E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2012,23:48 IST
கருத்துகள் (35)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: கூட்டணி கட்சிகளிடம் இருந்து வரும், அடுத்தடுத்த நெருக்கடிகளால், மத்திய அரசு தள்ளாடுகிறது. மம்தாவை தொடர்ந்து, தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், சரத் பவாரிடம், காங்கிரஸ் தலைவர்கள், கெஞ்சத் துவங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சரவையில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்த இடத்தில் பிரணாப் முகர்ஜி இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவர் பதவி விலகியதால், இரண்டாம் இடத்தில் சரத் பவார், அமர்த்தப்படுவார் என, செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மேலிடம், அதிரடியாக காய் நகர்த்தியது. ராணுவ அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அந்தோணியை, இரண்டாவது இடத்தில் அமர்த்தியது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமருக்கு அடுத்த இடத்தில் அந்தோணி அமர்ந்திருந்தார்.
புறக்கணிப்பு: காங்கிரஸ் கட்சியின் இந்த அரசியல் தந்திரம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மாலை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை, சரத் பவாரும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான பிரபுல் படேலும் புறக்கணித்தனர். மத்திய அமைச்சரவையில், பவாருக்கு, இரண்டாவது இடம் ஒதுக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தை, அவர், புறக்கணித்ததாகவும், பவாரும், படேலும், தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் அனுப்பியதாகவும், தகவல் வெளியானது; இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமருடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, அன்றிரவே, பிரதமர் மன்மோகன் சிங்கை, சரத் பவார் சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சரவையில், தனக்கு ஏற்பட்ட அவமரியாதை குறித்து, பிரதமரிடம் அதிருப்தி தெரிவித்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியில் நேற்றும் பரபரப்பு தொடர்ந்தது. சரத் பவார், நேற்று காலை, காங்., தலைவர் சோனியாவை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து விளக்கினார். அப்போது அவர், மத்திய அரசு சார்பில், தனக்கு ஒதுக்கப்பட்ட காரில் செல்லாமல், தன் சொந்தக் காரில் சென்றார். இதனால், அமைச்சரவையிலிருந்து, அவர் விலகியது உண்மைதான் என, பேச்சு எழுந்தது.
கெஞ்சல்: பிரதமர் மற்றும் சோனியாவுடனான சந்திப்பின்போது, "இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அனைத்துப் பிரச்னைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலம், சுமுகத் தீர்வு காண்போம்' என, இருவரும், சரத் பவாரிடம்

வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும், பவாரை "ஐஸ்' வைக்கும் வகையில், "என் அமைச்சரவையின், திறமை மிக்க நபர், சரத் பவார்' என, கெஞ்சலாக, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரச்னை: இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து, மத்திய அமைச்சரும், தேசியவாத காங்., தலைவர்களில் ஒருவருமான பிரபுல் படேல், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் செயல்பாடு, கூட்டணி ஆகிய விஷயங்களில், காங்கிரசுக்கும், எங்களுக்கும், பிரச்னைகள் உள்ளன. ஆனாலும், கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம். அமைச்சரவையில், தனக்கு இரண்டாவது இடம் கிடைக்காததால், பவார் அதிருப்தி அடைந்துள்ளதாக, காங்கிரசைச் சேர்ந்த ஒரு தரப்பினர், மீடியாக்கள் மூலம், தகவல்களை கசிய விடுகின்றனர். இது, எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரிடமும், சோனியாவிடமும், வேறு விஷயங்கள் குறித்து, அவர் பேசினார். சரத் பவார், சாதாரண தலைவர் அல்ல. அற்பமான விஷயங்களைப் பற்றி, அவர் கவலைப்பட மாட்டார். எங்கள் கட்சிக்கு, பார்லிமென்டில் போதிய பலம் இல்லாததால், சரத் பவாருக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்படவில்லை என, காங்கிரசைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். கட்சிக்கு உள்ள எம்.பி.,க்கள் பலத்தை வைத்து, சரத் பவாரை மதிப்பிடக் கூடாது. அவர், அப்படிப்பட்ட தலைவர் அல்ல. பார்லிமென்டில், சோனியாவுக்கு அடுத்த இடத்தில் அமர்கிறார். அமைச்சரவை கூட்டத்தில், பிரணாபுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்தார். இதெல்லாம், அவர் கேட்டுப் பெற்றது இல்லை. இந்த நேரம் வரை, அதிகாரப்பூர்வமாக, எந்த ராஜினாமா கடிதத்தையும், நாங்கள் கொடுக்கவில்லை. இவ்வாறு பிரபுல் படேல் கூறினார்.
தள்ளாட்டம்
: ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகிக்கும், மம்தாவின்

Advertisement

திரிணமுல் காங்., கட்சி, காங்கிரஸ் தலைவர்களுடன், ஏற்கனவே மோதல் போக்கை பின்பற்றியது. காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஏற்காமல், முலாயம் சிங் யாதவுடன் சேர்ந்து, மம்தா, தானாக, மூன்று பேரின் பெயரை அறிவித்தார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. தற்போது, மம்தாவை தொடர்ந்து, சரத் பவாரும், போர்க்கொடி தூக்கியுள்ளதால், மத்திய அரசு, தள்ளாடுகிறது. இதற்கிடையில், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து வெளியேறவும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரவும் தேசியவாத காங்கிரஸ் விரும்புவதாக, அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார், சோனியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சரத் பவாரும், மற்றொரு அமைச்சர் பிரபுல் படேலும் விலகலாம் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று டில்லியில் நடைபெற்றது. சோனியா, மன்மோகன் சிங் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னை தீர்ந்து விட்டதாகவும் கூறப்பட்டது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
21-ஜூலை-201222:41:40 IST Report Abuse
Cheenu Meenu மத்திய அரசு தள்ளாடுகிறது தப்புமா? என்ற சந்தேகமே வேண்டாம். பெட்டி பெட்டியாய் பணம் இருக்கும் வரை கெஞ்சுவதற்கு மன்மோகன் சிங் இருக்கும் வரை பாதிப்பில்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Naina Naguu - abuhadhriya(jubail) ,சவுதி அரேபியா
21-ஜூலை-201221:20:04 IST Report Abuse
Naina Naguu ஏன்பா ஹசன் அப்துல்லாஹ் காங்கிரஸ் பத்தி பேசினால் நீ ஏன்? பிஜேபி பத்தி பேசுறப்பா. இந்தியாவ முஸ்லிம்கள் கையில கொடுத்துட்டு நாங்களெல்லாம் உங்களுக்கு சொம்புகலாகட்டுமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
21-ஜூலை-201217:01:17 IST Report Abuse
Sathyamoorthy தேச நலனில் அக்கறை உடையோர் அனைவரும் பிஜேபி-க்கு வாக்களியுங்கள்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
21-ஜூலை-201215:48:58 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN ஜால்ரா, சுயநல பத்திரிகைகள் இருக்கும் வரை அடிமை படுத்தும் அரசு தொடரும். சுதந்திரத்துக்கு முன் எழுதிய எழுத்துக்கள் அத்தனையும் எழுச்சி என்றால் இப்போது எழுதப்படும் எழுத்துக்கள் அத்தனையும், சூழ்ச்சி, காழ்புணர்ச்சி, சுயநல புணர்ச்சி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-ஜூலை-201214:22:45 IST Report Abuse
villupuram jeevithan சிபிஐ எதற்கு இருக்கிறது, மிரட்டி வழிக்கு கொண்டுவந்துவிடுவர், கருணாவை மிரட்டுவது போல்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201210:32:47 IST Report Abuse
Rajasekaran Palaniswamy உட்கட்சி, கூட்டணி பிரச்சனைகளை சமாளிப்பதே காங்கிரஸ் கட்சிக்கு தினசரி பிரச்சனையாக உள்ளது. இந்த லட்சணத்தில் நாட்டு மக்களின் பிரச்சினைகளை எங்கு பார்க்கபோகின்றது. பேசாமல் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
21-ஜூலை-201209:46:21 IST Report Abuse
Tamilan இவருக்கு கிரிக்கெட் தான் ரொம்ப முக்கியமாச்சே................அப்புறம் ஏன் இதுல்லாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
21-ஜூலை-201209:36:59 IST Report Abuse
N.Purushothaman இதை சாக்கா வைச்சி ராகுல பிரதமரா ஆக்கிடுவாங்கே..... என்னமோ அவர ஆபதாண்டவன் ரேஞ்சுக்கு பில்ட் உப கொடுக்குறாங்க.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
abdurahim - dammam ,சவுதி அரேபியா
21-ஜூலை-201209:01:39 IST Report Abuse
abdurahim காங்கிரஸ் இருந்த இடம் அந்த கட்சியால்தான் நிரப்பப்படும் இதில் பவாருக்கு ஏன் இந்த ஆசை, மம்தாவாலும்,பவாராலும் காங்கிரஸ் அரசு தள்ளாடுகிறது என்பதை ஏற்றுகொள்ள முடியாது இவை எல்லாம் ஒரு சிலரின் கற்பனைகளும் ஆசைகளும் தான்,கடைசி வரை ஆதரவு கேட்பது தனது கடமை என நினைத்து பிரணாப் தான் மம்தாவிடம் ஆதரவு கோரினாரே தவிர காங்கிரஸ் சார்பில் ஒரு நாளும் கெஞ்சியது இல்லை,இதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது வேறு வழியின்றி மம்தா தான் கடையில் ஆதரவு என அறிவித்தார், அதே போல் பவார் ஒரு மூத்த தலைவர் என்ற முறையில் தான் காங்கிரஸ் அவரை சமாதானம் செய்கிறதே தவிர ஆட்சிக்காக அல்ல ஏன் என்றால் இரண்டு MP களை கொண்ட பவாரால் அரசை ஒன்றும் செய்ய முடியாது,அரசை நடத்துவது காங்கிரஸ்,எனவே பிரதமர் இல்லாத போது அவை நடத்துவதற்கு மற்ற கட்சி உறுப்பினரை எவ்வாறு அனுமதிப்பர் இது பவாரின் வேண்டாத ஆசை, கூடுதல் MP கள் பவாருக்கு இருந்தால் கூட காங்கிரஸ் அரசை ஒன்றும் செய்ய முடியாது ஏன் என்றால் மகரஷ்ட்ராவில் காங்கிரஸ் ஆதரவுடன் தான் பவாரின் கட்சி ஆட்சி நடத்துகிறது இவர் இங்கு பிடுங்கினால் அங்கு காங்கிரஸ் இவருக்கு வைக்கும் ஆப்பு, இதற்கென காத்து கொண்டிருக்கும் சிவசேனா ஆட்சியை கைப்பற்றும் இது பவாருக்கும் தெரியும்,&39&39பவார்ஜி அப்புறம் ஏன் இந்த வறட்டு பிடிவாதம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
V.Renganathan - Tiruchy,இந்தியா
21-ஜூலை-201208:05:29 IST Report Abuse
V.Renganathan வரும் நாடாளுமன்ற தேர்தலில் congress 100 இடங்களைகூட பிடிக்க முடியாது என்ற நிலை தெரிந்தவுடன் நண்பர்கள் தங்களை காபற்றிகொள்ள வெளியேருகிறார்கள். இது தான் நம் நாட்டு அரசியல். அடுத்து நம்ம ஊரு குடும்ப கட்சி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.