பரமக்குடியில் வாகனம் மோதி பள்ளி மாணவி பலி:மக்கள் மறியல்: 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் தரைப்பாலத்தில், டிராக்டர் மோதியதில், பள்ளி மாணவி ஒருவர் தலை நசுங்கி பலியானார். பொதுமக்கள் சாலை மறியலால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பரமக்குடி எமனேஸ்வரம் வடக்கு ரதவீதியை சேர்ந்த ஜெயந்திலால் மகள் கவுசல்யா, 14. அங்குள்ள சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.


நேற்று காலை 8.30 மணிக்கு, பரமக்குடியில் டியூஷன் முடிந்த பின், சக மாணவிகளுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எமனேஸ்வரம்-நயினார்கோவில் ரோட்டை இணைக்கும் வைகையாற்று தரைப்பாலத்தில் செல்லும் போது, டிராக்டர் ஒன்று , சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். டிராக்டரின் பின்புற டயர், மாணவி தலையில் ஏறியதில் தலை நசுங்கி பலியானார். இதன்பின்னரும் டிரைவர் டிராக்டரை நிறுத்தாமல் தப்பிஒடிவிட்டார்.


இதனால் ஆத்திரமடைந்த எமனேஸ்வரம் மக்கள், நயினார்கோவில் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணிநேரமும், சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி முன் மாணவர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதில் ஒரு மணி நேரமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தாசில்தார் செல்லப்பா, காளிராஜ் மகேஷ்குமார் எஸ்.பி., கணேசன் டி.எஸ்.பி., ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். டிராக்டர் டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


மேலும், தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு கம்பிகள் அமைக்கப்படும். காலை, மாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மாணவியின் குடும்பத்திற்கு கலெக்டரின் பொது நிவாரண தொகையில் இருந்து நிதி வழங்க பரிந்துரைக்கப்படும் என கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. ஜெயந்திலால் புகார்படி, பெரும்பச்சேரியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் கார்மேகத்தை, எமனேஸ்வரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


பலமுறை எச்சரித்தது "தினமலர்'எமனேஸ்வரத்தில் கடையடைப்பு: "தினமலர்' நாளிதழில், எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் நெரிசலால் பள்ளி மாணவர்கள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் நீடிக்கிறது. போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க தரைப்பாலத்தின் இரு நுழைவு பகுதியில் இரும்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியதோடு, கடந்த மாதம் 8ம் தேதி படத்துடன் செய்தி வெளியிட்டு எச்சரித்தது.


இதை அலட்சியப்படுத்தாமல் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது அப்பாவி மாணவி ஒருவர் பலியானதை தடுத்திருக்கலாம்.மாணவி பலியானதை தொடர்ந்து பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் எமனேஸ்வரம் வெறிச்சோடி கிடந்தது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கை கண்டித்து பரமக்குடியின் பரபரப்பான பகுதியே எதிர்ப்பு தெரிவித்து இருப்பது இதுவே முதல் முறை.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kishore - san antonio,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201220:12:13 IST Report Abuse
kishore கொடூரமான கொலைக்கு சமமானது இந்த விபத்து. தறிகெட்டு ஓட்டிய ஓட்டுனருக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். உயிரின் மதிப்பு துச்சம் ஆகிவிட்டது. பொது இடங்களில் தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம். தன் உயிரை போன்று பிற உயிர்களையும் மதிக்க தவறியதால் வந்த வினை. குறுகிய சாலைகள் உள்ள இது போன்ற ஊர்களில் இன்று பாதசாரிகள் அச்சதுடநேயே நடக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
saravanan - Boonlay,சிங்கப்பூர்
21-ஜூலை-201206:49:13 IST Report Abuse
saravanan ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.சரவணன் துவாஸ்
Rate this:
Share this comment
Cancel
21-ஜூலை-201205:34:12 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஒரு காவு வாங்கினால் தானா நடவடிக்கை எடுப்பீர்கள். தினமலர் எச்சரித்தும் நமக்கென்ன என்றால் உங்களுக்கு எதுக்கு அந்த பதவி. பரதேசிங்களா? சரியா செயல் படாத அதிகாரிகளை பன்னாடை, பரதேசிகள் என்று கூப்பிடலாம், தப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்