சென்னை:"தமிழக கோவில் நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்களைக் காணவில்லை' என, இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அறநிலையத் துறையின்கீழ், 11 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு, சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன என்று, அத்துறையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், 2010ம் ஆண்டில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,500 கோவில்களும், இவற்றுக்கு, 4.35 லட்சம் ஏக்கர் நிலமும் உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மூன்றில் ஒரு பங்கு கோவில் நிலங்கள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. தனியாருக்கு விற்று விட்டார்களோ என சந்தேகம் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, கோவில்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த உண்மைத் தகவலை வெளியிட வேண்டும்.
கோவில் நிலங்களை ஒருபுறம் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்; மறுபுறம் கோவில் சிலைகளை கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கு, கோவில்களில் உரிய பாதுகாப்பு இல்லாததே காரணம்: கோவில்களில், இறைவனை தரிசிக்க கட்டணம் வசூலிக்கின்றனர்: இதில், பெருமளவு முறைகேடுகள் நடக்கின்றன.எனவே, கோவில்களில் தரிசனக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி, ஞாயிற்றுக்கிழமை மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளோம். தற்போதுள்ள இந்து சமய அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு, இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்ட ஆன்றோர், இந்து இயக்கப் பொறுப்பாளர்களைக் கொண்ட, தன்னாட்சி வாரியத்தை அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு, ராமகோபாலன் கூறியள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த வாரம் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றேன். பிரகார வாயிலில் இருபுறமும் 15 உயர flex பட்டியல் வைத்திருந்தார்கள். கோயில் மாட வீதிகளில் கோயிலுக்குச்சொந்தமான இடங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் மீதம் வைத்துள்ள வாடகைப்பணம் எவ்வளவு என்று. பெயர், விலாசம், கடை விபரம், மீத தொகை என்று எல்லா விபரமும் உள்ளன. கூட்டினால் கோடிக்கணக்கில் வருகிறது... வயிறு எரிகிறது. சிவன் சொத்து குல நாசம்.... இது பொதுச்சொத்தும் ஆகும்.
ஆமாம் இந்த ஆசாமிக்கு, தலையை மொட்டையடித்து விட்டாலே வழுக்கைத் தலையை மறைத்து விடலாம் என்பது தெரியாதா? அடித்த மொட்டையையும் துண்டால் மறைக்க வேண்டிய அவசியமென்ன?, சந்தனத்தையும், குங்குமத்தையும், விபூதியையும் மொத்தமாக குழப்பி பூசிக் கொண்டதோடு விடாமல், அதன் மேலே மறுபடியும் குங்குமம் முதல் அனைத்தையும் தனியாகவும் பூசி,முகத்தை கிட்டத்தட்ட ஒரு "Modern Arts" போல ஆக்கி எந்த சாமியை கும்பிடுவபர் என்பதே தெரியாத வண்ணம் குழப்பி விட்டிருக்கிறாரே? நாம் எந்த யுகத்தில், எந்த நாட்டுக் கலாச்சாரத்தில் இருக்கிறோம் ஒண்ணுமே விளலங்கலடா சாமியோவ்
விதுரா அவர் ஏன் தலையில் துண்டால் மறைத்துள்ளார் என்று தெரியாமல் உளறக்கூடாது அவரை பாஷா என்ற அரக்கன் தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றான் அப்போது அவர் தலயில் ஏற்பட்ட படும் காயம் காரணமாக மண்டை ஓடு சிறிது பகுதி இல்லைஅதை இரும்பு தகட்டால் மறைத்து காவி தொப்பியை அணிந்துள்ளார் . மேலும் சந்தனம்,குங்குமம் விபூதியின் மகத்துவத்தை அறிந்துகொள்ளவும் நீங்கள் வேற்று நாட்டில் இருந்து கொண்டு வேறு கலாச்சாரத்தில் இருந்து கொண்டு எழுதுவதில் எந்த வித அர்த்தமும் இல்லை .மேலும் இவ்வளவு முதிர்ந்த வயதிலும் இந்துகளுக்காக போராடி கொண்டிருப்பவரை விமர்சிப்பது இந்து சமுதாயத்தையே விமர்சிப்பது போல் உள்ளது ....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.