சென்னை:திருச்சி, கோவை, நெல்லை, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தரம் உயராது:சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளின் செயல்பாட்டினை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தவும், 237 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு கல்லூரிகளாக, 2001-2006 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டன. கடந்த, 2007ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை, அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து, சென்னை, திருச்சி, கோவை, நெல்லை மற்றும் மதுரை ஆகிய ஐந்து இடங்களில், புதிதாக அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. அதிக எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கினால் மட்டும் கல்வியின் தரத்தில் எவ்விதமான உயர்வும் ஏற்படாது.
சட்டம்:அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து, மாநிலத்தில் பல பகுதிகளில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தியதால், அப்பல்கலைக்கழகம் தன் வலிமையை இழந்துவிட்டது. இதனால், கல்விச் சேவையில் தரம் உயராமல், சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. எனவே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, கடந்தாண்டு இதற்கான சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.இதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஆய்வறிக்கை:இக்குழு, ஐந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அசையும், அசையா சொத்துகள் குறித்து, முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.இதை பரிசீலித்த பின், திருச்சி, கோவை, நெல்லை, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை, சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, வரும் ஆகஸ்ட், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்...
*தமிழகம் முழுவதும் உள்ள, 535 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற பொறியியல் கல்லூரிகளாக மாற்றப்படும்.
*திருச்சி, நெல்லை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களிலுள்ள, 12 உறுப்பு கல்லூரிகளும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாகும்.
*திருச்சி, கோவை, நெல்லை மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படும். இந்த அலுவலகங்கள், உறுப்பு மற்றும் இணைவு கல்லூரி
களின் செயல்பாட்டை கண்காணிப்பதோடு, அக்கல்லூரி
களில் பயிலும் மாணவர்களின் குறைகளை களையவும், உரிய நடவடிக்கை எடுக்கும்.
*திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின், பல்கலை துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக மாற்றப்படும்.
*சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பல்கலை துறைகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்.
*ஏனைய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பல்கலை துறைகளில் பயிலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள், கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் அமைக்கப்படும், மண்டல அலுவலகங்களில் தங்கள் கல்வியை தொடரலாம்.
*இனி அனைத்துத் தேர்வுகளும், 17 பிராந்திய அலுவலகங்கள் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிற்போக்கான செயல். தமிழ்நாட்டில் BA, BSc, BCom போன்ற படிப்புகளைவிட தொழிற்கல்விகளே இனி தேவை என்ற நோக்கில் அதிக தொழிற் கல்லூரிகளை உருவாக்கி அதனை திறமையுடன் நிர்வகிக்கும் பொருட்டு ஐந்து தொழிற் பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டன. 535 (+70) தொழிற் கல்லூரிகளுக்கு ஒரு பல்கலை கழகமா? மண்டலங்கள் ஏற்படுத்தி, நிர்வாக தொய்வுகளை ஏற்படுத்தியுள்ளார். பல்கலைகழகங்களுக்கிடையே போட்டியை விலக்கியுள்ளார். உலகத்திலேயே அதிக மாணவர்களை கொண்ட பல்கலை கழகம் என்று பெயர் வேண்டுமாம், அதற்காக ஒருங்கிணைப்பு. உலகில் முன்னணியில் உள்ள Harward University, University of Cambridge, Oxford University – இவைகளின் மாணவர்கள் எண்ணிக்கை தலா 21000 ஐ தாண்டாது. ஆனால் நமது அண்ணா பல்கலை கழகம் 2,50,000 மாணவர்களை கொண்டது என்று பெறுமை பட்டுக்கொள்வதற்காக, தொழிற்கல்வியின் தரத்தை பின்னோக்கி செல்ல உத்தரவு பிரப்பித்துள்ளார்.
படிப்பின் தரம் உயர , இப்படி பல பல்கலைகழங்கள் வேண்டும். யு.ஜி.சி சொனது போல் 100 கல்லூரிகளுக்கு மேலாக எந்த பல்கலைகழமும் சரியாக படிப்பின் தரத்தை கண்கானிக்க முடியாது. முக, யு.ஜி.சி சொன்னதால் செய்தாரா இல்லை கொள்ளை அடிக்க செய்தர என்று தெறியாது. ஆனால் நடந்தவைகளை பார்க்கும் போது கொள்ளை அடிக்க இப்படி பல பல்கலைகழகங்களை உருவாக்கினார் என்று தெறிகிரது. இப்படி கொள்ளை அடித்தால் அதை சரிசெய்யாமல், எல்லா பல்கலைகழகங்களையும் ஒன்று சேர்ப்பது சரியில்லை. இப்படி மாநிலங்கள் சரியாக செயல்படவில்லை என்று, டெல்லியுடன் இணைத்தால் ஜெஜெ ஏற்றுக்கொள்வாரா ?. இப்பொ மாநில சர்வீஸ்கமிஷனை , ஊழல் இல்லாமல், திறம்ப்பட நிவாகிக்க நடராஜனை ஜெஜெ நியமித்து உள்ளார். அவரும் அதை நல்ல முறையில் நடத்தி வருகிரார். அதே போல் , எல்லா பல்கலைகழகங்களுகும் நடராஜன் போல் திறமை உள்ள ஊழல் செய்யாத , கல்வியில் கோலோச்சியவர்கள் நியமித்து இருக்கலாம். இப்படி செய்தால் தமிழ் நாட்டிலே பல்கலைகழகங்கள் போட்டி வரும். அதனால் கல்வி தரம் உயரும். அதை விட்டு இப்படி முக செய்தார் என்று மூடிவிட்டால், தமிழகதின் கல்வி தரம் உயருமா ?. மனித குணங்களில் பொறாமை,அகம்பாவம்.. பொன்றவைகள் அழியும் நிலையின் அறிகுறி. ஜெஜெ விர்க்கு மக்கள் ஏன் ஓட்டு போட்டார்கள் என்றால் தமிழர்களின் நலம் கருதி செயல்பட.ஜெஜெவின் நல்ல செயல்கள் - கல்விக்கு செலவிடுதல், இலவச லேப்டாப், விஷன் டாக்குமெண்ட்... போன்றவைகள் இதனால் பலனற்று போய்விடும். ஜெஜெ இப்படி முக செய்ததை எல்லாம் அழிக்கத்தேவை இல்லை. அதில் சில நல்லதுகளும் உள்ளது. அவைகளை அழிக்காமல் ஊக்குவிக்க வேண்டும்.
முதல்வருக்கு நன்றி
நல்ல துணைவேந்தர் நியமிப்பதன் மூலம் நிர்வாகத்தை சீர் செய்ய முடியும்....... இந்திய ஆட்சி பணி(IAS) முடித்த நல்ல நேர்மைக்கு பெயர் போனவர்களை துணைவேந்தரின் காரியதரிசியாக(PS to VC) நியமிக்க வேண்டும். அவர் உங்களின் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும். இதனால் தகுதியற்ற உதவி, இணை மற்றும் பேராசிரியர்களை தேர்வு செய்வது நிறுத்தபடும்., இப்பொழுது உள்ள அண்ணாபல்கலையில் இருந்து யாரும் துணைவேந்தர் மற்றும் துணைவேந்தரின் காரியதரிசியாக நியமிக்க கூடாது, நியமித்தால் தகுதியற்ற உதவி, இணை மற்றும் பேராசிரியர்களை தேர்வுசெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பொழுது பல்கலை மற்றும் திருச்சி, நெல்லை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களிலுள்ள, 12 உறுப்பு கல்லூரிகளும் கொள்ளை கூட்டத்தின் தலைமை இடமாக உள்ளது. முன்பு இருந்தவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளவதன்மூலம் வருங்காலங்களில் நிவாகசீர்கேடு நடக்காமல் தடுக்க வழி........
நல்ல முடிவை எதிபார்த்து உள்ளோம் :-)
இப்படி ஒரு நடவடிக்கை தற்போது தேவை இல்லை. இதனால் பாதிக்க படுவது மாணவர்கள் மட்டுமே.
கடந்த ஆண்டு தனி தனி பல்கலைகழகமாக இருந்த போது மாணவர்கள் சுலபமாக தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
ஆனால் தற்போது அப்படி இல்ல. தற்போது முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் மிகவும் குறைவே.
அதனால் அவர்கள் கல்லூரியை முடித்து போகும் பொது கடுமையாக பாதிக்க படுவார்கள்
மிகச் சரியான நடவடிக்கை. அதிக அளவு எண்ணிக்கையில் பல்கலைக் கழகங்கள் இருப்பதால் கல்வித்தரம் உயரவே உயராது. ஒரு பல்கலைக் கழகம் இருந்தாலும், அளவுக்குள்ளான கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் இருந்தாலே கல்வித்தரன் உயர சற்றாவது வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்தது போல, தன்னாட்சிக் கல்லூரிகளையும் ஒழித்து அனைத்துக் கல்லூரிகளையும் அரசுப் பல்கலைக் கழகங்களின் கீழ் கொண்டுவருவார் அம்மையார் என்று எதிர்பார்க்கலாம். இக்காலத்தில் MTech படிப்பில் 80 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவோர் பலரால் தவறில்லாமல் ஒரு வரி கூட ஆங்கிலத்தில் எழுத முடிவதில்லை என்பது நிதர்சன உண்மை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.