"சிவகிரி ஜமீன் சொத்துக்கு நாங்கள் தான் வாரிசுகள்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : ""ஜெகநாதன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, சிவகிரி ஜமீன் வாரிசு சொத்துகளுக்கு நான் மட்டும் தான் வாரிசு என, உரிமை கொண்டாடி வருகிறார். ஆனால், நாங்கள் தான் உண்மையான வாரிசுகள்,'' என, ராமலிங்க வரகுணராம பாண்டியனின் வாரிசான செல்வராஜ் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: சிவகிரி ஜமீன் சொத்துகள் தொடர்பாக, அதன் வாரிசுகள் என, சிலர், சிவில் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்துள்ளனர். நான் மட்டும் தான் ஜமீன் வாரிசு என, ஜெகநாதன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, சென்னையில் உள்ள பல்வேறு சொத்துகளை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், 180க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் தான், சிவகிரி ஜமீன் சொத்துகளுக்கு உண்மையான வாரிசுகள். மேலும், 18ம் நூற்றாண்டில் உருவான சிவகிரி ஜமீன், வன்னியர் குலத்தை சேர்ந்தது. கடந்த 1914ம் ஆண்டு, அப்போதைய ஜமீன் சொத்து மதிப்பு, 3,89,504 ரூபாய். தற்போது, இதன் மதிப்பு, பல லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சென்னையில் பள்ளிகரணையில் 66 ஏக்கர், எக்ஸ்பிரஸ் அவென்யூ, செம்மொழி பூங்கா என, 104 சொத்துகள் உள்ளன. ஜமீன் சொத்துகள் மற்றும் முதலீடுகள், சுவிட்சர்லாந்து வங்கியில் இருப்பதாகவும், ஜெகநாதன் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையில் ஜமீன் சொத்துகள், சுவிட்சர்லாந்தில் இல்லை. பாரத ஸ்டேட் வங்கியில் (அப்போது சென்னை வங்கி) தங்கம், வைர நகைகள் என, 186 பொருட்கள் உள்ளன. சிவகிரி ஜமீன் வாரிசுகள் எனக் கூறி, பலர் சொத்துக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் போலியானவர்கள். நாங்கள் மட்டுமே உண்மையான வாரிசுகள். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-ஜூலை-201207:19:05 IST Report Abuse
ஆரூர் ரங மக்கள் வரிப்பணம்தான் ஜமீன்களின் வருமானம். சொந்த உழைப்புப் பணம் என்பது மிகக் குறைவே.அவை ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசுக்கே சொந்தம்,.மிச்சம் மீதியும், ராஜமானிய ஒழிப்புக்குப்பின் தனியாருக்கு சம்மந்தமில்லாதவை ஆகிவிட்டன. பெரும்பாலான ஜமீன்தார்கள் பிரிடிஷாரின் ஏஜென்ட்டுகள் அல்லது முழுநேர ஐந்தாம் படையினர். இதுபோன்ற வழக்குகளை அரசு தடை செய்யவேண்டும். இதுபோன்ற வழக்கு போடுபவர்களை அரசு கடுமையான சட்டங்களின் மூலம் தண்டித்தல் நலம்
Rate this:
Share this comment
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
23-ஜூலை-201209:52:42 IST Report Abuse
B Sivanesanஇந்த கருத்துக்கு ஏதாவது ஆதாரம் உண்டா..இப்படி சொல்லி அரசாங்கம் எடுத்த கோவில்களும் அதன் சொத்துக்களும் எங்கே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்