Training for Srilanka Airforce soldiers in Kolkatta | இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி

Updated : ஜூலை 25, 2012 | Added : ஜூலை 23, 2012 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி :மாற்று உடையில் சென்னை வழியாக சென்றனர்,Train

சென்னை:இலங்கை விமானப் படையினர் நான்கு பேர், பயிற்சிக்காக, மாற்று உடையில், சென்னை வழியாக, கோல்கட்டா சென்றனர்.

இலங்கை விமானப் படையினருக்கு, தாம்பரம் விமானப் படை பயிற்சி மையத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள், கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பின் அவர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர். குன்னூரில், இலங்கை படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கும், கடும் எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, மாற்று உடையில், சென்னை வழியாக, இலங்கை விமானப் படை வீரர்கள் நான்கு பேர், பயிற்சிக்காக, கோல்கட்டா சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப் படையைச் சேர்ந்த பிரபு சையான், ஜெகத்சந்திர குமாரா, சரகசமேரா, பின்னாகுடேகா நிலந்தா ஆகியோர், நேற்று முன்தினம் அதிகாலை, 4.30 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம், கொழும்புவில் இருந்து சென்னை வந்தனர்.

சென்னையில் இருந்து, 6.30 மணிக்கு, கோல்கட்டா சென்றனர். இவர்களுக்கு, பரக்பூரில், "இன்ஜின் பிட்டிங்' சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அடுத்த சில மாதங்களுக்கு, இவர்கள் பரக்பூரில் தங்கியிருப்பர் என்றும் கூறப்படுகிறது. இலங்கை விமானப் படையினரின் பயணங்களை, சென்னை விமான நிலையத்தில், கியூ பிரிவு போலீசாரும், உளவுத் துறையினரும், தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இதனால், மாற்று உடையில், இலங்கை படையினர் சென்றுள்ளனர். கோல்கட்டா சென்ற பிறகு தான், தமிழக உளவுப் பிரிவு போலீசாருக்கே, இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nandhakumar - london ,யுனைடெட் கிங்டம்
25-ஜூலை-201211:58:26 IST Report Abuse
nandhakumar எவன் குடி கெட்டால் என்ன ? மகன் அமைச்சர் . மகள் அமைச்சர் . மற்றொருவன் துணை முதலமைச்சர் ..யார் வந்தால் என்ன ? யார் போனால் என்ன ?? யாராவது கேள்வி கேட்டால் சம்பந்தம் இல்லாமல் சமாளிப்பது ????அடுத்த நாள் ரூம் போட்டு யோசித்து விட்டு உளறுவது கேட்டால் தமிழ் தமிழ் ?? ...........
Rate this:
Share this comment
Cancel
Siva kumar - Tripoli,லிபியா
24-ஜூலை-201217:40:56 IST Report Abuse
Siva kumar எங்கள் கொள்கைக்கு எதிராக மத்திய அரசு நடக்குமானால் அப்பொழுதே மத்திய அரசில் இருந்து விலகுவோம் ந்னு சொன்ன டெசோ மாநாட்டுத் தலைவர் கட்டு மரம் தூங்கிவிட்டாரா இல்லை வழக்கம் போல் இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி கொடுப்பதை பற்றியும் டெசோ மாநாட்டில் விவாதிக்க படும் (குறிப்பு: ப.சி. அனுமதித்தால் மட்டும், ஏனெனில் 2G பணம் முக்கியம் அமைசரே) என கூறி இலங்கை படைக்கு பயிற்சி கொடுத்து தமிழர்களை கொள்வது தான் அவரின் கொள்கையா?
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
24-ஜூலை-201217:34:34 IST Report Abuse
Bhagat Singh Dasan வாசக அன்பர்களே, இதற்க்கு முழு காரணமாக நான் நினைப்பது நம்மிடையே உள்ள ஒற்றுமையின்மை. மும்பையில் கசாப் நடத்திய கொலைவெறி தாக்குதலால் நமது கிரிகெட் டீம் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது அதன் பின் பாகிஸ்தானுடன் இந்திய மண்ணில் விளையாடுவதில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படி என்றால் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த இலங்கையுடன் கிரிகெட் விளையாடலாமா? வடக்கிற்கு ஒரு நியாயம் தெற்கிற்கு ஒரு நியாயமா? கிரிகெட்டும் விளையாடுகிறான் அதில் ஒரு தமிழனும் விளையாடுகிறான்.
Rate this:
Share this comment
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
24-ஜூலை-201213:16:40 IST Report Abuse
paavapattajanam தீவிரவாதம் வேண்டும் - கேடு கெட்ட அரசியல் வாதிகள் கூண்டோடு அழியும் வரை - அப்பாவி மக்கள் பாதிக்கபடாமல் - அகிரம அரசியல் நடத்தும் - அகிரம குடும்பங்கள் வேறு கொட்ட இல்லாமல் அழிக்கப்படவேண்டும் - ரோவ்திரம் பழகு - ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
eezhaTamizh - chennai,இந்தியா
24-ஜூலை-201211:20:56 IST Report Abuse
eezhaTamizh எனக்கு ஒன்னு மட்டும் சொல்லுங்க மக்களே , இலங்கையை சுற்றி அண்டை நாடுகள் இந்தியாவை தவிற வேறு எதுவும் இல்லை. அப்படி என்றால் , மத்திய அரசு நமக்கு தெளிவு படுத்த வேண்டியது , இந்த பயிற்சி இந்தியாவிற்கு எதிராக சண்டை போடவா ? அல்லது இலங்கையில் உள்ள தமிழர்களை கொன்று குவிக்கவா?
Rate this:
Share this comment
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூலை-201216:38:25 IST Report Abuse
Jeyaseelanடெசோ மாநாட்டிற்கு பிறகு தனி ஈழம் உதயமாகின்ற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தனி ஈழம் கிடைத்த பின் இலங்கைக்கு தமிழர்கள் நிறைந்த ஈழம் ஒரு அண்டை நாடுதானே, அதனிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காக கூட பயிற்சி எடுக்கலாமே?...
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
24-ஜூலை-201210:54:07 IST Report Abuse
manoharan இந்தியாவில் பயிற்சி கொடுக்காவிட்டால் சீனா வரவேற்று கொடுக்கும். நமக்கு அந்த வம்பு தேவையா?
Rate this:
Share this comment
Cancel
sathis_kk - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-201209:28:50 IST Report Abuse
sathis_kk இதை விட தமிழர்களை வேறு எப்படியும் கேவல படுத்த முடியாது. இது தமிழர்களின் மீதான நேரடி தாக்குதல். தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மட்டும் அல்ல வேறு எந்த மாநிலத்தவரும் மதிப்பது கிடையாது. பாகிஸ்தானிய ரானுவதிக்கு தமிழகத்தில் பயிற்சி கொடுத்தால் ஏற்று கொள்வார்களா? இந்தியாவின் மதிப்பு உலக அளவில் தேய்ந்து வருகிறது என்று சொன்னால் அது ஒரு அப்பட்டமான பொய்யாகும்,, மதிப்பு என்று ஒன்று இருந்தால் தானே தேய்வதற்கு ? அதற்க்கு காரணம் சொந்த மக்களை உதாசீன படுத்துவது. எந்த ஒரு உலக நாடாவது தன்னை இந்தியாவின் நண்பன் என்று சொன்னதுண்டா, அல்லது நம்மிடம் நட்பு பாராட்டியது உண்டா? சீனா நமக்கு ஆகாது... பங்களாதேஷ் நம்மை எதிரியாக பார்க்கிறான்... பாகிஸ்தான் நமக்கு ஜென்ம விரோதி,... gulf நாடுகள் நம்மை அடிமைகளாக பார்கிறான்... இந்தோ-சீனா நாடுகள் நம்மை நம்ப தயங்குகின்றன... இலங்கை நம்மிடம் பலனை அனுபவித்து விசுவாசத்தை வேறிடத்தில் காட்டுகிறது.... ரஷ்யா நம்மை கையாலாகாதவனாக ஒதுக்குகிறது... அமெரிக்க நம் முதுகில் குத்த காத்திருக்கிறது... மொத்தத்தில் நாம் தனிமை படுத்தபட்டிருகிறோம். காரணம் நம்முடைய முடமான வெளியுறவு கொள்கை. ஈழ தமிழர்களை கொன்று குவித்து, மேலும் அவர்களை ஒடுக்க கங்கணம் கட்டி அலைகிறது இந்தியா.. அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கும்
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
24-ஜூலை-201212:47:39 IST Report Abuse
A R Parthasarathyநம்ம ஒருத்தன் கூட மதிக்கல ன்னு சிங்கபுரிலே இருக்கிற உங்களுக்கு தெரிகிறது. ஆனால் இந்தியாவிலேயே இருக்கிற மக்களுக்கு தெரியமாட்டேன் என்கிறது. நம்ம மக்கள் மட்டும் இதை புரிஞ்சுகிட்டு ஒட்டு போட்டாங்கன்நா இந்த காங்கிரஸ் கட்சியும் ஒழியும். நம்முடைய வெளியுறவு கொள்கையிலும் மாற்றம் வரும். உலகநாடுகள் மத்தியில் நமக்கென தனி செல்வாக்கு வளரும். மக்கள் தான் சிந்திக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூலை-201216:32:19 IST Report Abuse
Jeyaseelanவெளியுறவு கொள்கையில் எந்த மாற்றமும் தேவை இல்லை, கொஞ்ச காலமாக முதுகெலும்பு இல்லாத திராணியற்ற தலைவர்களால் நமது வெளி உறவு கொள்கைகள் மீறப்பட்டுள்ளன. திராணி உள்ள தலைவர்கள் வர வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Jayakumar Subramaniyan - chennai,இந்தியா
24-ஜூலை-201209:25:59 IST Report Abuse
Jayakumar Subramaniyan மத்தியில் காங்கிரஸ் இருந்தால் இப்படித்தான் நடக்கும் தமிழனுக்கு ஆப்புமேல ஆப்பு
Rate this:
Share this comment
Cancel
hindustani - beijing,சீனா
24-ஜூலை-201208:49:38 IST Report Abuse
hindustani மற்றொரு இரண்டு ஆண்டுகள் (2014) காத்திருங்கள், ஒரு நிரந்தர தீர்வு இருக்கும்.,தமிழ் மக்களுக்கு அனைத்து பிரச்சனையும் நல்ல தீர்வு கிடைக்கும்.(இலங்கை தமிழர்கள், முள்ளபெரியர் அண்ட் மல்லுஸ் )
Rate this:
Share this comment
Cancel
I Love India - Bangalore,இந்தியா
24-ஜூலை-201208:15:01 IST Report Abuse
I Love India இந்திய அரசு இலங்கை க்கு விழுந்து விழுந்து செய்யும் உதவிகள் தான் புரியவில்லை. அவர்கள் இந்திய மீனவர்களை ஒரு பொருட்டாய் கூட மதிப்பதில்லை. (தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தானே). இலங்கை சொல்வது போல் மீனவர்கள் எல்லை தாண்டி பொய் மீன் பிடிக்கீரார்கள் என்றால் இந்திய கடற்படை கொண்டு மீனவர்களுக்கு அரண் அமைக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்கப்படும் பொழுது மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க படும் என்று ஒரு வாக்கியத்தோடு முடித்திக்கொண்டு அதோடு மறந்து விடுகிறார்கள். மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களை முதலில் இந்தியர்களை பார்பதில்லை, தமிழக வாக்காளர்களால் காங்கிரஸ் க்கு ஒரு நன்மையையும் கிடைக்க போவதில்லை என்று அறிந்ததனால், நடவடிக்கைகள் வீண் என்று நினைத்து விட்டனரா தமிழக அரசியல் தலை வர்கள் தமிழர்களை இந்திய தேசியத்திலும் கலக்க விடவில்லை, வெளி நாட்டினர் தாக்கினல்லும் தமிழர்களை இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காக்கவும் திராணி இல்லை. இந்திய அரசாங்கமே முதலில் உன் நாட்டு குடி மகனை முதலில் பாதுகாப்பு கொடு. அப்புறம் இலங்கை காரனுக்கு பயிற்சி கொடு. வீணாக ஒரு சமுதாயத்தை தவறான வழியில் திருப்ப முயற்சிக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
24-ஜூலை-201212:54:50 IST Report Abuse
A R Parthasarathyஇது மிக கேவலமான செயல். இலங்கை சீனவிருக்கு தன்னுடைய மண்ணிலே இடம் கொடுத்திருகிறது. சீனா இந்தியாவை பகையாளியாக பார்க்கிறது. அப்படி இருக்கும்போது, இலங்கை விமானபடையினருக்கோ, அல்லது இராணுவத்தினருக்கோ பயிற்சி கொடுக்க இந்தியா முன்வருவது தன தலையில் தானே கொள்ளிவைத்து கொள்வது போல. இதை இந்திய அரசாங்கம் உணரவேண்டும். தமிழர்களுக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை