புதுடில்லி: ""காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும், மிக முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள நான் தயார். ஆனால், நான் முக்கிய பொறுப்பை, எப்போது ஏற்றுக் கொள்ள வேண்டும்; கட்சியில் தீவிர பணியை எப்போது செய்ய வேண்டும் என்பதை, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கூறியுள்ளார். இதனால், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்றும், அதில், கேபினட் அமைச்சர் பதவி ராகுலுக்கு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு, விரைவில் கட்சியிலும், ஆட்சியிலும், முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, சமீப நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு, கட்சியின் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு ஹமீத் அன்சாரி வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்ச்சியில், நேற்று முன் தினம் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சோனியா, "கட்சியிலும், ஆட்சியிலும், முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பாக, ராகுல் தான் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
பரபரப்பு: இந்தச் சூழலில், ஜனாதிபதி தேர்தலில் நேற்று ஓட்டு போட வந்த காங்கிரஸ் பொதுச்
வரவேற்பு: "முக்கிய பொறுப்பை ஏற்கத் தயார்' என, ராகுல் அறிவித்ததை, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராகுல் மிக முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொண்டால், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். அது வரவேற்கத்தக்க நடவடிக்கையே. ஆட்சியிலும், கட்சியிலும் ராகுல் என்ன பொறுப்பை ஏற்றுக் கொள்வது என்பது குறித்து, அவரும், கட்சித் தலைமையும் தான் முடிவு செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், வீரப்ப மொய்லி, கி÷ஷார் சந்திரதேவ் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும், ராகுலின் முடிவை வரவேற்றுள்ளனர். "ஆர்வமிக்க, துடிப்புடன் செயல்படக்கூடிய இளம் தலைவரான ராகுலின் பங்களிப்பு, கட்சிக்கும், மத்திய அரசுக்கும்
கேபினட் பதவி: ஜனாதிபதி தேர்தலுக்காக பல விஷயங்களை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். சிந்தாமல், சிதறாமல் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அவ்வாறு பெற்று முடித்த பின், பல விஷயங்களை கையில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல் கிளம்பியுள்ளது. வெகு விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்கலாம். அதில், ராகுலும் கேபினட் அமைச்சராகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசியல் அரிசுவடி தெரியாத ரவிக்கு, உன் மூஞ்சியை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்து கொண்டு விமர்சனம் செய்யயும். தமிழ்நாடு, யு.பி, பீகார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான விழவில்லை எப்படி திமுக, அதிமுக என்ற மாயையில் தமிழர்கள் விழுந்து விட்டார்கள். அது மாதிரி, மேலே குறிப்பிட்ட மாநிலங்களிகும் மக்கள், மாயாவதி, முலாயம் சிங்க் யாதவ், நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் கட்சியில் சங்ககமாகி விட்டார்கள். தேசிய கட்சியான் பிஜெபி பாப்ரி மசூதியை இடித்தும் அவர்களால் உபி யில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதுதான் உண்மை nilay. மூஞ்சி பார்த்து யாரும் ஒட்டு போடுவதில்லை, தமிழர்கள் தான் சினிமா நடிகர்களை பார்த்து ஒட்டு போடுகிறார்கள்.....
முக்கிய பொறுப்பேற்க நான் தயார். ஆனால் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.ராகுல் கருணாநிதியை கேலி செய்கிறாரோ கருணாநிதியிடம் சில கேள்விகளைக் கேளுங்கள்:
தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டிஇடுவீர்களா?
பொதுக்குழு,செயற்குழு கூடி முடிவெடுக்கும்.
மகனுக்கோ மகளுக்கோ பேரனுக்கோ பதவி பெற்றுத்தருவீர்களா?
குழுக்கள் முடிவெடுக்கும்.
டெசோ மாநாடு கூட்டப்படுமா
குழுக்கள் முடிவெடுக்கும்.
பிரம்மாண்டமான டெசோ மாநாடு விழுப்புரத்திலிருந்து மாற்றமா? பொதுக்குழு,செயற்குழு கூடி முடிவெடுக்கும்.
சென்னைக்கு மாற்றமா?
பொதுக்குழு,செயற்குழு கூடி முடிவெடுக்கும்.
மத்திய அரசு அழுத்தத்தினால் மாநாட்டுக்குப்பதில் பொதுக்கூட்டம் மட்டுமே நடை பெறுமா?
பொதுக்குழு,செயற்குழு கூடி முடிவெடுக்கும்,
அல்லது அதையும் ரத்து செய்தால்தான் இலங்கைத்தமிழர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக ராஜபக்ஷே சொன்னதாக மத்திய அரசிடமிருந்து தகவல் வந்ததால் உண்ணாவிரதத்தைப்போல இதையும் கலைத்து விடுவீர்களா? பொதுக்குழு,செயற்குழு கூடி முடிவெடுக்கும்.
இந்தியர்கள் அனைவரின் மனநிலையும் நமது வருங்காலப் பிஞ்சுக் குழந்தைகளின் அமைதியான வாழ்க்கையை நினைத்து வருத்தப் பட்டு, தீவிரவாதத்தை வெறுப்பதற்குப் பதிலாக, தீவிரவாதத்தை போற்றிப் புகழ்ந்து, அது போன்ற இயக்கங்களில் இணையும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை இங்குள்ள ஒரு சில வெறிகலந்த கருத்துக்களின் வாயிலாகவும், அவர்கள் ஆதரிக்கும் கட்சிகளின் வரலாறு வாயிலாகவும் தெரிய முடிகிறது.
உலகமே போற்றிய மிகச் சிறந்த இந்திய பிரதமராகிய இந்திரா காந்தியையும் கொலை செய்து விட்டோம், அவரின் மகன் ராஜிவையும் தீயில் கருக்கி அவரின் உடலை சின்னா பின்னமாக்கி விட்டோம். ராகுல் அவர்கள், தனது பாட்டிக்கும், தனது தந்தைக்கும் நடந்த கொடூரத்தை பார்த்த பின்பும், தன் மீதும் இப்போதிருக்கிற காரணமில்லாத வெறுப்பைப் பார்த்த பின்பும், தனது பரம்பரையின் மேல் இவ்வளவு தீவிரவாத எண்ணம் கொண்ட, எந்தவொரு கொலை பாதகச் செயலுக்கும் அஞ்சாத இந்தியாவில் எந்தவொரு அரசு பொறுப்பும் வகிக்க நினைக்காமல், ராகுல் அவர்கள் பேசாமல் ஏதாவதொரு அமைதியான மாநிலத்தில் செட்டிலாகி விடுவது நல்லது. இந்தியச் சுதந்திர போராட்டம் முழுக்க வெற்றியுடன் நடந்தேற தொடர்ந்து பலதரப்பட்ட தலைவர்களுக்கும், இயக்கங்களுக்கும் பணஉதவி செய்த ஒரே ஒரு குடும்பம் மோதிலால் நேரு குடும்பம். அந்தக் குடும்பத்தில் மிஞ்சி இருப்பதோ இந்த ராகுல் தான். பேசாமல் அரசியலை மறந்து, திருமணம் செய்து கொண்டு, தன் குடும்பத்திற்கென்று ஏதோ குழந்தை குட்டிகளை பெற்று நீண்ட ஆயுசுடன் வாழ வாழ்த்துங்கள் நல்ல தோழர்களே.
Winston churchill predicted exactly cent percent about India after the British people handed over India to us after the Indepence. "POWER will go to RASCALS,All Indian leaders will be of low calibre and men of straw,They will have SWEET TONGUES and SILLY HEARTS,they will fight among themselves for POWER and India will be lost in Political squabbles and even air and water will be taxed. g.s.rajan,chennai.
What will be his (Rahul's) approach in Sri Lankan Tamil's issue? If you read any news (like the one follows), kindly confirm whether any other media published this news. \\\\ இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு உதாரணமாக, புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதைக் கூறலாம் என்று இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ////
எனக்கு ஒரே ஒரு சந்தேகம். நாடாள வருபவர்கள் இந்திய விடுதலை வரலாற்றை அறிவார்களா? ஜாலியன்வாலாபாக் படுகொலைபற்றித் தெரியுமா? தண்டி யாத்திரை எதற்காக நடத்தப்பட்டது என்று படித்திருப்பார்களா? நவகாளியில் காவல்நிலையம் எரியூட்டப்பட்டபோது, காந்திஜி மக்கள் தலைவர் என்ற முறையில் என்ன சொன்னார் என்று அறிவார்களா? பெலியகட்டா என்ற இடம் கொல்கத்தாவில் உண்டு. அது முக்கியத்துவம் வாய்ந்த இடம். ஏன் என்று தெரியுமா? இங்கே ஜீவா என்ற ஒரு மனிதன் ஏழையாகவே பிறந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே இறந்த வரலாறு உண்டு. அவரைத்தேடி காந்திஜி வந்தார். வ.உ.சி பெரும்செல்வந்தராய்ப் பிறந்தாலும், தன இறுதிக் காலத்தை பலசரக்குகள் விற்றுத்தான் நடத்தவேண்டியிருந்தது. தன் சொத்து முழுவதையும் இந்த தேசத்துக்காகவே செலவிட்டார். எழையாகி போனார். என்னைக் கலகக்காரன் என்று சொல்லாதே, விடுதலை போராட்ட வீரன் என்று குற்றம்சாட்டி, தூக்கில் இடு என்றான் பகத்சிங். இதுபோல பல செய்திகள் அறிந்தால், சும்மா கிடைத்ததில்லை சுதந்திரம் என்று புரியும். இந்த நாடு நமது, இதை உலக அரங்கில் தலைநிமிரச் செய்வது நமது கடமை என்றும் புரியும். நம்நாடு பொருளாதாரத்தில், கல்வியில், விளையாட்டில், தொழிலில் இன்னும் எல்லா துறைகளிலும் உயரவேண்டும். சர்ச்சில், இந்தியர்களுக்கு ஆளத்தெரியாது, அவர்கள் தமக்குள்ளே சண்டையிட்டு அழிவார்கள் என்று சொன்னார். அப்படி நடக்க அனுமதித்தால் அது நமது கௌரவப் பிரச்னை என்பதும் புரியும். செல்வச் செழிப்பில் பிறந்தாலும் வளர்ந்தாலும், பிறர் துயரங்களைத் தமதாகப் பார்க்கின்றவர், உணர்கின்றவர் மட்டுமே ஒரு நல்ல தலைவனாக முடியும். ஏனென்றால் ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தல் வெற்றியைக் கணக்கிடுவார். ஒரு தலைவன் அடுத்தத் தலைமுறைக்கும் சேர்த்து சிந்திப்பான்....அவ்வளவுதான். ஒரு உழைப்பாளியிடம் இந்த நாட்டை ஒப்படைக்கவேண்டும். அப்போதுதான் இத்தேசம் சீர்மைபெறும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.