"சீட்' கிடைத்தும் பி.இ.,க்கு தாவும் மாணவர்கள்: எம்.பி.பி.எஸ்., படிப்பு மீதான மோகம் குறைகிறது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாணவர்களிடம், எம்.பி.பி.எஸ்., படிப்பின் மீதான மோகம் குறைந்து வருகிறது. நடப்பாண்டு தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர், அந்த படிப்பை கைவிட்டு, இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள், பொதுத் தேர்வில் நல்ல மார்க் பெற்று, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.இ., படிப்புகளில் சேர்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வேண்டும் என, அதிகளவில் மாணவர்கள் விரும்புகின்றனர். ஆனால், சில ஆண்டுகளாக, கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ்., படிப்பை தேர்வு செய்த மாணவர்கள், அந்த படிப்பில் சேராமல், மனதை மாற்றிக் கொண்டு விடுகின்றனர். பின்னர், அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, பி.இ., படிப்பை தேர்வு செய்கின்றனர்.


நடப்பாண்டிலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர, மருத்துவ கவுன்சிலிங்கில் ஆணை பெற்ற, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்போது அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் பி.இ., படிப்பை தேர்வு செய்து, அதில் சேர்ந்துவிட்டனர். கடந்த 17ம் தேதி, 41 மாணவர்கள், தாங்கள் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர பெற்ற ஆணைகளை, இன்ஜினியரிங் கவுன்சிலிங் அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்தனர்.


இவ்வாறு சேர்ந்த மாணவி ஒருவர் கூறியதாவது: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம், இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு விட்டது. இந்த கட்டணம் மூன்று லட்ச ரூபாய் வரை உள்ளது. இது என்னைப் போன்ற நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டைத் தாண்டிய தொகை. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு பெறும் வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவதும் கடினம். காரணம், வெறும் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்துவிட்டு, பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது. மருத்துவத் துறையில் ஓரளவு சம்பாதிக்க, எம்.பி.பி.எஸ்., முடித்து, முதுகலை மருத்துவம் (எம்.எஸ்., எம்.டி.,) முடிக்க வேண்டும். அதே நேரம், பி.இ., படிப்பை முடித்ததும், வேலை கிடைக்க பல வாய்ப்புகள் உள்ளன. நன்றாகப் படித்தால், படிக்கும்போதே, "கேம்பஸ் இன்டர்வியூ'வில், சர்வதேச நிறுவனங்களில் வேலை வாங்கி விட முடியும். இவ்வாறு அந்த மாணவி கூறினார்.


அதிகரிப்பு: அண்ணா பல்கலை கவுன்சிலிங் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இதுபோல், 20 மாணவர்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, "டாட்டா' காட்டிவிட்டு, பி.இ., படிப்பை தேர்வு செய்தனர். இந்த ஆண்டு, இப்போதே 40 பேர் பி.இ.,படிப்புக்கு வந்துள்ளனர். அவர்கள் கூறும் காரணங்களுடன் மேலும் சில விருப்பங்களும் உள்ளன. விரும்பிய மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்கின்றனர். பின்னர், அந்த கல்லூரியில் படிக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டு, முடிவை மாற்றிக் கொள்கின்றனர். இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவங்கி சில நாட்கள் தான் ஆகிறது. "கட்-ஆப்' குறைய, குறைய, எம்.பி.பி.எஸ்., படிப்பை விட்டுவிட்டு, பி.இ., படிப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ragam Thalam - Madurai,இந்தியா
22-ஜூலை-201216:31:53 IST Report Abuse
Ragam Thalam தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தால் மேற்படிப்பும் முடிக்க குறைந்தது 1 கோடி ரூபாய் வேண்டும் (இதில் ருசிகரமான விஷயம் என்னெவென்றால் இந்தப் பணத்திற்கு கொடுப்பவனும் வரி கட்ட மாட்டான், வாங்குபவனும் வரி கட்ட மாட்டான்). ஆனாலும் நாய் படாத பாடு பட்டால்தான் சம்பாதிக்க முடியும் அது 70 , 75 வயது வரை ஆனாலும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஜூலை-201216:03:42 IST Report Abuse
Pugazh V எம் பி பி எஸ் படிப்பதும் கஷ்டம்- ஆசிரியர்கள் குறைவு- புத்தகங்கள் ஏராளம்- படிப்பு காலமும் அதிகம்- சம்பளம் மிக குறைவு- தினம் பதினான்கு மணி நேரமாவது உழைத்தால் தான் காசு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் வழுக்கை விழுந்து வயசாகி விடும்
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
22-ஜூலை-201212:29:00 IST Report Abuse
maran ஒரு வேளை தமிழன் சிந்திக்க ஆரம்பித்து விட்டானோ என்ன ? ஏனென்றால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ..இங்கு படித்துவிட்டு வெளிநாட்டிற்கு ஓடி போய்விடுகிறான் என்ற மக்களின் நினைப்பை புரிந்துகொண்டு இப்படி நினைக்கிறார்களோ என்னவோ ..? அதுமட்டும் இல்லை ...மருத்துவத்துறை படித்துமுடிக்க நிறைய செலவு செய்ய வேண்டி உள்ளது ..அதற்காகவும் இருக்கலாம் .....அதற்க்கு செலவு செய்ய அந்த குடும்ப பெற்றோர்களின் வருமையாககூட இருக்கலாம் ...கல்வி எட்டா கனியாக இருந்த காலம் போய் இப்போது அதற்க்கு செலவு செய்ய எட்டாத காலமாகி விட்டது ......என்ன கொடுமைடா இது ....
Rate this:
Share this comment
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
22-ஜூலை-201211:42:31 IST Report Abuse
Lightning View டாக்டர் தொழில் நிரந்தரமானது, அதுவும் MS, MD, Gynecology, Paediatrics, ENT, Ophthalmology போன்றவைகளில் எதாவது ஒன்றில் சிறப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் படிப்பது எளிது வேலை நிரந்தரம் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
22-ஜூலை-201209:48:00 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN இவனுக கல்வி முறையை ஒரு சில ஆண்டுகள் புறக்கணித்தால் தான், இவனுக வழிக்கு வருவார்கள். ஒரு நல்ல டாக்டரிடம் சம்பளத்துடன் இரண்டு ஆண்டு பனி புரிந்தால் டாக்டர், அதே போல ஒரு பொறியாளரிடம் இரண்டு ஆண்டு பனி புரிந்தால் பொறியாளர், கோர்ட் வாசலில் ஒரு மூன்று மாதம் சுற்றிவந்தால் வழக்கறிஞர் என இரண்டு ஆண்டுக்கு பின் நம்மை நாமே பிரகடன்படுத்திக்கொண்டு, நம்மை நம்பி வருபவர்களுக்கு சேவை செய்தாலே போதும். டெல்லியில ஒரு வார்டு பாய் அற்புதமாக நல்ல டாக்டரை விட தையல் போடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
Dr.UTHAYAN - Male",மாலத்தீவு
22-ஜூலை-201209:28:33 IST Report Abuse
Dr.UTHAYAN டாக்டர்ஸ் லைப் லேட் settlement ஆனால் steady , strong settlement . ஆனால் engineers லைப் early settlement and unsteady one unless otherwise யு ஆர் லக்கி.
Rate this:
Share this comment
Amanulla Arshad - Riyadh,சவுதி அரேபியா
22-ஜூலை-201212:21:41 IST Report Abuse
Amanulla ArshadNo Dr. This is not correct. For a Doctor you need luck. I know many doctors are struggling to earn their daily bread and butter. But if engineers are really talented sky is the limit for their earnings. Being an moderate engineers I too get 40-50l per annum. Not only me also many of my fris....
Rate this:
Share this comment
Subramanian - Huizhou,சீனா
22-ஜூலை-201220:58:12 IST Report Abuse
Subramanianஅமானுல்லா டாக்டரை பற்றி கூறுவது சரியல்ல. எந்த டாக்டரும் சாப்பாட்டிற்கு திண்டாடுவது கிடையாது. ஆனால் பொறியாளர்கள் நிறைய பேர் அப்படி திண்டாடி கொண்டுதான் இருக்கின்றார்கள்...
Rate this:
Share this comment
Guruprasad Dasarathan - Doha,இந்தியா
22-ஜூலை-201221:25:33 IST Report Abuse
Guruprasad Dasarathanடாக்டர் திண்டாடுராரோ இல்லியோ, டாக்டர் தொழில் மிகவும் கஷ்டமானது. எந்த நேரத்திலும் பணி புரிய தயாராய் இருக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறை, ஐ.டி. கம்பெனிக்கு போனோமோ, சாயந்திரம் ஆப் அடிச்சமா, ராத்திரி மிட்னைட் மசாலா பார்த்தோமா, ரெண்டு வர்ஷம் கழிச்சி அமேரிக்கா போயி செட்டில் ஆனாமோன்னு நினைக்குது....
Rate this:
Share this comment
Cancel
swamynathan - tirunelveli,இந்தியா
22-ஜூலை-201208:50:28 IST Report Abuse
swamynathan டாக்டரில் வேலை இல்லாதவர்கள் கம்மி. ஆனால் எஞ்சிநீர்களில் வேலை இல்லாமல் இருப்பவர்கள் நிறைய உண்டு. 17 % எஞ்சிநீர்களே வேலைக்கு தகுதி உள்ளவர்களாக கருத படுகிறார்கள். அவர்களிலும் வெகு சிலரே நன்கு மேலே வருகிறார்கள். ஆகவே மாணவர்கள் நன்கு சிந்தித்து தனக்கு எது வருகிறதோ அதை பண்ணலாம். அரசும் அதிக மருத்துவ கல்லூரிகளை இன்னும் அதிக எண்ணிக்கையில் ஆரம்பிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
22-ஜூலை-201208:17:52 IST Report Abuse
JAY JAY மருத்துவ படிப்பை தேர்ந்தெடுப்பதில் உள்ள ஆர்வம் வருங்காலங்களில் இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது...காரணங்கள்...1 . குறைந்தது 10 வருடம் ஆகும் PG முடிக்க ..அதன் பின்பு தான் சம்பாதிக்க முடியும்....2 . அரசு மருத்துவமனைகளில் குறைந்த சம்பளம்.... 3 . தனியாக கிளினிக் வைத்தால் பெரிய மருதுவமனைக்களுடன் போட்டி போட இயலாமை... 4 . எஞ்சினியரிங்கில் நல்ல மார்க் ஸ்கோர் பண்ணியவன் உடனே கார் FLAT என்று 22 வயதில் செட்டில் ஆக 30 வயதில் தான் மருத்துவர் ஆனால் காசு பார்க்க முடியும்...5 மருத்துவ பணியென்றால் காலை / இரவு நேரம் பார்க்காமல் சேவை அடிப்படையில் வேலை செய்தாக வேண்டும்...பொறியியலில் அந்த பழு இல்லை....6 . மருத்துவ படிப்பு , எஞ்சினியரிங் படிப்பை விட அதிகம் செலவு மட்டும் அல்ல...அதிக கஷ்டம்... படித்து தேறுவது ரொம்ப கஷ்டம்... 7 . CONSUMER கோர்ட்டுகளில் மருத்துவர்களை இப்போது இழுப்பது அதிகமாகி வருவதால் மனநிலையை பாதிக்கும் சேவையாகி விட்டது மருத்துவ சேவை...7 . பலர் நினைக்கலாம் ..மருத்துவர்கள் என்றால் அதிகம் சம்பாதிப்பவர்கள் என்று..ஆனால் 10 % தனியார் மருத்துவர்களே அதிகம் சம்பாதிகின்ற்றனர்... அரசு மருத்துவர்கள் , அரசு வேலையில் டிமிக்கி கொடுத்து விட்டு சம்பாதிப்பதும் நடக்கிறது...90 % மருத்துவர்கள் குறைந்த சம்பளத்தில், ஆனால் அதிகம் படித்து கொண்டு, சிறுவயது முதலே பள்ளியில் முதல் மாணவனாக வந்து கொண்டு, 4 வருடத்தில் படிப்பை முடிக்கும் பொறியாளர்களை விட அந்தஸ்தில் குறைவாகவே இருப்பது மருத்துவ பணியில் ஈடுபாடு குறைவதை காட்டுகிறது... 8 ..இது தவிர மருத்துவர்கள் மீதான சமீப கால தாக்குதல்கள்..... இதனை களைய வழிகள் உள்ளது... 1 .HOUSE SURGEON பீரியட் இல் உதவி தொகை 20000 கொடுக்க வேண்டும்,..தற்போது 5000 கொடுக்கபடுகிறது..2 .PG மாணவர்களின் உதவி தொகை 25000 ஆக உயர்த்தப்பட வேண்டும்... தற்போது 5000 , 6000 என்ற அளவில் தான் உள்ளது...3 அரசு மருத்துவர்களின் NON PRACTICE ALLOWANCE 50000 ரூபாயாக கொடுத்தால் நிச்சயம் அரசு வேலைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மருத்துவர்கள் PRIVATE கிளினிக்கிற்கு செல்ல மாட்டார்கள்...அப்படி செல்பவர்களை டிஸ்மிஸ் செய்யலாம்...மாதம் 1 லட்சம் அரசு மருத்துவர்கள் சம்பளம் பெற வேண்டும்...4 தனியார் மருத்துவ மனைகளை முறை படுத்துதல் வேண்டும்... A B C D கிரேடு கொடுத்து முறைபடுத்தி அனைத்து நோய்களுக்கும் FIXED RATE என்னும் அளவில் FEES structure கொண்டு வர வேண்டும்...MEDICAL POLICY கட்டாயமாக படவேண்டும்....5 . அணைத்து பரிசோதனைகளும் பாலிசி வழியாக தான் செய்ய வேண்டும்....அப்போது கண்காணிப்பு பலமாக இருந்தால் தேவையில்லாத TEST கள் எழுதுவது தவிர்க்கப்படும்...நோயாளிகள் பலன் பெறுவார்...6 . மருத்துவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும்...அனைத்திலும் முன்னுரிமை... FOR EX : ரயில்வே , விமான டிக்கட் முதல் கொண்டு அனைத்திலும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்... 7 மருத்துவ வேலை NOBLE PROFESSION .. அதற்காக மருத்துவர்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்...ஆனால் நோயாளிகளின் உடல்நிலை தான் ரொம்ப முக்கியம் என்பதை மருத்துவர்கள் தாங்கள் தூங்கும் பொது கூட மறக்க கூடாது.....அப்படி ஒரு நிலை வந்தால் , மருத்துவர்களுக்கு SOCIETY யில் நல்ல அந்தஸ்து கிடைத்தால் , நிச்சயம் நல்ல மருத்துவர்கள் உருவாவார்கள்....இல்லைஎன்றால் சேவை மட்டும் கொடு...ஆனால் நீ கஷ்டப்பட்டு அது தான் உன் தலை எழுத்து என்ற நிலை இருந்தால் , இன்னும் கொஞ்ச காலத்தில் நல்ல மருத்துவர்களே இருக்க வாய்ப்பு இல்லை......
Rate this:
Share this comment
Cancel
22-ஜூலை-201207:45:23 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் இங்கே கருத்து தெரிவிப்பவர்களில் (என் அனுமானத்தில்) குறைந்தது முப்பது விழுக்காடு பொறியாளர்கள்தான். மருத்துவர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே இதிலிருந்தே யார் ஜாலியாக வாழ்க்கை நடத்தி பொழுதுபோக்குகிறார்கள் என்பது விளங்கும்.
Rate this:
Share this comment
Sukumar Gopalakrishnan - Chennai,இந்தியா
22-ஜூலை-201219:42:24 IST Report Abuse
Sukumar Gopalakrishnanஇதுக்கு காரணம், மொத்த இன்ஜினியரிங் சீட்ஸ் 2.65 lakhs. மொத்த மெடிக்கல் சீட்ஸ் 2005....
Rate this:
Share this comment
Cancel
saravanan - Boonlay,சிங்கப்பூர்
22-ஜூலை-201207:22:02 IST Report Abuse
saravanan வேலைவாய்ப்பு எங்க இருக்கு தமிழகத்துல? அப்படியே கெடச்சாலும் டாஸ்மாக்ல தான் கெடைக்குது.சரவணன் துவாஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்