Karunandhi objects to imposition of Hindi | தமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா?சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா?சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி

Updated : ஜூலை 22, 2012 | Added : ஜூலை 20, 2012 | கருத்துகள் (257)
Advertisement
தமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா?சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி,Karunandhi objects to imposition of Hindi

சென்னை :"மீண்டும் தேவையில்லாமல் மத்திய அரசு இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது; நேருவின் வாக்குறுதியே நீர் மேல் குமிழியாவதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்திலே உள்ள எல்.ஐ.சி., ஊழியர்கள் எல்லாம், வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென, மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு, மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு இது பற்றி கவனித்து, தக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது இப்போது நம் முன் உள்ள கேள்வி. நேருவின் வாக்குறுதியே நீர் மேல் குமிழியாவதா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

பெருங்கொடுமை:தமிழகத்தில் 64 ஆயிரத்து 138 மன வளர்ச்சி குன்றியோரும், 11 ஆயிரத்து 269 கடும் ஊனமுற்றோரும், 1,000 தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோரும் உள்ளனர். இவர்களுக்கான உதவித் தொகையைக் கொடுப்பதில் கூட தவறுகள் நடைபெற்றால், அது பெருங்கொடுமை தான்.மாநிலம் முழுவதும் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வில், மாவட்டத்திற்கு தலா 20 சதவீதம் காலி இடங்கள் மறைக்கப்பட்டதாக, ஆசிரியர்கள் அறிக்கை விட்டுள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 1,150 பேருக்கு, இதுவரை உத்தரவுகள் வழங்கப்படவில்லை; அவர்களுக்கான பணி இடங்களும் குறிப்பிடப்படவில்லை.ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் காலி இடங்கள் குறித்து, எவ்வித விவரமும் வெளியிடவில்லை. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கல்வித்துறை என்ற ஒரு துறை செயல்படுகிறதா? என்றே தெரியவில்லை.

துவங்கவில்லை:
பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், மாணவர்களுக்கு பயண அட்டைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில், கையடக்கப் பஸ் பயண அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியை இன்னும் துவங்கவில்லை. மாணவர்கள் அன்றாடம் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி தான் பள்ளிக்கு வர வேண்டியுள்ளதாம்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (257)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aaa - chennai,இந்தியா
26-ஜூலை-201219:16:17 IST Report Abuse
aaa இவர் குடும்பத்தினர் நடத்தும் சன் shine ஸ்கூல் C B S E ஹிந்தி உண்டு.பணம் பண்ண மட்டும் ஹிந்தி வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
manimaran - srivaikuntam,இந்தியா
22-ஜூலை-201221:03:18 IST Report Abuse
manimaran சாதி மதம் மொழி என்று மக்களை பிரித்து தமிழக முதல்வராக வந்தவர் கருணாநிதி .தனது சொத்தை தமிழக மக்களுக்கு இலவசமாக கொடுப்பாரா.
Rate this:
Share this comment
Cancel
Shyamala R - Chennai,இந்தியா
21-ஜூலை-201223:37:59 IST Report Abuse
Shyamala R தமிழர்களுக்கு மட்டும் தான் இந்தி பேச தெரியாது. மற்ற மாநிலத்தவருக்கு இந்தி பேசவாவது தெரியும். நாம் அந்நிய மொழியான ஆங்கிலம் கற்று கொள்ளும்போது, இந்திக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு? உங்க(கலைஞர்) பேரன் பேத்தி எல்லாம் இந்தி படிச்சு மத்திய மந்திரிங்களா இருப்பாங்க. ஆனா நாங்க மட்டும் படிக்ககூடாது, பேசகூடாது nu சொல்றது என்ன நியாயம்?
Rate this:
Share this comment
Cancel
சாதனா - சென்னை,இந்தியா
21-ஜூலை-201223:20:44 IST Report Abuse
சாதனா தமிழன் அவர்களே, சமீபத்தில் நான் சென்னை எழும்பூரில் ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு உப்பு தேவைப்பட்டது. நான் அங்குள்ள சப்ளையரை கூப்பிட்டு உப்பு என்றேன். அவன் இந்திக்காரன் போல.... அவன் என்னிடம் வந்து " நமக் " ?? என்றான். எனக்கும் ஓரிரு வார்த்தைகள் இந்தி தெரியும் என்பதால் " ஆம் " என்று தலையாட்டினேன். பின்னர் அவன் கொண்டுவந்து கொடுத்தான். இப்பவும் சென்னை தவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இந்திகாரர்கள் தான் கூலி வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்தியில் தான் நம்மிடம் பேசுகிறார்களே தவிர தமிழி்ல் பேசுவதில்லை. நாமும் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சம் இந்தியில் தான் பேச முயற்சிக்கிறோமே தவிர " தமிழில் பேசுங்கப்பா " என்று சொல்வதில்லை. எனவே இன்னும் கொஞ்ச காலத்தில் நாம் இந்தி படித்துக்கொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டிலேயே ஒன்றும் செய்துகொள்ள முடியாத நிலை கண்டிப்பாக ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Ramasubbu - Chennai,இந்தியா
21-ஜூலை-201223:17:42 IST Report Abuse
Vivekanandan Ramasubbu கருணா , ஜெயா என்று போராடுவதை நிறுத்திவிட்டு LIC இப்படி ஒரு உத்தரவை போட என்ன காரணம் என்று சிந்திங்கள் ? ஹிந்தி திணிப்பு என்றால் என்ன என்று விளங்கிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஜூலை-201221:26:30 IST Report Abuse
g.s,rajan ரூபா நோட்டுலே கூடத்தான் ஹிந்தி இருக்கு அதனாலே அதை வேண்டவே வேண்டாம்னு சொல்லிடுவாரா கருணா ? WILL KARUNA,HATE, DISLIKE,REFUSE CURRENCY NOTES HENCE IT HAS HINDI?
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Ramasubbu - Chennai,இந்தியா
21-ஜூலை-201221:24:48 IST Report Abuse
Vivekanandan Ramasubbu கருணா ஜெயா என்பதைத்தாண்டி தமிழனாக யோசியுங்கள் LIC யின் இந்த உத்தரவு எதற்காக ? இதற்க்கு விடை அறிந்தால் எது சரி எது தவறு என்பது புரிந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Joburg,தென் ஆப்ரிக்கா
21-ஜூலை-201221:19:27 IST Report Abuse
Tamilan அட போங்கப்பா, சென்னை எழும்பூரில் முக்கிய வீதியில் டீ கடையில் பஜ்ஜி போடுவது இந்தி காரர்கள், டீக்கடை முதலாளி அவர்களுடன் இந்தி பேசும் அழகை, அதுவும் தமிங்கிலிஷில் அவர் பேசும் ஹிந்தியை நாள் முழுவதும் கேட்டு கொண்டு இருக்கலாம். இன்னும் அதிக நாட்கள் இல்லை, வெகு விரைவில் பஜ்ஜி சாப்பிட வேண்டும் என்றால் கூட இந்தி தெரிய வேண்டும் என்கிற நிலை வந்து விடும். இன்னும் யதார்த்தம் புரியாமல்
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
21-ஜூலை-201221:00:45 IST Report Abuse
muthu Rajendran சமசீர் கல்வி என்று இரண்டு கட்சிகளும் மாறிமாறி தங்கள் கௌரவத்திற்காக ஒரு வழி செய்து விட்டார்கள் .பேசாமல் CBSE பாடத்திட்டத்தை வைத்து கொள்ளலாம். இரெண்டாம் மொழியாக தமிழை வைத்து கொள்ளலாம். நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்றால் தமிழக மாணவர்கள் மற்றவர்களோடு போட்டியிட முடியும்
Rate this:
Share this comment
Cancel
prak - chennai,இந்தியா
21-ஜூலை-201220:44:23 IST Report Abuse
prak It is really disgusting that LIC s such an order, How come any one ask others to sign like this .., that also In Hindi. If they want to spread Hindi in India please first go to North India and teach Hindi, there only 50% of North Indians doesn’t know write /read Hindi.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை