சென்னை:"காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட, தமிழக அரசு மனு செய்துள்ளதை வரவேற்கிறேன் என்றும், அக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறேன்.
தண்ணீர் வரவில்லை:காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி, கடந்த 20ம் தேதி வரை, தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய 36.15 டி.எம்.சி., தண்ணீர் வந்து சேரவில்லை.குறுவை சாகுபடிக்காக, கடந்த மாதம் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, பாசனத்திற்காகத் திறக்கப்படாமல், மூன்று மாவட்டங்களின் குடி நீர் தேவைக்காக, சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 சதவீத சாகுபடி காவிரி நீரால் தான் நடைபெறுகிறது.பருவ மழையைக் காரணம் காட்டி, வறட்சிக் காலங்களில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை, கர்நாடகம் வழங்காமல் இருக்கிறது. இதனால்,
தமிழகத்தின் விவசாயமும், பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கடந்த காலங்களில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையோ, காவிரி கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவையோ, கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது.
மத்திய அரசு எடுக்கவில்லை:பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என, மே 18ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியும், இதுவரை அந்த ஆணையத்தைக் கூட்டுவதற்காக, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. ஆனால், தி.மு.க., அரசின் முயற்சி யால், காவிரி நதிநீ நர் ஆணையம் அமைந்த போது, அதை பல் இல்லாத ஆணையம் என்று சொல்லி கிண்டல் செய்து, அதை வரவேற்காத ஜெயலலிதா, கடந்த 2002ம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, காவிரி நதி நீர் ஆணையத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என, கடிதம் எழுதினார்.
கவனம் செலுத்தவில்லை:அவர் அவ்வாறு எழுதியதை, சுப்ரீம் கோர்ட் கண்டித்ததையும் மறந்து விட்டு, தற்போது அந்த காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என, பிரதமருக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வந்திருக்கிறார் என்பதையும் எண்ணிப் பார்க்கத் தான் வேண்டி யுள்ளது. மே மாதத்தில், பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, பின் கொடநாடு சென்று விட்டதால், இந்தப் பிரச்னை பற்றி நேரடியாக கவனம் செலுத்த இயலவில்லை.தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தற்போது காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும் என, கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,"காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும்' என, தி.மு.க., சார்பில், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசின் சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் வரவேற்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறிஉள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நன்றி தலைவரேஅதே சமயம், ஜெயா கடிதம் எழ்தினபோது, நீங்களும் தமிழக காங்கரஸ் மந்திரிகளும், பிரதமர்,சோனியாஜி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்று தந்து இருக்க முயற்சியாவது செய்து இருக்கலாம் போன ஆட்சியின் பொது[ஜெயாவின்],அவர்கள் வீணாக
அண்டை மனிளிலன்குடன், கோர்டுக்கு சென்று, சண்டைபோடுகிறார் என்றெல்லாம் எசிநீர்கள்இப்பொழுது புரிகிறதாமுல்லை பெரியார் தீர்ப்பு,..?
நீங்கள் என்ன செய்தீர்கள், உங்கள் ஆட்சியில் என்று கொஞ்சம் மனசாட்சியை தொட்டு பாருங்கள்...?
நடராசன்,
meekannan - Chennai,ஹங்கேரி அவர்களுக்கு வணக்கம்
நல்லது செய்தால் வாழ்த்தத்தான் வேண்டும். தீயன செய்யின் தூற்றத்தான் செய்வார்கள். கருணாநிதி அவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்று சொல்தை நாளை மறுக்கிறார். நேற்று கூறியதை இன்று மறுத்து பேசுகிறார். அதை வைத்துத்தான் குழந்தை நிலைக்கு வந்துவிட்டாரோ என்ற ஐயம் என்னுள் எழுந்தது. தமிழ் செம்மொழியானதற்கு கருணாநிதி சொன்ன விளக்கம், தனக்காக சோனியா தமிழை சொம்மொழியாக்கி த்ந்ததாக தனக்கு வாழ்த்து கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருந்தார். இது தேவையா என்று பலபேர் மனவருத்தப்பட்ட்துண்டு. சோனியா ஒரு இத்தாலியப்பெண். அவர் ராஜீவின் மரணத்தின் பின் ஒரு விபத்துப்போலவே அரசியலில் நுழைந்தவர் என்பது அனைவரும் அறிவர். நேரு குடும்பத்தவர் என்ற முகவரி தவிர வேறு எது சோனியாவை தமிழை செம்மொழியாக்கும் தகுதிக்கு உயர்த்தியது என்பதும் எனது கேள்வி? அதனால் கருணாநிதியின் செயல் ஒரு குழந்தைத்தனமான செயல்போலவே எனக்குப்பட்டது, சமீபத்தில் தமிழ் ஈழம் சம்பந்தமாகவும் டெசோ மாநாடு சம்பந்தமாகவும் அவர் கூறிய கருத்துக்கள் குழந்தைத்தனமானது என்று நான் மட்டுமல்ல பல அறிஞர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதுபற்றி ஆராய்ந்தால் ஒரு கட்சியின் தலைவராக இருந்தால் எதுவும் பேசலாமா என்ற கேள்வி பலரிடமும் எழுவது தவிக்கமுடியாத்து என்பதே எனது கருத்து.
அலெக்ஸ் தென்னவன் அவர்களே, முன்பு ஒரு சமயம், ஜவஹர்லால் நேரு வேறு ஒரு பெயரில் தன்னுடைய ஆட்சியை பற்றி தானே விமரிசனம் செய்து கொண்டார் என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம். கலைஞரே இந்த பெயரில் எழுதி இருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? கேள்வியும் நானே பதிலும் நானே என்று தினமும் எழுதுபவருக்கு இது எம்மாத்திரம்?
இதற்கு முன் தமிழக நலன் கருதி பல வழக்குகளை உச்ச நீதி மன்றத்தில் பதிவுசெய்து ஜெயலிதா அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல முறை மன்மோகன் சிங்க் அவர்களுக்கு தமிழக நலன் கருதி கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் வாயை திறக்காத கருணாநிதி இப்பொழுது பாராட்டு தெரிவிக்கிறார் என்றால் இதில் மர்மம் ஏதோ புதைந்திருக்கிறது. தமிழக மக்களும் முதல்வர ஜெயலலிதா அவர்களும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அண்டிகெடுக்கும் பழக்கம் உள்ளோரிடம் முதல்வர் அவர்களும் தமிழக மக்களும் அஜாக்கிரதையாக இருக்ககூடாது. காவிரி தண்ணீருக்காக கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். காவிரியில் தண்ணீர் வராததற்கு முழுமுதல் காரணம் கருணாநிதி. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் காவிரி நதி நீர் ஒப்பந்த்கத்த்தை புதுப்பிக்காமல் விட்டுவிட்டார். அந்த ஒப்பந்தத்தை கருணாநிதி புதுப்பித்திறுந்தால் இன்று நதி நீர் பிரச்சினையே வந்திருக்காது. ஹேமாவதி ஆற்றில் அணை கட்டி காவிரி நதி நீரைத தடுக்கிறார்கள் என்று பெரும் தலைவர் காமராஜ் எச்சரிதார் ஆனால் கருணாநிதி காமராஜ் அவர்கள் எச்சரிக்கையை கிண்டலடித்து காமராஜ் அவர்கள் ஹேமாவதி நடிகையைப் பற்றி பேசுகிறாரா அல்லது ஹேமாவதி ஆற்றைபற்றிப் பேசுகிறாரா என்று கிண்டலடித்தார். காமராஜ் மனத்தில் தமிழக மக்களும் காவிரியும் இருந்தது கருணாநிதி மனதில் ஹேமமாலினி இருந்தார். தினசரிகளில் தினந்தோறும் அவர் பெயர் வரவேண்டும் என்ற காரணத்தால் இவருடைய திருவிளையாடல்களை மறந்துவிட்டு ஏதோ அறிக்கை விடுகிறார்.
ஒரு குறிப்பிட்ட வயதுடன் மனிதர்கள் திரும்பவும் குழந்தை நிலைக்கு வடுவது உண்மை என்பதை நானும் எனது குடும்பத்தில் உள்ள சிலரில் பார்த்திருக்கிறேன். அது அனுதாபத்தை தங்கள்மீது திருப்புவதற்காக குறிப்பிட்டவர்கள் செய்யும் பாசாங்கு என்று எனது அம்மா கூறியதையும் புறக்கணிக்க முடியாமல் நான் திண்டாடியதுமுண்டு. இருந்தும் இரண்டும் கெட்டான் நிலைச் சந்தேகம் இன்னும் என்னிடம் இருந்துகொண்டேயிருந்தது,. ஆனால் அந்த நிலைக்கு மனிதன் வருவது என்பது இயல்பானதுதான் என்பதை அரசியல் அனுபவசாலியான கருணாநிதியின் நடவடிக்கைகள் காட்டுகின்றன, அம்மாவின் கூற்று பொய்யோ என்று சிந்தித்து நான் சுயமாக குளம்புமளவுக்கு கருணாநிதி அவர்களின் நடவடிக்கைகள் என்னை குளப்பிவிட்டிருக்கின்றன, கருணாநிதி குழந்தை நிலைக்கு வந்துவிட்டார் என்பதையே சமீபகால நிகழ்வுகள் காட்டுகிறது. நான் எனது தாயாரின் கருத்தை நம்புவதா அல்ல காலம் மனிதனுக்கு அந்த நிலையை உண்டுபண்ணும் என்பதை நம்புவதா என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இருந்தாலும் இடை மரணம் ஒன்றும் என்னை அபகரிக்காமல் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகாலம் வாழவிட்டால் உண்மையை என்னால் பரிபூரணமாக உணரமுடியும்.
குஞ்சு ஓநாய்-குட்டி ஓநாய்-வளர்ந்த ஓநாய்-தளர்ந்த ஓநாய்-கிழ ஓநாய். இப்போது கடைசி நிலை. இப்போது கூட எலும்பை கடித்து பொடி பொடியாக்கி உறிஞ்சி குடித்துவிட்டு துப்பி விடும். ஒரு சாம்பிள் ஒரு லட்சம் கோடி ப்ராஜெக்டை கொடுத்து பாருங்களேன் செடி இருக்க வேர்கடலை இருக்காது தோலிருக்க சுளை இருக்காது. தற்போது பாசாங்கு செய்து குழந்தை போல நடித்து அனுதாபத்தை பெற்று ஆட்சியில் அமர்ந்தால் P .S .வீரப்பாதான் ஜெக ஜோதியாய் காட்சி தருவார்....
இந்த தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தையின் மூலம் கருணாநிதியை காணவேண்டும் அப்போது தான் தமிழ் வளரும், செம்மொழி கண்ட நாயகன் அவன் இல்லையேல் ஏது தமிழுக்கு சிறப்பு? தாய் மொழி தமிழே சரியாக வராத தமிழனுக்கு ஹிந்தி படிக்க ஆசை. ஒரு திறமை உள்ளவனுக்கு தான் மற்ற திறமையும் இருக்கும். ஒன்றும் இல்லாதவனுக்கு ஒன்னும் வராது. திறமை இருப்பவன் கருணாநிதியை குறைகூறாமல் அவனவனுக்கு தேவயானதை தேடி போயிட்ட இருப்பான். அது இல்லாதவன் தான் மற்றவர் மீது குறைகூறி பொழப்பு நடத்துவர். முதுமையில் குழந்தை நிலை எத்துவார்கள் என்ற பலரிடம் கேட்டும் அனுபவத்தில் அறிந்தும் வைத்திருக்கும் கனகரத்தினம், அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் நீங்கள் நினைப்பது போல் நடந்தால் அவன் சாதாரண மனிதன் அதையும் மீறி உங்களை வியக்கவைப்பவன் சிறப்பு மனிதன். அவர் அடியாபோவது குழந்தை நிலை அல்ல தெய்வநிலை. எமதர்மனுக்கே தன்னை நெருங்க விடாமல் தொண்ணூறை நோக்கி (அல்ப ஆயுசில் போகாமல்) செல்லும் இந்த தமிழன் முன்னுரை தொட வேண்டும் என்ற ஒவ்வொரு தமிழனும் வைக்கும் அவா. தமிழனை காட்டிகொடுக்கும் சில தமிழின துரோகிகளை தவிர மற்ற ஏனைய தமிழர்கள் இவர் வாழ தமிழ் வாழ வாழ்த்துகின்றனர்....
திரு பன்னாடை, ஒரு லட்சம் கோடிங்குறது ரொம்ப பெரிய விஷயம் தான். நீங்க சொல்லுற மாதிரி தான் கருணா பண்ணுவாருன்னு வச்சிக்குவோம் . ஒரு சின்ன சந்தேகம், அதே ஒரு லட்சம் கோடி ப்ரொஜெக்டை ஒங்க குலதெய்வம் ஜெயாவிடம் கொடுத்தால் என்ன சார் செய்வாங்க, கொஞ்சம் சொல்லுங்களேன். உப்புமா பதவி சத்துணவு மைய வேலைக்கே, தன்னோட அல்லக்கைகளின் சிபாரிசுகளை ஏற்காமல், நியாயமான முறையில் வேலை கொடுத்த மாவட்ட ஆட்சியரையே சும்மா வீட்டில் ஒக்கார வச்ச பெருமை மிக ஒங்க குலதெய்வம் என்ன செய்யுமுன்னு, ஒங்க திரு கையாள கொஞ்சம் எழுதுங்களேன், நாங்களும் ஒங்களையும், ஒங்க குலதேவதையும் பத்தி தெரிஞ்சிகுறோம். ஒங்களோட கருத்துக்கு ஆவலோட இருக்கோம் திரு பன்னாடை....
மீகண்ணன், என்னவோ தமிழை மு.க மட்டும்தான் தலையில் தூக்கி வைத்து வளர்த்தது போல் கதை விடுகிறீர்கள். தனித்தமிழ்நாடு, பார்ப்பனீய எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தமிழ் வளர்ப்பு இந்த போலி கொள்கைகள் இப்போது போணியாகாது. மு.க வை எதோ தெய்வக்குழந்தை மாதிரி நீங்கள் வேண்டுமானால் தாலாட்டு பாடுங்கள். கடந்த ஐம்பது வருடங்களாக அவரை பற்றி படித்திருக்கிறோம் பார்த்தும் ,அவருடைய ஆட்சியின் அலங்கோலங்களை அனுபவித்தும் இருக்கிறோம். உங்களை போல அவரிடம் பலன் பெற்றவர்கள் மட்டுமே அவருக்கு ஜால்ரா அடிப்பார்கள். மற்றபடி பதவிக்காக அவரை துதி பாடும் ஒரு கூட்டம். அவர் ஒன்றும் தவப்புதல்வனும் அல்ல அவதாரமும் அல்ல. அவர் இன்னும் நூறு ஆண்டுகள் கூட வாழட்டும். ஆனால் தமிழர்களை பிழைத்துபோகவிடுங்கள்.தி.மு.க.வை கலைத்துவிடுங்கள்.ப்ளீஸ்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.