E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2012,23:55 IST
கருத்துகள் (262)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

""எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அடாவடியாக செயல்பட்டு வருவது குறித்து, எனது கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அடாவடிகளை திருத்திக் கொள்ளுங்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களைப் பார்த்து சும்மா இருக்க மாட்டேன்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சர் பதவியில் இருந்த செங்கோட்டையன் தூக்கியடிக்கப்பட்டார். அவரிடமிருந்த அ.தி.மு.க., தலைமை நிலைய செயலர் என்ற பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
புது மந்திரி:செங்கோட்டையனுக்கு பதிலாக, புதிய வருவாய் துறை அமைச்சராக, வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ., இன்று, ராஜ் பவனில், காலை 8.30 மணிக்கு, மந்திரியாக பதவியேற்கிறார்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களைத் தொடர்ந்து, ஜெயலலிதா விடுத்துள்ள எச்சரிக்கையால், எம்.எல்.ஏ.,க்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். செங்கோட்டையனின் பதவி பறிப்பால், அமைச்சர்கள் மத்தியிலும் கிலி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, ஆட்டம் போடும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கொட்டம் அடங்கும் என எதிர்பார்க்கலாம்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள் கூட்டம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதற்கு, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நடந்த இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.அப்போது, ஜனாதிபதி தேர்தலில், கட்சியின் நிலைப்பாட்டைக் கூறி, ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவுக்கு ஓட்டளிக்குமாறு, எம்.எல். ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க் களை அவர் கேட்டுக் கொண்டார் என கூட்டத்தில் பங்கேற்ற

எம்.எல். ஏ.,க்கள் கூறினர்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், அடாவடிகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. "கவுன்சிலர்கள், தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால், மாநகராட்சியைக் கலைத்து விடுவேன்' என, எச்சரித்தேன். ஆனால், பலர், இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை. இதேபோல், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், அடாவடியாக செயல்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும், என் பார்வைக்குவந்து கொண்டு தான் உள்ளது; எம்.எல்.ஏ.,க்கள், தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்க மாட்டேன்; கடும் நடவடிக்கை எடுப்பேன். கருணாநிதியைப் போல அனைத்தையும் பார்த்துக் கொண்டு, அமைதியாக இருந்து விடமாட்டேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எச்சரித்ததாக, கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.
மந்திரிக்கு கல்தா:வெறும் எச்சரிக்கையோடு கூட்டத்தை நிறைவு செய்யாமல், "சீனியர்' அமைச்சர் என்ற நிலையில் இருந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை அதிரடியாக, "டிஸ்மிஸ்' செய்து ஜெ., உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்து வந்த தலைமை நிலையச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களில் துவங்கி, எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர்கள் வரையிலான செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையினர் முதல்வருக்கு தொடர்ந்து அறிக்கைகளை அளித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில், ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டி, கவுன்சிலர்களை, முதல்வர் எச்சரிக்கை செய்ததோடு, தவறு செய்யும் கவுன்சிலர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்தார். மேலும், ஜூலை மாதத்துக்குள்,

Advertisement

கவுன்சிலர்கள், தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல், மாநகராட்சியைக் கலைத்து விட்டு, தனி அலுவலர் மூலம், மாநகராட்சியை நடத்தி விடுவேன் என, அவகாசமும் கொடுத்திருந்தார்.ஆனால், ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்குப் பின்னரும், கவுன்சிலர்கள் சிலர், அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டே இருந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், இதேபோல் நடந்து கொண்டிருப்பதும், முதல்வரின் பார்வைக்கு சென்றதால், கோபமடைந்த அவர், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.வெறும் எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள்ளாமல், செங்கோட்டையனை அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக "டிஸ்மிஸ்' செய்ததன் மூலம், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு, முதல்வர் கிலியை ஏற்படுத்தியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த எச்சரிக்கைக்குப் பின், தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத எம்.எல்.ஏ.,க் கள் மீது, கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (262)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V. Mathiyalagan - Thanjavur,தான்சானியா
20-ஜூலை-201212:15:34 IST Report Abuse
V. Mathiyalagan தஞ்சாவூர் பக்கம் கொஞ்சம் திரும்பி பாரும்மா. அங்கே கொஞ்சம் கலை எடுத்தாதான் கட்சி நல்லா இருக்கும். மந்திரி, மாவட்டம், ஒன்றியம் எல்லாம் ஊழல் தான். பழைய அரசியல் வாதிகளுக்கு கொஞ்சம் பதவி கொடுங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
19-ஜூலை-201223:00:34 IST Report Abuse
சாமி மாற்றம் வேண்டிதானே ஓட்டுபோட்டீர்கள். அதுதான் அமைச்சர் அதிகாரிகளை மாற்றிகொண்டே இருக்கிரார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Senthil Kumar - tirupur,இந்தியா
19-ஜூலை-201222:07:49 IST Report Abuse
Senthil Kumar ஆட்சி முடியறதுக்குள்ள எல்லா MLA வும் மந்திரி ஆயிடுவாங்க. நல்ல ஆட்சி நல்ல CM . கலக்குறிங்க அம்மா ..........???????????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ragam Thalam - Madurai,இந்தியா
19-ஜூலை-201221:38:21 IST Report Abuse
Ragam Thalam ஜெயலலிதாவுக்கும் செங்கோட்டயனுக்கும் உள்ள பிரச்சனை என்னன்னு அவங்க கட்சியிலுள்ள மத்தவங்ககளுக்கு கூட தெரியாது( ஜெயலலிதாவுக்கே தெரியுமோ, என்னவோ ). "நமது சிறப்பு நிருபர்" தினமலரின் சொந்தக் கருத்தை திணி திணின்னு திணிச்சிருக்கிறாரு?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
VSK - CARY,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-201221:03:14 IST Report Abuse
VSK அம்மா கோபம்லாம் ஆறு நாளுல தீந்துரும் :)))
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
19-ஜூலை-201219:36:59 IST Report Abuse
babu பால் கொடுத்த பசுவை கரி கடைக்கு அனுப்புவது எஜமானின் வேலை, அப்படி இல்லை என்றால் எஜாமான் அல்ல, கட்சிக்காக பணயம் வைத்தவர்கள் எவரும் இதை எதிர்ப்பார்க்காமல் இருக்க முடியாது. இப்பொது அடங்கி ஒடுங்கி பாவலா காட்டுவது இந்த மாதிரி பலி கடா ஆகாமல் இருக்க தான், எக்கி வெளியேற்றிய சசி கே கேட் மீண்டும் திறக்க பட்டது, தூக்கி வீசிய பந்து மீண்டும் கூடைக்குள் வந்து விழாமல் போகாது, சும்மா கட்சி சுத்தமானது என்று அவ்வப்போது திரு விளளையாடல் காட்டினால் மக்கள் அடிமை மக்கள் மகிழ்வார்கள்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூலை-201219:21:18 IST Report Abuse
gummanguthu gopi எப்படியோ மஞ்சள் துண்டு மேலும் ஒரு ஆட்சிக்கு காத்து இருக்கிறது. தமிழக கடன் ௩ லட்சம் கோடி யை த்ஹண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
19-ஜூலை-201219:16:37 IST Report Abuse
S  T Rajan நல்ல முடிவு.......இப்படிப்பட்ட சி. எம். தான் எங்களுக்கு வேண்டும்...எல்லா அரசு நிறுவனத்தில் இருந்து லஞ்சம் என்ற பணபேஎய் விரட்டினால் நம்ம தமிழ்நாடு நல்லா இருக்கும் . அதையும் முதலமைச்சர் செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Muthukumar Jeevarathinam - trichy,இந்தியா
19-ஜூலை-201216:29:33 IST Report Abuse
Muthukumar Jeevarathinam இப்போது இருக்கும் தீமையில் நல்ல தீமை ஜெயா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
19-ஜூலை-201216:15:29 IST Report Abuse
Thamilan-indian இப்படி ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுத்துக்கொண்டே போனால் கட்சியை யார் வளர்ப்பது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
19-ஜூலை-201222:26:54 IST Report Abuse
Karam chand Gandhi மக்கள் நடத்துவார்கள். குற்றம் புரிய நினைப்பதே தவறு என தோன்ற வேண்டும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.