Prevent transmission of the sandy road marittom: dmdk, description | மணல் கடத்தலை தடுக்கவே சாலையை மறித்தோம்:தே.மு.தி.க., விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தலை தடுக்கவே சாலையை மறித்தோம்:தே.மு.தி.க., விளக்கம்

Added : ஜூலை 20, 2012 | கருத்துகள் (5)
Advertisement
மணல் கடத்தலை தடுக்கவே சாலையை மறித்தோம்:தே.மு.தி.க., விளக்கம்

செங்குன்றம்;பல ஆண்டுகளாக தொடரும் மணல் கடத்தலை தடுக்கவே, சாலையை மறித்து தடுப்புச் சுவர் கட்டப்பட்டது என்று, கைது செய்யப்பட்ட, தே.மு.தி.க., திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ., சார்பில், அக்கட்சியின் தலைமை நிலைய செயலர் விளக்கம் அளித்தார்.


நகராட்சி சாலையை ஆக்கிரமித்து, தடுப்புச் சுவர் கட்டிய பிரச்னை தொடர்பாக, திருத்தணி தொகுதி தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ., அருண்சுப்பிரமணியன்,58. நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


அவரை சந்திக்க நேற்று காலை, விருகம்பாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள் பார்த்தசாரதி, சி.எச்.சேகர் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் உட்பட பலர், புழல் சிறைக்குச் சென்றனர். இதில், எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது.அருண்சுப்பிரமணியத்தை சந்தித்து விட்டு வந்த எம்.எல்.ஏ.,வும், தே.மு.தி.க., தலைமை அலுவலக செயலருமான பார்த்தசாரதி, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.


அதில் அவர் கூறியதாவது:எம்.எல்.ஏ., அருண்சுப்பிரமணியத்தை சந்தித்து, சிறையில் அவருக்கு வசதிகள் உள்ளதா; அவர் மீது போடப்பட்ட வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து, விவரம் அறிந்து தன்னிடம் தெரிவிக்குமாறு, தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டார். அதன்படி, அருண் சுப்பிரமணியத்தை சந்தித்து விவரம் அறிந்தோம். அங்குள்ள நிலத்தை, அருண் சுப்பிரமணியன் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கியிருக்கிறார். அருகில் உள்ள, 30 அடி சாலை மூலம் பல ஆண்டுகளாக மணல் திருட்டு நடந்து வருகிறது.


மணல் திருட்டு:அவர் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றது முதல், மணல் திருட்டால் பாதிக்கப்பட்ட, அங்குள்ள பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த இடத்தில் தடுப்புச் சுவர் அமைத்து, மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அவரிடம் பல முறை கோரி உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், அது பற்றி விசாரணை செய்ய அவர் சென்ற போது, அவரது காரை எரித்தனர். அது பற்றிய புகார் மீது, போலீசார் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால், சுவர் எழுப்பிய புகாரின் மீது உடனடி நடவடிக்கையாக, அதிகாலையில் அவரைக் கைது செய்தனர். கொடநாட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்கு, 3 கி.மீ., தூரம் சுற்றுப்பாதையில் வரும் அவல நிலை உள்ளது.


அங்குள்ள இடத்தை ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ளார். அந்த இடத்தை தமிழக அரசிடம் ஒப்படைப்பாரா;எம்.எல்.ஏ., கைது போன்ற மிரட்டல் மூலம், தே.மு.தி.க., சட்டசபை உறுப்பினர்களை, தனது கட்சிக்கு இழுக்க நினைக்கும் ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறாது. எத்தனை சோதனை வந்தாலும், தலைவர் விஜயகாந்த்தின் உயிராக இருப்போம்.இவ்வாறு பார்த்தசாரதி பேசினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
21-ஜூலை-201211:10:50 IST Report Abuse
Gopinathan S ஆமாம்..உங்கள் கட்சியிலிருந்து அதிமுகவுக்கு தாவ பத்து எம்.எல்.ஏக்கள் துடித்து கொண்டிருக்கிறார்களாமே...அந்த பத்து பேரில் நீங்க யாராவது இருக்கீங்களா?
Rate this:
Share this comment
Cancel
bala - COIMBATORE,இந்தியா
21-ஜூலை-201211:10:31 IST Report Abuse
bala மணல் திருட்டை தடுக்க தான் இவர் சுவர் கட்டினாராம் ? தமிழ்நாட்டு மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? நீங்க பா.ம.க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான்....என்ன அவராவது மது ஒழிப்புன்னு ஒரு நல்ல விஷயம் செயறாரு, நீங்க அது கூட இல்ல ..
Rate this:
Share this comment
Cancel
Senthil Yadav - Chennai,இந்தியா
21-ஜூலை-201209:44:26 IST Report Abuse
Senthil Yadav அமைச்சர் திரு செங்கோட்டையன் மூலம் அபகரித்த நிலத்தின் மதிப்பு 100 கோடி. அந்த இடம் திருவான்மியூரில் உள்ள முக்கிய பகுதி. வெறும் 32 கோடிக்கு வாங்கி இருக்கிறார், அதுவம் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து, செங்கோட்டையனை கைது செய்வது எப்போது ? நடக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
Durairaj - Tamilnadu,இந்தியா
21-ஜூலை-201208:01:22 IST Report Abuse
Durairaj Very Good Sir, As per the current symptom. Only one politician is doing good for tamilnadu is captain. We want captain to be tamilnadu CM. Expecting support form tamil people. We should give chance to once instead of giving chances to the dirty parties – DMK/ADMK.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
21-ஜூலை-201206:28:25 IST Report Abuse
K.Sugavanam அழகிரி அண்ணன் டெக்னிக்க அப்புடியே டப்பிங் பண்றாங்களே...மணல் திருட்டை தடுக்க சுவாஹா பண்ணாங்களாம். தமிழ்நாட்டுல பல எடத்துல மணல் திருட்டு நடக்குதுங்கோய். அங்கல்லாம் போயி செவுரு கட்டுங்க மக்களே...அடுத்தவன் வீட்டுல திருடன் திருடாம இருக்க நான் உள்ள பூந்து அவங்க பொருட்களை எங்க வீட்டுல கொண்டுவந்து பாது காப்பா வெச்சிருக்கேன்னு எந்த கேனய்யனாவது சொன்னா,போலீசும்,சட்டமும் அதை ஒத்துக்கணுமே?இவரும் வக்கீல்னு சொல்றாய்ங்க.....செவுரு கட்ரதுலதான் எக்ஸ்பர்ட் போல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை