DMK's soft corner for centre starts critise | மத்திய அரசுக்கு அடிக்கிறது தி.மு.க., ஜால்ரா: பவார், மம்தாவை போல் ரோஷமே இல்லை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (145)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மத்திய கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சரத் பவார் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மம்தாவும் அடுத்த குண்டை வீசியுள்ளார். ""எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை தான், ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகிப்போம்,'' என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மம்தாவும், பவாரும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க., தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்ற போதிலும், பதவி சுகத் துக்காக, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது. மத்திய அமைச்சரவையில், தனக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்படாததை எதிர்த்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரும், அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேலும், மத்திய அமைச்சர் பொறுப்புகளில் இருந்து, விலகவும் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, தங்களது அமைச்சரவை பணிகளைக் கவனிக்காமல், காங்., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சரத் பவாரின் இந்த அதிரடி அரசியலில், மத்திய அரசு ஆடிப் போயுள்ளது. அடுத்த அடி: சரத் பவார் கொடுத்த அடியில் இருந்து மீள்வதற்குள், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தாவிடமிருந்து, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசுக்கு, அடுத்த அடி விழுந்துள்ளது. கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் சார்பில் தியாகிகள் தினம், நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில், மம்தா பானர்ஜி, தனக்கு போக்கு காட்டி வரும் மத்திய அரசை குறி வைத்து, அனல் கக்கும் வார்த்தைகளால், சரமாரியாக தாக்குதல் நடத்தினார். அவர் பேசியதாவது: யாருடைய தயவின் பேரிலும் நாங்கள் அரசியல் நடத்த விரும்பவில்லை. யாருடைய தயவும் எங்களுக்கு தேவை யில்லை. எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை, மத்திய அரசில் அங்கம் வகிப்போம். அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் எங்களுக்கு காங்கிரசின் தயவு தேவையில்லை. இங்கு, தனியாகவே அரசியல் நடத்துவது என, முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு அளித்த கடன்களுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில், மூன்றாண்டு கால அவகாசம் கேட்டுள்ளோம். எங்களின் இந்த கோரிக்கைக்கு, மத்திய அரசு என்ன பதிலளிக்கிறது என்பதற்காகக்

காத்திருக்கிறோம்.

டில்லிக்கு...
: முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு, பெருமளவு கடன் வாங்கி, மாநில அரசுக்கு பெரும் சுமையை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதற்கு, பிரதமர் எப்படி அனுமதி அளித்தார். தேவைப்பட்டால், எங்களின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன், டில்லி நோக்கிச் செல்லவும் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடம், நாங்கள் இரவலோ, சிறப்பு நிதியோ கேட்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், எங்களைப் பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். இதை, அவர்கள் நிறுத்த வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார். மம்தாவின் இந்த தடாலடியான பேச்சு, காங் கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள பதவிக் காலத்தை, சுமுகமாக கழிப்பது எப்படி என, காங்., தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜால்ரா: ஐ.மு., கூட்டணியில் உள்ள, சரத் பவாரும், மம்தாவும், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு முக்கிய கட்சியான தி.மு.க.,வோ கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும் தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது. இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் வகையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்து விட்டு,

Advertisement

ராஜினாமா கடிதங்களை தானே பெற்றார். இவரது மிரட்டலுக்கு மத்திய அரசு பணியாத நிலையில், ராஜினாமா முடிவை கைவிட்டார். இது தவிர, இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லை பெரியாறு விவகாரம், காவிரியில் தண்ணீர் தராமல் கர்நாடகா மிரட்டல் போன்ற தமிழக நலன் சார்ந்த விஷயங்களிலும், பெட்ரோல் விலை உயர்வு குறித்த விஷயத்திலும், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதைத் தவிர்த்து, வெறும் கடிதங்களை மட்டுமே, தி.மு.க., தலைவர் எழுதி வரு கிறார். சமீபத்தில் கூட, மத்திய அரசுக்கு பயந்து, "டெசோ மாநாட்டில், தனி ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்ற உத்தேசமில்லை' என, தி.மு.க., பல்டி அடித்தது . மற்ற கூட்டணி கட்சிகள் எல்லாம், காங்கிர சையும், மத்திய அரசையும் மிரட்டி வரும் நிலையில், தி.மு.க.,வின் இந்த அமைதியான போக்கை, வட மாநில அனைத்து கட்சித் தலைவர்கள் கிண்டலுடன் விமர்சித்து வருகின்றனர்.


- நமது சிறப்புநிருபர் -


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (145)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Boxer Alagan - Channai,இந்தியா
22-ஜூலை-201223:16:32 IST Report Abuse
Boxer Alagan தினமலர் அடிக்காத ஜால்ராவா
Rate this:
Share this comment
Cancel
Gavaskar - Chennai,இந்தியா
22-ஜூலை-201222:56:34 IST Report Abuse
Gavaskar ஜெயா செய்யாத ஊழலா??? இலவச மாயை தான் ஜெயாவுக்கு ஓட்டு வந்தது என்பதை மறக்க கூடாது... ஜெயா இப்போழுது பீஸ் போன பல்பாக இருக்கிறhர். திறமையும் இல்லை... நல்லது செய்ய அருகதையும் இல்லை... தமிழ் நாடுட்டு மக்கள் வெட்கத்தலில் இருக்கிறhர் இப்படி ஒரு தமிழக அரசை தேர்ந்து எடுத்ததுக்கு......
Rate this:
Share this comment
sriram - chennai ,இந்தியா
23-ஜூலை-201200:01:16 IST Report Abuse
sriramஇங்கே உள்ள கருத்துக்கள் மற்றும் தம்ப்ஸ் டௌன் பார்த்தாலே தங்களுக்கு மக்கள் யார் மீது கடுப்பில் இருக்கிறார்கள் என்று தெரியுமே...
Rate this:
Share this comment
Cancel
Kavi.J - chennai,இந்தியா
22-ஜூலை-201222:49:55 IST Report Abuse
Kavi.J நண்பர்களே எனக்கு தெரிந்து வட நாட்டில் யாரும் இது போல் தி மு க ஜால்ரா என்று பேசவில்லை. எல்லாம் நமது ஜெயா ஜால்ரா நிருபர் மற்றும் தினமலர் பரப்பும் செய்தி. நாள் தவறாமல் மு க பற்றி தவறான சேதி போட்டு எல்லோரும் திட்டினால் தான் நிம்மதி என்னும் கொள்கையோடு நாளேடு நடத்தினால் இப்படி தான் நிருபர் எழுதுவார். எனக்கு ஒரு ஐயம் இவர்கள் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு ஏன் மு க மகன்களை அழைத்தார்கள். அழைத்ததற்கு ஜெயா கோபத்தை எப்படி சமாளித்தார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Gavaskar - Chennai,இந்தியா
22-ஜூலை-201222:46:49 IST Report Abuse
Gavaskar தமிழ் ஈழம் பத்தி பேச ஜெயலலிதா முன்வருவாரா?????? தினமலர் அண்ணா ஜெயா இன்னும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து கேசு கோட்டீல் இருக்கு இதை பத்தி பத்திரிக்கையில் மட்டும் ஏன் அண்ணா தலையங்கம் எழுத மாட்டீகா??? இதற்கு என்ன காரணம்???? எல்லாம் பெ பெ பெ ட் ட் ?????????? யா??
Rate this:
Share this comment
Cancel
Poompattinaththaan - KaveriPoompattinam,இந்தியா
22-ஜூலை-201222:42:40 IST Report Abuse
Poompattinaththaan உங்களுக்கு ஏன் இந்த குறுக்குப் புத்தி? நீங்கள் பாட்டியம்மாவுக்கு அடிக்கும் ஜால்ராவை விடவா மு,க மத்திய அரசுக்கு அதிகம் ஜால்ரா அடிக்கிறார்? அடுத்தவரைக் குற்றம் சுமத்தும் முன்பு தங்களை எண்ணிப்பாருங்கள். என்னமோ எல்லாம் தெரிந்த மேதாவிகள்போல் இங்கே கருத்துக்கண்மணிகள் கழகக்கண்மணிகளைக் குற்றம்சாட்டுகிறீர்களே.. அதே மம்தாவும் போன மச்சான் திரும்பிவந்தான் கதையாக பிரணாப்பை ஆதரித்ததிலேயும் (இதுக்கு நம்ம விஜயகாந்த் எவ்வளவோ மேல்) சரத் பவார் காங்கிரசை மிரட்டவில்லை என்று இன்று சரணாகதி அடைந்ததையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள்? எதற்கெடுத்தாலும் மு.க-வை குறை சொல்லியே பிழைப்பு நடத்தாதீர்கள். உங்களுக்கென்று ஒரு நியாயக் கொள்கை வைத்து செயல்பட முயலுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Gavaskar - Chennai,இந்தியா
22-ஜூலை-201222:40:47 IST Report Abuse
Gavaskar திமுகாவுக்கு ரொசம் இல்லையா என்று தினமலர் கேட்பது கேலி கூத்தாக இருக்கிறது. தினமலர் அதிமுகவுக்கு அடிக்கும் ஜால்ராவை விடவா??? மக்கள் கொதித்து போய் இருக்கிறhர்கள்.... பால் விலை உயர்வு என்று குழந்தைகள் வயித்தில் மண்..... சமசீர் கல்வி அடாவாடியில் மாணவர்கள் படிப்பில் 3 மாதம் மண்.... மின்கட்டண உயர்வில் மக்கள் வயித்தில் மண்... பஸ் கட்டய உயர்வால் சாமணிய மக்கள் வயித்தில் மண்.... பெண்கள் இரவில் வெளிய போக முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குழைவு என்று பெண்கள் வயித்தில் மண். தொழில் வளர்ச்சிய பெருக்கமால் இளைஞர் வயித்தில் மண்... கை குழந்தை முதல் முதியவர் வரை அதிமுகாவல் வஞ்சிக்க பட்டு இருக்கிறhர்கள். இதை எல்லாம் மறைத்து திமுகா மீது மட்டும் என் இந்த பாய்ச்சல்.. நீங்கள் அதிமுக்காவுக்கு கைபாவையாக இருங்கள். ஆனால் நீங்கள் எழுதும் தலையகம் இரு முனையிம் தீட்ட பட்ட கத்தி என்பதை மறந்து விடார்கள். ஏன் ஜெயலிலதா தனி ஈழம் என்று பேச வில்லை.. இந்த துரோகத்தை பத்தி எழுத தயாரா???? ஜெயா கோடநாட்டில் இருந்து ஆட்சி நடத்துகிறாறே??? இந்த அவலத்தை பத்தி எழுத தயாரா??? ஜெயாவின் திறமை இல்லாத ஆட்சி நடத்துகிறாரே??? இந்த சோகத்தை பத்தி எழுத தயாரா??? தின்மலர் நீங்கள் ஜெயாவுக்கு துதிபாடுவதை நிறுத்தி விட்டு நல்ல செய்திகளை எழுதுங்கள்... இப்படி திமுக்கவை தீட்டி ஜெயாவை மகிழ்விப்பதை விட்டுவிட்டு... நடுநிலை செய்திகளை எதிர்பர்க்றேhம்...
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
22-ஜூலை-201220:40:52 IST Report Abuse
Abdul rahim எல்லா அரசியல் கட்சியும் ஜால்ரா கட்சி தான்
Rate this:
Share this comment
22-ஜூலை-201221:12:11 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்கஅதிலே சந்தேகமென்ன தலைவரே? ஜால்ரா அடிக்கலைனா பொழைக்க முடியுமா? அவனுங்க புத்திசாலிதான். நாம தான் இளிச்சவாயனுங்க............................. மேல படத்திலே கருணாநிதி குடுக்கிற போசை பாருங்க. இந்த பூனையும் பாலை குடிக்குமான்னு இருக்கு பாருங்க....
Rate this:
Share this comment
sriram - chennai ,இந்தியா
22-ஜூலை-201221:18:17 IST Report Abuse
sriramமினி சொம்பு Nice to hear a waste comment...
Rate this:
Share this comment
Cancel
Mani - Lagos,நைஜீரியா
22-ஜூலை-201216:21:47 IST Report Abuse
Mani வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் விற்ற பிறகு தானே 2G பணத்தை முக பார்த்தார். இப்பொழுது அவை எல்லாம் இல்லை என்று தூற்றினால் என்ன செய்வது? அவை எல்லாம் திரும்ப விலைக்கு கிடைக்குமா? கிடைத்தால் வாங்குவதற்கு கைவசம நிறையவே பணம் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Uthaman Vengopa Rao - Muscat,ஓமன்
22-ஜூலை-201216:13:05 IST Report Abuse
Uthaman Vengopa Rao தமிழ்நாட்டில் விஷகிருமிகள் பரவியது என்று பெரியவர் பக்தவத்சலம் சொன்னது 100 சதவீதம் சரியான வார்த்தை . அது மேலும் மேலும் கடுமையாகி இப்போது கான்செர் ஆகி கோமா நிலையில் தமிழ்நாடு வளர்ச்சியும் இல்லாமல் நல்ல உணர்வுக்களுமில்லாமல் மதுவிலும் சினிமாவிலும் அடிமையாகி இருண்ட எதிர்காலம் கண்ணில் தெரிகிறது. இன்னும் தமிழ்நாட்டை சீரழிப்பதற்காக கருணாநிதியும் அவர் வாரிசுகளும் அவருடைய கட்சிக்காரர்களும் ஆசைப்படுகிறார்கள். திராவிடக்கட்சிகளுக்கு வோட்டு போட்ட தமிழன் இருட்டில் கிடக்கறான். நல்லவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை நிம்மதியான வாழ்கையும் இல்லை. ஆனால் கருணாநிதியை விட அம்மா மேல். அம்மாவுக்கு குடும்பம் இல்லை. வாரிசுகள் இல்லை. அம்மா நினைத்தால் ஒழுங்காக திறமையாக ஆட்சி நடத்தினால் தன்னலமில்லாமல், பணிவும் பண்பும் கொண்டு விளங்கினால் நிச்சயம் சரித்திரத்தில் இடம் கிடைக்கும். மீண்டும் சொல்கிறேன், கருணாநிதியை விட அம்மா எவ்வளவோ மேல். நன்றி
Rate this:
Share this comment
Jeyakumar - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-201217:36:34 IST Report Abuse
Jeyakumarரெம்ப சரியான கருத்து...
Rate this:
Share this comment
Frederic Moni - Bangalore,இந்தியா
23-ஜூலை-201200:44:20 IST Report Abuse
Frederic Moniஅப்பொ அந்த சசிகலா யாரு?? கொஞ்சம் கேட்டு சொல்றியா தம்பி?...
Rate this:
Share this comment
Madurai Tamilan - Madurai,இந்தியா
23-ஜூலை-201210:37:19 IST Report Abuse
Madurai Tamilanகலக்கல் கமெண்ட்....ரோஷம் கெட்டவனுங்க.......
Rate this:
Share this comment
Cancel
hariharasudhan - chennai,இந்தியா
22-ஜூலை-201216:07:30 IST Report Abuse
hariharasudhan thanathu magal kanimozhiyai அர்ரெஸ்ட் பன்னுதகுப்புரமும் அமைதியை இருக்குறார்கள் enraal வேறு என்னவோ முக்கியமான விசியம் maattikkunu irukku
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.