே பரவாயில்லை.
Rate this:
Share this comment
nagainalluran - Salem,இந்தியா
19-ஜூலை-201213:29:11 IST Report Abuse
nagainalluranஏன் ராதா ராகுல் பாராளுமன்றத்துல ஓரளவுக்கு நல்லா பேசுவாரே. அழகிரி எப்படி இவரை விட பரவாயில்லை. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-201210:27:50 IST Report Abuse
Kasimani Baskaran இராகுலே முடிவு செய்யவேண்டும் என்றால் மற்றவர்களுக்கு கட்டுப்பட்டவர் ஆகா மாட்டார். அப்படி என்றால் ஏற்கனவே பிரதமர் பதவிக்கு அடையாளம் காணப்பட்டு விட்டார். சீக்கிரம் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-ஜூலை-201208:48:08 IST Report Abuse
villupuram jeevithan ஆமாம், அவரே அவரது பதவியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுவார்??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்