Rajiv discribed Manmohan as a Joker: C.G. Somiah | மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்: சுயசரிதையில் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்: சுயசரிதையில் தகவல்

Updated : ஜூலை 21, 2012 | Added : ஜூலை 19, 2012 | கருத்துகள் (44)
Advertisement

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, "பெரிதாக எதையும் சாதிக்காதவர்' என, அமெரிக்காவின் "டைம்' பத்திரிகை சமீபத்தில் விமர்சித்திருந்தது. அது, பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியது. ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், 20 ஆண்டுகளுக்கு முன்னரே, மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என, விமர்சித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற சி.ஜி.சோமையா, "தி ஹானஸ்ட் ஆல்வேஸ் ஸ்டாண்ட் அலோன்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 1985 - 90ம் ஆண்டுக்கான, ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தை, அப்போதைய பிரதமர் ராஜிவ் விரும்பவில்லை. வளர்ச்சிக்கான அம்சங்கள் ஏதுமில்லை என, அவர் கூறினார். அப்போது, திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர் மன்மோகன் சிங். திட்டக் குழுவில் உறுப்பினர் செயலராக நானும் இடம் பெற்றிருந்தேன்.


ஷாப்பிங் மால்: வெளிநாட்டில் படித்து, வளர்ந்து நகரத்து வாழ்க்கைக்கு பழகிவிட்ட ராஜிவுக்கு, நகரம் சார்ந்த வளர்ச்சி தான் தெரிந்திருந்தது. எனவே, விமான நிலையங்கள், அதிவிரைவு ரயில்கள், "ஷாப்பிங் மால்,' பொழுதுபோக்கு வளாகங்கள், நவீன மருத்துவமனைகள், உயர் தொழில்நுட்ப சுகாதார மையங்களை உருவாக்க அவர் விரும்பினார். இது தொடர்பாக, திட்டக் குழு உறுப்பினர்களான நாங்கள் மட்டும் கூடி விவாதித்த போது, பிரதமர், நகர்ப் புறம் சார்ந்து சிந்திக்கிறார். கிராமங்களில் உள்ள நலிந்த மக்களைப் பற்றி அவருக்கு தெரியவில்லை என, நாங்கள் ஒருமனதாக தீர்மானித்தோம். ராஜிவ் கலந்து கொண்ட அடுத்த கூட்டத்தில், ஐந்தாண்டு திட்ட அம்சங்களை விளக்கி மன்மோகன் பேசியபோது, பொருளாதாரத்தின் பாதகமான அம்சங்களையும், அவற்றை ஒதுக்க இயலாதது குறித்தும் குறிப்பிட்டார். இதில், ராஜிவ் திருப்தி அடையவில்லை.


விலக திட்டம்: கூட்டத்துக்குப் பின் நிருபர்களை சந்தித்த ராஜிவ், திட்டக் கமிஷனை, "ஜோக்கர்கள் கூட்டம்' என்றும், வளர்ச்சிக்கான நவீன யுத்திகள் எதுவும் அறியாதவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனால், மனம் புண்பட்ட மன்மோகன் சிங், பதவி விலக திட்டமிட்டார். ஆனால், "பிரதமர் அனுபவம் இல்லாதவர்; சிறு வயதில் தெரியாமல் பேசுகிறார்' என, நான் சமரசம் செய்த பின், அதை ஏற்று, தொடர்ந்து பதவியில் மன்மோகன் நீடித்தார். மன்மோகன் எப்போதும் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர். சீர்திருத்த முடிவுகளை துணிச்சலுடன் மேற்கொள்ளும் வழக்கம் அவருக்கு இல்லை. தலைமையின் கட்டளையை அப்படியே செயல்படுத்துவது தான் அவருக்கு தெரியும். அவரை பொருளாதார சீர்திருத்தவாதி எனப் புகழ்வது தவறு. அவரை ஒரு நல்ல, "டீம் பிளேயர்' என்று வேண்டுமானால் சொல்லலாம் என தெரிவித்துள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meekannan - Chennai,இந்தியா
21-ஜூலை-201200:29:15 IST Report Abuse
meekannan ஐய் இது நல்ல இருக்குதே. ஜனங்களே ரோட்லே உள்ள எல்லா புக்கும் வாங்கி படிங்க நம்ப ஒவ்வொரு அரசியல் தலைவர்களை குறிச்சு சொல்லி இருப்பாங்க நம்பளும் அவங்களை பத்தி நிறைய தெரிசுக்க வாய்ப்பு இருகிறது.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
20-ஜூலை-201218:26:54 IST Report Abuse
K.Balasubramanian தற்போது ஜோக்கர் என தந்தையால் வர்ணிக்கபட்டவருக்கு, மகனுக்கு முடி சூடும் வாய்ப்பு. என்ன தான் நடக்க போகிறதோ ? இறைவனுக்கே வெளிச்சம் .
Rate this:
Share this comment
Cancel
ippave kanna kattuthe - திருச்சி ,இந்தியா
20-ஜூலை-201217:17:41 IST Report Abuse
ippave kanna kattuthe என்ன இருந்தாலும் ஒரு மனுசன இப்பிடி அசிங்கபடுதக்கூடாது.அவரும் எவ்ளோ நாள் தான் தாங்குற மாதிரியே நடிப்பார்முடில அழுதுருவேன் ..
Rate this:
Share this comment
Cancel
raj - chennai,இந்தியா
20-ஜூலை-201216:38:32 IST Report Abuse
raj எல்லாம் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க, இவரை இந்த மாதிரி பேசி பதவி பறிக்க செய்யும் அரசியல் கேம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஜூலை-201217:18:58 IST Report Abuse
Nallavan Nallavan"மண்" புரிந்து கொண்டு தானாகவே விலகும் சூழ்நிலை உண்டாக்கப்படுகிறது பெரிசுக்குப் புரியணுமே...
Rate this:
Share this comment
Cancel
rama kumaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-201216:19:41 IST Report Abuse
rama kumaran ஓரு வால்ட்டர் வெற்றிவேல், கேப்டன் பிரபாகரன், அன்புசெல்வன் அப்டி இருப்பாருனு பார்த்தா நம்ப மன்மோகன் "சிரிப்பு போலீஸ்" சா தான் இருக்காரு. இதுவும் நல்லது தான், யாருக்கு.......... யாருக்கோ அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா............. வரும் ஆனா வராது.
Rate this:
Share this comment
Cancel
Raaj Mohan - Chennai,இந்தியா
20-ஜூலை-201213:55:51 IST Report Abuse
Raaj Mohan இது எப்படி இருக்கு காங்கிரஸ் ஆட்சி ஆரம்பிக்கும் போது ஒரு செட்டியார் / நகரத்தார் நிதி அமைச்சர், காங்கிரஸ் அரசியல் சகாப்தம் முடியும் போதும் ஒரு செட்டியார் / நகரத்தார் நிதி அமைச்சர் ஆக இருந்தா தானே பினிஷிங் டச் இருக்கும் லாஜிக் சரிதானே நண்பர்களே ?
Rate this:
Share this comment
Cancel
Mohamed Mansoor Viyathukattuva Mohamedali - Eindhoven,நெதர்லாந்து
20-ஜூலை-201212:41:48 IST Report Abuse
Mohamed Mansoor Viyathukattuva Mohamedali ஹஹ்ஹாஹ்.. தினமலர் அரசியல் சார்புடைய நாளிதழ் போன்று சிந்திக்க வைக்கிறது இந்த "தலைப்பு"... மன்மோகன் சிங்கை மட்டும் ஜோக்கர் என ராஜீவ் கூறவில்லை ... மாறாக திட்ட கமிசன் தான் ஜோக்கர் என கூறினார் .... இதை கவனியுங்கள் நண்பர்களே .... ஆனால் தலைப்போ ?
Rate this:
Share this comment
Cancel
Arun, Chennai. - chennai,இந்தியா
20-ஜூலை-201211:38:15 IST Report Abuse
Arun, Chennai. அட பாவிகளா.. என்னருமை இந்திய குடிமாக்கான்களா.. பேச்சு திறமை இல்லைனா பிரதமரா இருக்ககூடாதுன்னு சொல்ல வர்றீங்களா?? சரி அப்படியே வச்சுக்குவோம்.. கருத்த எழுதற நமக்குதான் எல்லாம் தெரியுமே எங்கே பிரதமராவதுக்கு தகுதியான ஒரு பத்து பேர சொல்லுங்க பாப்போம்?? நீங்க சொல்ற பத்துபேரும் நல்லா பேசுவாங்க ஆனா ஊழல் பேர்வழியாவோ இல்ல செயல் திறமை இல்லாதவங்கலாவோ மட்டும் தான் இருப்பாங்க.. ஒரு திறமையான மனுசன என்னல்லாம் சொல்றீங்க..
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
20-ஜூலை-201211:34:15 IST Report Abuse
saravanan யார் எதை சொன்னாலும் அதை பத்தியெல்லாம் கவலைப்படாம தன் வேலையை மட்டும் பார்க்கிறதுல யாரு நம்பர் 1 சொல்லுங்க பார்க்கலாம்......... மன்மோகன் சிங்கா இல்ல பவர் ஸ்டார் சீனிவாசனா???
Rate this:
Share this comment
Cancel
Jayaprakash Subramaniam - Chennai,இந்தியா
20-ஜூலை-201211:19:49 IST Report Abuse
Jayaprakash Subramaniam சி.ஜி.சோமையா யாருங்க இவர். மன்மோகன் team ஐந்தாண்டு திட்டத்தில், நகர்ப்புறங்களின் வளர்ச்சிக்கு மட்டும் திட்டமிடவது தவறு என்று தைரியமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதை அனுபவமற்ற அந்த கால ராஜிவால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இதில் மன்மோகன் தவறு என்ன என்று புரியவில்லை. சோமையாவுக்கு அவர் மேல் உள்ள போறாமையையே அவரது வரிகள் காட்டுகின்றன. தவறான, அனுபவமற்ற தலைவனை தெரிவு செய்தது யார் தவறு. நாம் இன்னும் மன்னர் ஆட்சி மனப்பான்மையில் இருந்து மாறவில்லை. நேரு போன பிறகு, நமக்கு திரும்பவும் அவர் குடும்பத்தில் இருந்துதான் தலைவர்கள் கிடைக்கிறார்கள். இன்றும், மோடி என்ற மனிதர், குஜராத் மாநிலத்தை சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்கிறார்கள். சரி அவருக்கு ப்ரோமோசன் கொடுக்கலாம் என்றால் திட்டமிட்டு அவர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று செய்தி பரப்பி கொண்டிருக்கிறார்ர்கள். ஏன் குஜராத்தில் சிறுபான்மையினரே இல்லாமல் அழித்து விட்டாரா? அவர் அந்நிய தீயசக்திகளுக்குதான் எதிரியாக உள்ளார். சரி, மன்மோகன் சிங்கிற்கு வருவோம். வேறு வழி இல்லாமல் மன்மோகன் தலைமை ஏற்றுள்ளார். அவர் ஏற்கனவே இந்த பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், சோமையா சொன்னது போல, அவருடைய தவறான தலைமைக்கு கட்டுப்பட்டு அந்த பதவியில் நீடித்து கொண்டிருக்கிறார். அவருக்கு பதவி ஆசை இருப்பது போல் தெரியவில்லை. இதோ, ராகுல் வந்துவிட்டார். இனி மக்கள் விருப்பப்படி பதவி விழகுவார் என்று நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை