பெரம்பலூர்: பெரம்பலூரில் மாணவனை அடித்து துன்புறுத்தியதாக வழக்கு பதியப்பட்டு ஆசிரியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக மாணவனை சிறுநீர் குடிக்க வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாணவர்களை அடித்தது உண்மை என தெரிய வந்ததாகவும், ஆனால் சிறுநீர் குடிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இருப்பினும் மாணவனை அடித்தது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு வழக்கு பதிந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பெரம்பலர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மூன்று பேரையும் 15 நாள் கோர்ட் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து ஆசிரியர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் அருகே உள்ள சோழன்மாளிகை கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜன்-பூங்கொடி தம்பதிகளின் மகன் பரத்ராஜ் (14). இவர் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்காலை ஆசிரியர்கள் விடுதி மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து படிக்க வைத்ததாக தெரிகிறது. அப்போது ஆசிரியர்கள் கருப்பையா, ராஜா உட்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பதை கண்காணித்தனர். அப்போது பரத்ராஜூக்கு சிறுநீர் வந்தததால் ஆசிரியரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு ஆசிரியர்கள் இப்பொழுதுதான் படிப்பதற்கு உட்கார்ந்தாய் அதற்குள் சிறுநீர் வருகிறதா என்று கூறி பரத்ராஜ் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி மறுத்தனர். அடக்க முடியாத மாணவன் சிறுநீரை அதே இடத்தில் கழித்து விட்டான். இதனால் ஆசிரியர்கள் அடித்து உதைத்தனர்.
இதற்கு பின்னர் பரத்ராஜ் விடுதியிலிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான சோழன்மாளிகைக்கு சென்று இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பரத்ராஜை அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக மாணவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான்.
கல்வி துறை அதிகாரி விசாரணை: : சிறுநீர் குடிக்க வைத்ததாக எழுந்த புகாரை அடுத்து தனியார் பள்ளியில், பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்தது. சிறுநீர் குடிக்க வைத்தது உண்மையா என விசாரிக்க முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா தலைமையில் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தனர், ஆசிரியர்களிடம் அதிகாரிகள் கேள்வி கேட்ட போது : சிறுநீர் குடிக்க வைத்தனர் என்பது தவறான தகவல். யாரும் அப்படி செய்யவில்லை. மாணவன் ஆசிரியர்கள் மிரட்டலுக்கு பயந்து விடுதியை விட்டு தப்பி சென்று விட்டான். பின்னர் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் மீது தவறான கருத்தை சொல்லியிருக்கிறான் என்றனர். மேலும் மாணவனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவனும் சிறுநீர் குடிக்கவில்லை என ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.
பான்பாரக் சாப்பிடுவது வழக்கம்: சிறு நீர் கழித்து வர அனுமதி மறுக்கப்பட்டதுதான் உண்மை என்றும் சிறுநீர் கழித்தமைக்காக ஆசிரியர்கள் அடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் சிறுநீர் குடிக்கும் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மாணவன் பான்பாரக் சாப்பிடுவது வழக்கமாம். அவன் பாக்கு போடுவதை ஆசிரியர்கள் கண்டித்து வந்துள்ளனர். பான்பாரக் சாப்பிடுற நீ மூத்திரத்தை குடிடா என்று திட்டியதாக தெரிகிறது. மாணவன் ஆசிரியர்கள் மீது வீண்பழி போட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மங்களமேடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Wat s dis? As far as I know, teachers some times beat students in order to make them understand the correct things and lead them good life. About 10 years ago, my school is famous for maintaining discipline and decorum in which the fear towards the teachers is the essence. I accept some teachers beating students just to showcase them that they are very strict. But in terms of the progress is concerned, strictness and discipline in study is important. I don&39t recomm for beating up students. But at the same time, the younger generation doesn&39t understand the importance of the words from teachers. As a word from bible says" Scolding of a wise man is better than the praise of a foolish" . Due to the fake statement by the student , the teachers have been remanded. What is the punishment for the student to spoil the image of the teachers? If such situations prevails, no teachers in Tamil Nadu will teach dedicatedly instead just read and go.
ippo manavargal sattathai romba use panna therinchikittanga. yerkanave chennaiyil teachera katthiyal kuthi kolai seitha manavan. indru pan parak podum manvan, ippadi sattam manavarkaluku support a iruku. ivanai kandikilana parents teachera thituvanga. kandicha kaithu pandranga. ipadiye pona, pona varam assamil oru pennuku nadantha incident, pirkalathil niraya nadakum
பாண் பராக் மெல்லும் இவனை திருத்த நினைத்த ஆசிரியர்களுக்கு சிறை. என்ன கேவலமான நடவடிக்கை. நாம் அனைவருமே சிறுவயதில் ஆசிரியரின் அடிபட்டு தான் மேலே வந்துள்ளோம். அதற்காக எந்த ஆசிரியரையும் இன்று வரை தவறாக நினைத்திருக்க மாட்டோம். மாறாக அவர்கள் மீது மரியாதை தான் வைத்துள்ளோம். இன்றைய பெற்றோரும் சரியில்லை பிள்ளைகளும் சரியில்லை
இது ஒரு பொதுவான மாணவர் ஆசிரியர் சம்பத்தப்பட்ட குற்றசாட்டு. இதில் திமுக அனுதாபி சொல்லகூடிய கருத்துக்கு அதிமுகா அனுதாபி மாற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. கண்டிப்பில்லாத மாணவன் கழுசடையாகி விடுவான் என்பது பழமொழி. எந்த ஆசிரியரும் தேவையில்லாமல் ஒரு மாணவனிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளமாட்டார்கள். விசாரணையில் மட்டுமே உண்மை வெளிப்படும். மாணவன் சமீபத்தில் நடந்த கல்கத்தா சிறுநீர் கேசை பார்த்து நாமும் அப்படி செய்தால் நாடே நம்மை பார்க்கும் என்ற எண்ணத்தில் செய்திருக்கலாம். ஏற்கனவே ஒரு மாணவன் தம்மை கடத்தி விட்டார்கள் என்று பொய் சொல்லி வந்த கதை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். உண்மையிலேயே ஆசிரியர் அந்த தப்பை பண்ணியிருந்தால் அது மாணவன் செய்த்ததைவிட கொடூரமானது. மாணவனுக்கு ஆசிரியர்மீது மரியாதை கலந்த பயம் இருப்பது அவனுடைய வருங்காலத்துக்கு நல்லது.
I hope this student was not forced to drink urine. May teachers scolded him in that way. If they did so, it is a punishable offence. But in this case, the version of the student seems to be a highly exaggerated one.
If the teachers come to know that a student is using drugs etc., they should arrange for a counselling and inform parents. They should not have beaten up him to this extent....
இப்போதெல்லாம் மாணவர்களை அடிக்க முடிவதில்லை. அடித்தால் அடுத்த நாளே கரை வேட்டியை கட்டிய ஒருவன் குடித்து விட்டு பள்ளிக்கு வந்து மாணவனுக்கு ஆதரவாக ஆசிரியரி திட்டி அவமான படுத்தி விட்டு போகிறான். பெரிய காட்சிகளில் இருந்து ஓரம் கட்ட பட்ட சில்லுண்டி தலைவனெல்லாம் தன கட்சிக்கு ஆதரவு திரட்ட இப்படியெல்லாம் மாணவர்களை கெடுப்பது விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் அதிகம். அதனாலேயே ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுக்கத்தை பற்றி கவலை படுவதில்ல. விளைவு இந்த பாண் பர்ராக்கும் டாஸ்மாக்கும். சோழன் மாளிகை சேர்ந்த ஒருவன் எவ்வளவு தூரத்தில் உள்ள பள்ளிக்கு வந்து படிக்கிறான் பாருங்கள். அவனுக்கு உள்ளூரிலோ அல்லது ஊருக்கு அருகாமையிலோ பள்ளி இல்லாமல் போய்விட்டதா, என்ன? பெற்றோரே அவனை வீட்டில் அடங்காதது ஊரில் தான் அடங்கும் என்று தள்ளி விட்டிருக்கிறார்கள்.
பொதுவாக மருத்துவ ரீதியாக சிறுநீர் வந்தால் உடனே கழித்துவிடவேண்டும் இல்லையெனில் சிறுநீரக சம்பந்தமான உடல் கோளாறுகள் ஏற்படும். நடைமுறையில் ஆண்களைவிட பெண்கள்தான் இந்த பிரச்சனையால் அவதிபடுகின்றனர் காரணம் ஆண்களை போல பெண்கள் உடனே ஒதுங்க முடியாது. பொதுவாக பள்ளிகளில் சிறுநீர் வந்தால் ஆணோ,பெண்ணோ ஆசிரியர்கள் அனுமதிக்க மறுப்பது முட்டாள்தனமான ஒன்று. இது பற்றி எல்லா வீடுகளிலும் குழந்தைகள்,சிறுவர்,சிறுமியர் சொல்வதுண்டு பள்ளியில் ஆசிரியர்கள் சிறுநீர் கழிக்க அனுமதிப்பதில்லை என.இது மிக பெரிய தவறு. மேலும் இயற்கையாக வரும் மனிதனின் இவ்விஷயத்தை தடுக்கமுயல்வது மனிதனின் அடிப்படை உரிமையை மறுப்பதற்கு சமம்தானே? பொது அறிவில்லாத இம்மாதிரி ஆசிரியர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.