Porn pictures in Govt., free laptops | விலையில்லா மடிக்கணினியில் ஆபாச காட்சிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா மடிக்கணினியில் ஆபாச காட்சிகள்

Updated : ஜூலை 21, 2012 | Added : ஜூலை 19, 2012 | கருத்துகள் (103)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியில், ஆபாசக் காட்சிகளை பதிவிறக்கம் செய்வதை, சென்னையில் நடந்த சோதனையில் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மூன்று மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பர்மா பஜார், இரண்டாவது கடற்கரை சாலை, பாரிமுனை ரத்தன் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர். இதில் புதுப்பட மற்றும் ஆபாசப் பட "சிடி'க்கள் சிக்கின. பர்மா பஜாரில் முகமது சகி கடையில் நடந்த சோதனையில், மாணவர்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியில், ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அலைபேசியில் பயன்படுத்தப்படும் மெமரி கார்டுகளில் பதிவு செய்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வினியோகிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த வகையான மெமரி கார்டுகள், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், பென் டிரைவ்கள் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக முகமது சகி மற்றும் சையத் இப்ராகீம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


எட்டாயிரம் ரூபாய்: மாணவர்கள் கல்வித்திறனை மேம்படுத்த விலையில்லா மடிக்கணினிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது. இவற்றில் சில பர்மா பஜார் சந்தையில், 10 ஆயிரம் ரூபாய் வரையில் விலை வைத்து விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் வியாபாரிகள், அதிக விலைக்கும், ஆபாசப் படக் காட்சிகளை பதிவிறக்கம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். தற்போது அரசின் விலையில்லா மடிக்கணினிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக, பர்மா பஜார் பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
j.prakash - covai,இந்தியா
25-ஜூலை-201219:44:49 IST Report Abuse
j.prakash பசங்க வீட்டுக்கே போகமாட்டாங்க எல்லா பாடமும் பள்ளிலதான்
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - kulalumpur,மலேஷியா
24-ஜூலை-201208:31:38 IST Report Abuse
balasubramanian இது ஓவர் மன்னிக்க முடியாத குற்றம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஜூலை-201216:13:37 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இதுதொடர்பாக முகமது சகி மற்றும் சையத் இப்ராகீம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். //// Enough, I do not want to say anymore Let the society think
Rate this:
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
20-ஜூலை-201218:28:17 IST Report Abuse
saravananஇதுவரை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துக்கள், லேப்டாப் கொடுத்தது சரியா தவறா என்றுதான் வாதிட்டார்கள்.......இவரு என்ன திடீர்னு சம்பந்தா சம்பந்தமில்லாம வந்து, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்.........
Rate this:
Share this comment
Cancel
Pravin - Chennai,இந்தியா
20-ஜூலை-201216:01:37 IST Report Abuse
Pravin ப்ளீஸ் ஸ்டாப் திஸ் வெப்சைட்ஸ் இது தான் மாணவர்களை திசை திருப்புகிறது ப்ளீஸ் இந்த மாதிரி வெப்சைட் தடை போடுங்க
Rate this:
Share this comment
Cancel
B.senthilkumar/ B.raja - cuddalore,இந்தியா
20-ஜூலை-201215:34:05 IST Report Abuse
B.senthilkumar/ B.raja முன்பெல்லாம் செக்ஸ் புக் சேல்ஸ் போல இப்ப மெமரி கார்டு டவுன்லோட் பிசினஸ் சூப்பர். தாங்க்ஸ் பொலிடிசியன்.
Rate this:
Share this comment
Cancel
indhiyan - bangalore,இந்தியா
20-ஜூலை-201215:31:25 IST Report Abuse
indhiyan கிருஷ் ரொம்ப வருத்தப்படறார். இலவசத்துக்கு எதிரான விமர்சனம் அவருக்கு எதிரானதா நினைக்கறார். இங்க அந்த மாதிரி சொல்றவங்க எல்லாரும் சொல்ல விருப்பப் படற விஷயம் என்னன்னா, 1 ) இலவசத்தை குடுத்து மக்களை இன்னும் சோம்பேறி ஆக்க வேணாம். அதை கொஞ்சமாவது பணத்தை பெற்றுக்கொண்டு செய்யலாம். இதனால் அது தேவையானவர்களுக்கு மட்டும் போகும். அதை அவன் என்ன வேணாலும் செய்யட்டும். காசு குடுத்து வாங்கினா அது அவனுடைய சொந்த லேப்டாப். அதில் நமக்கு விமர்சனம் செய்ய உரிமை இல்லை. செய்யவும் மாட்டோம். 2 ) அப்படியே இலவசமா குடுக்கறதா இருந்தாலும் அதை அந்த அம்மாவோட கொடநாட்டு பங்களாவை எல்லாம் விற்று செய்ய சொல்லுங்கள். அப்படி செய்தால் மட்டுமே அவங்க படம் பொறிக்க உரிமை உண்டு. இப்போ அடுத்தவன் காசில் தன் படத்தை போட்டுக்கொள்ள அளவு கடந்த மப்பு வேண்டும். அது ரொம்ப அந்த அம்மாவிடமும் மஞ்சத்துண்டுவிடமும் இருக்கிறது. இதுங்க ரெண்டு பேருமே நம்முடைய சாபக்கேடுகள்.
Rate this:
Share this comment
Krish - India,சிங்கப்பூர்
20-ஜூலை-201216:18:29 IST Report Abuse
Krishindhiyan - ஏன் இன்னொரு டைமென்ஷன்ல சிந்திக்க மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை. இலவசம் எனக்கும் பிடிக்காது. அதற்கு பதிலாக நல்ல சாலை, குடிநீர், போக்குவரத்து தேவை என்று நினைப்பவன் நான். லேப்டாப் என்பது இலவச டிவி என்பதை விட செலவு அதிகம் தான், அது தவறு என்றே வைத்துகொள்வோம். ஆனால், உபயோகம் ஒரு டிவி யை விட பல மடங்கு நல்ல விஷயங்கள் அதில் இருக்கிறது. அதில் கெட்டதை திணிப்பதை தான் நான் எதிர்கிறேன். அதற்கு எந்த அரசும், ஏன் மத்திய அரசாக இருந்த எந்த அமைப்பும் கண்டுகொள்ளவில்லை என்பதே என் வருத்தம்....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-201217:32:16 IST Report Abuse
Kasimani Baskaranஇலவசமாக ஒவ்வொருவருக்கும் கொடுப்பதை விட்டு பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு நிகராக IT கட்டமைப்புக்களை வழங்கலாம். சொல்லிக்கொடுக்க தரமான IT கல்வி கற்றவர்களை நியமிக்கலாம். பல உருப்படியான விசயங்களை சொல்லிக்கொடுக்கலாம் (கணணி மூலம் ஆயிரம் நல்ல விஷயங்கள் செய்யலாம் - சில கெட்ட விசயத்தை தவிர) தரமான பாடங்களை பல சர்வதேச அளவுக்கு நன்மதிப்பை பெற்ற பல்கலைகழகங்கள் மூலம் ஓசியில் படிக்க முடியும் (உதாரணத்துக்கு MIT university ocw.mit.edu/index.htm போன்ற பல பல) அமெரிக்க கல்வி முறையில் மிகக்கடினமான பாடத்தைக் கூட எளிதில் சொல்லிக்கொடுத்து விடுவார்கள். நெருப்பால் சமைக்கவும் முடியும் வீட்டைக்கூட கொளுத்தவும் முடியும். அதற்காக நெருப்பே கெட்டது என்று சொல்வது சரியான அணுகுமுறையா?...
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-ஜூலை-201215:22:35 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. மடி கணினி என்பது எல்லா கல்லூரிகளிலும் கட்டாயமில்லை, மிக சில தனியார் கல்லூரிகள் மட்டுமே இதை கட்டாயமாக வைத்திருக்கிறது. அதுவும் " WI - FI " எனப்படும் connection கொடுத்து சில தனியார் கல்லூரிகள் ( SSN ) நவீன முறையில் பாடம் நடத்துகின்றன, இப்படி இருக்கும் பொது, +2 அளவில் எதற்கு இதை கொடுக்க வேண்டும், அதுவும் சென்னையில் பெரும்பாலும் +2 தேர்வுகள் முடிந்து, முடிவுகள் வருவதற்கு ஒரு வாரம் முன்பு ( விடுமுறை காலத்தில் )இதை கொடுத்தார்கள், இதனால் என்ன பயன், கணக்கு காட்டவும், கீழே விருமாண்டி சொன்னதை போலவும் காரணங்கள் தவிர. யாருக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே தரவேண்டும், அதுவும் போக இவை அதிக பட்சம் மூன்றாயிரம் வரை பல இடங்களில் விற்க்கபடுகிறது, அதை விற்ற தந்தை அந்த காசை மீண்டும் அரசாங்கதிற்க்கே தந்துவிட்டு தான் வீட்டிற்க்கே போகிறான், டாஸ்மாக் மூலம். நல்ல தந்திரமான அரசு இது.
Rate this:
Share this comment
ippave kanna kattuthe - திருச்சி ,இந்தியா
20-ஜூலை-201217:33:51 IST Report Abuse
ippave kanna kattuthewifi பாடம் நடத்துவதற்கு மட்டுமல்ல.இணைய இணைப்பிற்கும் அது பயன் படும் .நிற்க எனக்கு ஒன்று புரியவே இல்லை நமக்கு கிடைக்காது இன்றைய இளைய தலைமுறையினருக்கு கிடைத்துவிட்டது என்ற வாயிற்று எரிச்சலே இங்கு அதிகம் காண முடிகிறது .அது வருத்தம் அளிக்க கூடிய செயல் .முறைகேடாக இது மாதிரி விற்பதை தடை செய்யலாம் அது நன்று .அதை தவிர்த்து அர்த்தமற்ற முறையில் மாணவ சமுதாயத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது .முறை தவறி செல்பவர்கள் லேப்டாப் ,இணையம் இருந்தால் தான் போவார்கள் என்பது ஏற்க மனம் மறுக்கும் செயல் .நான் கணினி சார்ந்த துறையில் தான் பணி மேற்கொள்கிறேன் ....
Rate this:
Share this comment
Cancel
Kamaloodin Ahmed - toronto,கனடா
20-ஜூலை-201214:02:03 IST Report Abuse
Kamaloodin Ahmed மற்ற எதுவாக இருந்தாலும் நமது ஆட்கள் உடனே கமெண்ட்ஸ் விடுகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Padman - Chennai,இந்தியா
20-ஜூலை-201213:34:56 IST Report Abuse
Padman இங்க இலவசமா கிடைக்க கூடாதுன்னு நிறையபேரு சொல்றாங்க , ஆனா கல்விய மட்டும் இலவசமா கேக்குறாங்க. என்ன சார் நியாயம், கடைல பிஸ்கட் வாங்குனா ஒரு சாக்லேட் இலவசமா தந்த எல்லாரும் வாங்காமலா வரீங்க, இலவசம் என்பது மக்களை தன் பக்கம் வரவைக்க ஒரு சின்ன பொறி அவோலோதான். எதையும் உழைத்து சம்பாரிக்கனும் அப்பிடின்னு எல்லாருக்கும் புரிஞ்சா போதும் இந்த இலவசம் எல்லாம் வேஸ்ட்டா போய்டும். முதல் பத்து ரேங்க் எடுக்கும் மாணவர்களுக்கு இந்த கணினியை பரிசாக குடுத்தா கண்டிப்பா எல்லாம் படிச்சி அத வாங்குவாங்க . சும்மா தேர்தல் வாக்குறுதிகோசம் இப்படி செஞ்சா அது இந்த மாதிரி தான் தப்பான வழிலே போகும். முதல இலவசம் வேண்டாம் அப்பிடின்னு மக்கள் சொல்லணும் அப்ப தான் அரசும் இதெல்லாம் நிறுத்தும்.
Rate this:
Share this comment
Cancel
Sundar Rajan - chennai,இந்தியா
20-ஜூலை-201212:39:47 IST Report Abuse
Sundar Rajan +டூ பாடங்கள் அனைத்தும் லோடு செய்து நாலுவருட படிப்பு தேவை அனைத்தும் லோடு செய்து ipad கொடுத்து விட்டால் பிரச்னை தீருமா யாரவது பதில் சொல்லுங்களேன் ??????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை