Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012,23:47 IST
கருத்துகள் (90)
புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69 சதவீத ஓட்டுகளை பெற்று, அபார வெற்றி பெற்றார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, அவர் பதவியேற்கவுள்ளார். இதுவரை, முழு நேர அரசியல்வாதியாக இருந்து வந்த பிரணாப், தற்போது, ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப் போகிறார்.
ஜனாதிபதியாக உள்ள பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. ஆளும் ஐ.மு., கூட்டணி சார்பில், நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி,76, போட்டியிட்டார். இவருக்கு, கூட்டணி கட்சிகளைத் தவிர, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், ஆதரவு தெரிவித்தன.தே.ஜ., கூட்டணி சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா போட்டியிட்டார். இவருக்கு, தே.ஜ., கூட்டணியில் உள்ள, பா.ஜ., அகாலி தளம் மற்றும் கூட்டணியில் இல்லாத, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்தன.
துவங்கியது:பார்லிமென்ட் வளாகத்தில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களான பிரணாப், சங்மா முன்னிலையில், ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று காலை துவங்கியது. முதலில், எம்.பி.,க்கள் அளித்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டுப் போட்ட, 748 எம்.பி.,க்களில், 527 எம்.பி.,க் களின் ஓட்டுகள், பிரணாப்புக்கு ஆதரவாக கிடைத்தன. சங்மாவுக்கு, 206 எம்.பி.,க்களே ஓட்டளித்திருந்தனர். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
முன்னிலை:மாநிலங்கள் வாரியாக எண்ணப்பட்ட ஓட்டுகளிலும், பிரணாப் முகர்ஜியே தொடர்ந்து முன்னிலை வகித்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்தன. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், பா.ஜ., ஆளும் கர்நாடகாவில், சங்மாவை விட, பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன. கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் அனைத்தும், பிரணாப் புக்கே பதிவாகியிருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்மாவுக்கு, 148 ஓட்டுகளும், பிரணாப்புக்கு 45 ஓட்டுகளும் கிடைத்தன. நான்கு ஓட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டது.
அபார வெற்றி:அனைத்து ஓட்டுகளும், நேற்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. இதில், செல்லுபடியான, 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 ஓட்டுகளில், ஏழு லட்சத்து 13 ஆயிரத்து 763
ஓட்டுகளை பெற்று (69.3 சதவீதம்), பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார். சங்மாவுக்கு, மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 978 ஓட்டுகள் கிடைத்ததாக, தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி தெரிவித்தார்.
பதவியேற்பு:நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, பிரணாப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள், ஜனாதிபதி மாளிகையில், நேற்றே துவங்கி விட்டன. காங் கிரஸ் கட்சியுடன் அதிருப்தியில் இருக்கும், திரிணமுல் தலைவர் மம்தாவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.பிரணாப்முகர்ஜி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ராகுல், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மற்றும் அந்தோணி, சிதம்பரம் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், பிரணாப் வீட்டுக்கு வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவும் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., சார்பிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தனக்கு ஓட்டளித்த அனைவருக்கும், ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரணாப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பிரணாப், இனி...:ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் உள்ளார். உள்துறை, ராணுவம், நிதி என்று, மத்திய அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது, தன் பழுத்த அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக, கடந்த 3 ஆண்டுகளில் திகழ்ந்தார்.இத்தனை ஆண்டுகளாக, முழு நேர அரசியல்வாதியாக இருந்த பிரணாப், முதல் முறையாக, அரசியல் பரபரப்புகளில் இருந்து விலகி, நாட்டின் முதல் குடிமகன் என்ற உயர்ந்த பதவியை வகிக்கவுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அமைச்சரவையில்,
Advertisement
பிரதமருக்கு அடுத்த இடத்தை வகித்து வந்தார். ராகுலுக்கு வழி:
கடந்த 1981ல், இவர் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, மன்மோகன், ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றியது வரலாறு. தற்போது, ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளதை அடுத்து, பிரதமர் உட்பட, கேபினட் இவரது கருத்தைக் கேட்கும் திருப்பம் வந்திருக்கிறது. பிரணாப், ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளதால், காங்கிரஸ் கட்சியிலும், இனி அதிரடி மாற்றங்கள் இருக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. அமைச்சரவையில் மாற்றங்கள் வருவதுடன், வரும் 2014ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு, அக்கட்சி புதிய வியூகங்களை வகுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
நன்றி:
பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில்
, "எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர்' என, தழுதழுத்த குரலில் கூறினார்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மா கூறுகையில், "வெற்றி பெற்ற பிரணாப்புக்கு, என் வாழ்த்துக்கள். இந்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட விதம், பாரபட்சமாகவும், அரசியல் சார்பானதாகவும் இருந்தது. ஐ.மு., கூட்டணி ஆட்சி நடக்காத மாநிலங்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, அந்த மாநிலங்களுக்கு, சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட்டது. இந்த தேர்தலை எதிர்த்து, நான் கோர்ட்டில் வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது'



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (90)
abi - mannargudi,இந்தியா
24-ஜூலை-201212:29:29 IST Report Abuse
abi குடியரசு தலைவரின் அர்த்தம் தெரியுமா இவருக்கு ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Anand - Madurai,இந்தியா
23-ஜூலை-201223:23:16 IST Report Abuse
Anand முழு நேர ஊழல்வாதி நாட்டின் ஜனாதிபதியானார்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
muthu Rajendran - chennai,இந்தியா
23-ஜூலை-201223:01:53 IST Report Abuse
muthu Rajendran உண்மையில் பிரணாப் முகர்ஜி அவர்கள் வெற்றிக்கு வித்திட்டவர்கள் தமிழக மற்றும் ஓடிஸா முதல்வர்கள் தான்.அவர்கள் அவரசப்பட்டு பீ ஜே பீ முடிவேடுக்கும்முன் தனிச்சையாக சங்கமா பெயரை அறிவித்ததால் தான் கலாம் போட்டியிடும் வாய்ப்பு போய் பிரணாப் அவர்களின் வெற்றி எளிதாயிற்று.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Muthu Navalur - chennai,இந்தியா
23-ஜூலை-201222:17:48 IST Report Abuse
Muthu Navalur பிரணாப் முக்ஹெர்ஜி வாழ்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Muthu Navalur - chennai,இந்தியா
23-ஜூலை-201221:39:31 IST Report Abuse
Muthu Navalur இந்தியவில் இனி பாலாரும் தேனாறும் ஓடும் பசி பஞ்சம் நாட்டை விட்டு பறந்தோடும் வால்மார்ட் போன்ற அமெரிக்க கடைகள் மிக சுலபமாக வரும் வாழ்க பிரணாப் முக்ஹெர்ஜிவாழ்க சோனியா ஜி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
g.k.natarajan - chennai,இந்தியா
23-ஜூலை-201221:19:46 IST Report Abuse
g.k.natarajan அரசயைளில் வேண்டாதவர்கள்,ஏதாவது பரிசாக கொடுத்து அனுப்ப காங்கிரஸ் முதலில், கவர்னர், ,பதவி கொடுத்து அனுப்புவார்கள், தங்கள் கட்சியை சேர்ந்தவர்களைஇப்பொழுது, ஜனாதிபதிபதாவிக்கும் அதையே செய்கிறார்கள்ஒன்றும் புதுது இல்லை? நடராஜன்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RANGARAJAN YAMUNACHARI - calcutta,இந்தியா
23-ஜூலை-201217:28:33 IST Report Abuse
RANGARAJAN YAMUNACHARI அந்த செல்லாத ஓட்டுப் போட பதினைந்து பேரையும் பெயர் வெளியிட்டு நாடு கடத்த வேண்டும். ஒட்டுப் போடத் தெரியாத வெட்டிப் பயல்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
G R Chenniappan - Erode,இந்தியா
23-ஜூலை-201215:46:04 IST Report Abuse
G R Chenniappan என்ன பிரயோஜனம் இந்த ஜனாதிபதி போஸ்ட்ல .... ஒரு மண்ணும் கிடையாது. பொம்மை தான் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rani tirupur - tirupur,இந்தியா
23-ஜூலை-201215:23:48 IST Report Abuse
rani tirupur எல்லாம் அவன் செயல்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Gokzz - Bangalore,இந்தியா
23-ஜூலை-201218:06:08 IST Report Abuse
Gokzzதவறு, எல்லாம் அவள் செயல்........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rani tirupur - tirupur,இந்தியா
24-ஜூலை-201213:39:21 IST Report Abuse
rani tirupurya yes boss...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
இளித்தவா&# - Aadhivaasi,கம்போடியா
23-ஜூலை-201215:04:41 IST Report Abuse
இளித்தவா&# //"எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி.// என்னது மக்கள் உங்களுக்கு காரணமாக இருந்தார்களா? மக்களுக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. எப்பவோ / ஏதோ ஒரு கட்சியின் வேட்பாளரை நாங்கள் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கோ / பாராளுமன்றத்துக்கோ அனுப்பியது வரை தான் நாங்கள் செய்தது. அதற்க்கு அப்புறம், அவங்களா கூட்டணி வெச்சுகிராங்கோ, அவங்களுக்கு டீலிங் ஒத்துவரலன்னா கூட்டனிய முரிச்சுக்குராங்கோ, இதெல்லாம் எங்கள கேட்ட நடக்குது. அப்புறம் எப்படி மக்கள் உங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்திருப்பங்கோ? உண்மையாக மக்களே இதற்க்கு ஓட்டு போட்டிருந்தால் நீங்கள் deposit கூட வாங்கி இருக்கமாடீங்க. சும்மா காமெடி பண்ணாம நல்ல ராஷ்ட்ரபதி பவன்ல ரெஸ்ட் எடுங்க வங்காள சிங்கமே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.